Published:Updated:

சேலம்: "பாலியல் சீண்டல்; வீடியோ எடுத்து மிரட்டுகின்றனர்!" - சிறை வார்டன்கள்மீது இளம்பெண் புகார்

சேலம்
News
சேலம்

சேலம் மத்திய சிறைச்சாலையில் வார்டன்களாக இருக்கக்கூடியவர்கள் என்னிடம் தவறாகப் பழகி, அதை வீடியோ எடுத்து மிரட்டியதாக, பெண் ஒருவர் போலீஸாரிடம் புகாரளித்திருக்கிறார்.

சேலம்: "பாலியல் சீண்டல்; வீடியோ எடுத்து மிரட்டுகின்றனர்!" - சிறை வார்டன்கள்மீது இளம்பெண் புகார்

சேலம் மத்திய சிறைச்சாலையில் வார்டன்களாக இருக்கக்கூடியவர்கள் என்னிடம் தவறாகப் பழகி, அதை வீடியோ எடுத்து மிரட்டியதாக, பெண் ஒருவர் போலீஸாரிடம் புகாரளித்திருக்கிறார்.

Published:Updated:
சேலம்
News
சேலம்

சேலம், அழகாபுரத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் பரபர புகார் ஒன்றை அளித்திருக்கிறார். அதில், ``சேலம் மத்திய சிறைச்சாலையில் வார்டன்களாக இருக்கக்கூடிய அருண், சிவசங்கர் ஆகியோர் என்னிடம் தவறாகப் பழகி, அதை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டனர். அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனத் குறிப்பிட்டிருந்தார். அந்தப் பெண்ணின் புகாரைப் பெற்றுக்கொண்ட அஸ்தம்பட்டி காவல் உதவி ஆணையர் சரவணகுமார், குற்றம்சாட்டப்பட்ட சிறை வார்டன்கள் இருவரையும் அழைத்து விசாரணை மேற்கொண்டார். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

சேலம் மத்திய சிறை
சேலம் மத்திய சிறை

போலீஸ் விசாரணையின்போது சிறை வார்டன்கள் இருவரும், ``சம்பந்தப்பட்ட இளம்பெண் ஆறு மாதங்களுக்கு முன்பு சிறை வாசலின் முன்பு நின்றுகொண்டிருந்தார். நாங்கள் பணி முடிந்து செல்லும்போது, அந்தப் பெண்ணை அடிக்கடி அதே பகுதியில் பார்த்தோம். அப்படி ஒருநாள் அந்தப் பெண்ணிடம் `ஏன் இங்கு நிற்கிறீர்கள்?' என்று கேட்டபோது தன்னுடைய நண்பர் வருவதாகக் கூறினார்.

பின்னர் அந்தப் பெண் மறுநாளும் அதே இடத்தில் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்த நாங்கள், `உங்க ஃப்ரெண்டா இருக்கலாமா?' என்று கேட்டோம். அதற்கு அந்தப் பெண்ணும் சம்மதித்தார். பின்னர் அவரிடம் நெருங்கிப் பழகி, ஒருநாள் அவரை நாங்கள் தங்கியிருக்கும் பழைய சிறை வார்டன்கள் குடியிருப்புக்கு அழைத்துச் சென்றோம். அங்கு அந்தப் பெண்ணுடன் இரண்டு பேரும் தனிமையில் இருந்தோம்'' எனத் தெரிவித்திருக்கின்றனர். போலீஸார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக அஸ்தம்பட்டி காவல் உதவி ஆணையர் சரவணகுமாரிடம் பேசியபோது, "கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு செஞ்சி கிளைச் சிறையில் இதே போன்று ஒரு சம்பவம் அரங்கேறியது. ஆண் வார்டன்கள் சிறைக்குள் இருக்கும் பெண் கைதிகளிடம் தவறாக நடந்துகொண்டனர். அந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட வார்டன்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

உதவி ஆணையர் சரவணக்குமார்
உதவி ஆணையர் சரவணக்குமார்

அந்த வகையில், இந்தச் சம்பவத்திலும், சம்பந்தப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், அரசு அலுவலர்கள், அரசாங்கத்துக்குச் சொந்தமான இடத்துக்கு ஒரு பெண்ணை தனிமையில் அழைத்துச் சென்று, தவறாக நடந்துகொண்டது தொடர்பாக வழக்கு பதிவுசெய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது" என்றார்.

தமிழ்ச்செல்வன்
தமிழ்ச்செல்வன்
சேலம் மத்திய சிறை எஸ்.பி

மேலும் இது தொடர்பாக சேலம் மத்திய சிறைச்சாலை எஸ்.பி தமிழ்ச்செல்வன், "புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டுவருகிறோம். சிறை வார்டன்கள் குடியிருப்புக்கு ஒரு பெண்ணைத் தனிமையில் அழைத்துச் சென்றது தொடர்பாக, குடியிருப்பில் பாதுகாப்புப்பணியில் இருந்த காவலர்களிடம் விசாரணை மேற்கொண்டுவருகிறோம்" என்றார்.