Published:Updated:

உடைக்கப்பட்ட பூட்டு... டி.ஆர்.பாலு வீட்டில் கொள்ளை முயற்சி! - நடந்தது என்ன?

டி.ஆர்.பாலு வீடு

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகேயுள்ள தளிக்கோட்டை கிராமத்தில், முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலுவுக்குச் சொந்தமான வீடு உள்ளது.

உடைக்கப்பட்ட பூட்டு... டி.ஆர்.பாலு வீட்டில் கொள்ளை முயற்சி! - நடந்தது என்ன?

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகேயுள்ள தளிக்கோட்டை கிராமத்தில், முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலுவுக்குச் சொந்தமான வீடு உள்ளது.

Published:Updated:
டி.ஆர்.பாலு வீடு

தி.மு.க பொருளாளரும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலுவின் பூர்வீக கிராமத்திலுள்ள வீட்டில் கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

மோப்ப நாய்
மோப்ப நாய்

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகேயுள்ள தளிக்கோட்டை கிராமத்தில், முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க பொருளாளருமான டி.ஆர்.பாலுவுக்குச் சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டின் நிலைக்கதவு பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக, இப்பகுதி மக்களுக்கு நேற்று மதியம் தெரியவந்திருக்கிறது. இது குறித்து உடனடியாக, காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த மன்னார்குடி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள். இந்தச் சம்பவம் தொடர்பாகப் பேசும் தளிக்கோட்டை கிராமவாசிகள், ``இந்த வீடு பெரும்பாலும் பூட்டித்தான் கிடக்கும். எப்பயாவதுதான் டி.ஆர்.பாலு இங்கு வந்து தங்குவார். மன்னார்குடியில டி.ஆர்.பாலுவுக்கு ஒரு கெஸ்ட் ஹவுஸ் இருக்குறதுனால இங்கே அதிகம் வர மாட்டார். இந்த நிலையிலதான் முந்தா நாள் இரவு, இல்லைன்னா நேத்து விடியகாலையில யாரோ சிலர், இந்த வீட்டோட நிலைக்கதவுப் பூட்டை உடைச்சு உள்ளே கொள்ளையடிக்க முயற்சி பண்ணியிருக்காங்க.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பூட்டு உடைக்கப்பட்ட விஷயம், நேத்து காலையில பதினொரு மணிக்குத்தான் தெரு மக்களுக்கு தெரியவந்துச்சு. உடனே டி.ஆ.ர்.பாலுவுக்கு மிகவும் நெருக்கமான ஆலங்கோட்டை மதிக்கு தகவல் சொல்லியிருக்காங்க. அவர் காவல் நிலையத்துல புகார் கொடுத்திருக்கார். நேற்று மதியம் கைரேகை நிபுணர்கள் வந்து ஆய்வு பண்ணினாங்க. அதுக்குப் பிறகு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. ஆனால் இந்த வீட்டுல இருந்து எந்த ஒரு பொருளும் திருட்டுப் போகலைனு காவல்துறையினர் தெரிவிக்கிறாங்க” என்கிறார்கள்.

இது குறித்துப் பேசும் மன்னார்குடி காவல்துறையினர், ``பூட்டு உடைக்கப்பட்டுருக்குனுதான் புகார்ல தெரிவிச்சிருந்தாங்க. இங்கே யாரும் தங்காததுனால, எந்தப் பொருளுமே இந்த வீட்டுல கிடையாது. ஒரே ஒரு கட்டில் மட்டும்தான் இங்கே இருக்கு. இந்த வீட்டுக்குப் பக்கத்துல இருக்குற வீட்டோட பூட்டும் உடைக்கப்பட்டிருக்கு. அந்த வீட்டோட உரிமையாளர்கள் அமெரிக்காவுல இருக்காங்க.

டி.ஆர்.பாலு வீடு
டி.ஆர்.பாலு வீடு

அங்கேயும் எந்தப் பொருளும் திருட்டுப்போகலை’ என தெரிவிக்கிறார்கள். ஆனால் கைரேகை நிபுணர் தீவிர ஆய்வு மேற்கொண்டதாலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, புலன் விசாரணை நடைபெற்றதாலும், இந்தச் சம்பவம் மன்னார்குடிப் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக. டி.ஆர்.பாலுவின் மகனும், மன்னார்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டி,ஆர்.பி.ராஜாவிடம் நாம் பேசியபோது, ``இந்த வீட்டுல ஏதாவது கிடைக்கும்னு நினைச்சு, யாரோ சிலர் பூட்டை உடைச்சி உள்ளார போயிருக்காங்க. ஆனா, இங்கே எந்தப் பொருளுமே கிடையாது’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism