Published:Updated:

`மூன்று வழக்குகளில் கைதான பெண், போலீஸ் ஆனது எப்படி?' -கதிகலங்கிய தேனி காவல்துறை

போலீஸ்
போலீஸ் ( மாதிரிப் படம் )

மூன்று வழக்குகளில் கைதான ஒரு நபர், போலீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று, பயிற்சியில் சேர்ந்த சம்பவம், தமிழ்நாடு காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் நாராயணதேவன்பட்டியைச் சேர்ந்தவர் பிரேமா. மக்கள் அதிகாரம் அமைப்பில் உள்ள இவர், தேனி மாவட்டத்தில் நடைபெறும் மக்கள் அதிகார அமைப்பினரின் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் தொடர்ச்சியாக கலந்துகொண்டுள்ளார். அதற்காக சில இடங்களில் கைதும் செய்யப்பட்டுள்ளார்.

`2018-ம் ஆண்டு நீதிபதியிடம் பாராட்டு.. 2020-ம் ஆண்டுச் சிறை..!’ - கோவைப் பெண் போலீஸ் கைது பின்னணி

இந்த நிலையில், காவல்துறை தேர்வில் கலந்துகொண்டு தேர்ச்சிபெற்று கடந்த மாதம் காவல்துறை பயிற்சியிலும் சேர்ந்துவிட்டார் பிரேமா. இதை தாமதமாகக் கண்டுபிடித்த காவல்துறையினர், மேலிடத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அதையடுத்து, பிரேமா நிரந்தப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

`ஜூன் மாதமும் ஒற்றை யானை தாக்குதலும்!’ -கலக்கத்தில் தேனி, தேவாரம் மக்கள்

இதுதொடர்பாக நம்மிடையே பேசிய தேனி மாவட்ட எஸ்.பி சாய் சரண் தேஜஸ்வி, ``அவரின் உண்மையான பெயர் பிரேமா. அவர் மீது மூன்று வழக்குகள் உள்ளன. கைதாகும்போது, கலைவாணி எனப் போலியான பெயர் மற்றும் போலியான முகவரியைக் கொடுத்துள்ளார். விசாரணையில், அவரது குடும்ப உறுப்பினர்கள் மக்கள் அதிகாரம் அமைப்பில் இருப்பதால், தானும் போராட்டங்களுக்குச் சென்றதாக தெரிவித்தார். கடந்த மாதம்தான் அவர் பயிற்சியில் சேர்ந்திருந்தார். தற்போது நிரந்தப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்” என்றார்.

``காவல்துறை தேர்வில் ஒருவர் தேர்வாகும்போது, அவரைப் பற்றிய முழுத் தகவல்களையும் விசாரித்து கொடுக்கப்படும் அறிக்கையின் அடிப்படையில்தான் அந்த நபருக்கு காவல்துறையில் பணி வழங்கப்படும். பின்னர், பயிற்சி அளிக்கப்படும். பிரேமா விவகாரத்தில், அவரைப்பற்றிய தகவல்களை முறையாக விசாரிக்காமல் விட்டுவிட்டனர்" என்கின்றனர் தேனி மாவட்ட போலீஸார்.

இந்த விவகாரம் தொடர்பாக, பிரேமாவிடம் பேச முயன்றோம். அவரிடம் பேச முடியாதால், மக்கள் அதிகாரம் அமைப்பின் தேனி மாவட்ட நிர்வாகி ஒருவரிடம் பேசினோம்.

`அதிகாலையில் பிரசவ வலி; நடுரோட்டில் தவித்த பெண்!’ - ஆம்புலன்ஸாக மாறிய போலீஸ் வாகனம்

"பிரேமா என்பவர் இயக்கத்தில் பெரிய அளவில் ஈடுபட்டதில்லை. குறிப்பாக, கடந்த இரண்டு வருடங்களாக அவர் இயக்க நிகழ்வுகளில் கலந்துகொண்டதில்லை. அவருடைய குடும்ப சூழல் காரணமாக, கடுமையா உழைத்து, தற்போது காவல்துறையில் சேர்ந்தார். சிலரின் தூண்டுதலின் பேரில், அவருடைய பணி பறிக்கப்பட்டிருக்கிறது. அவர் ஒரு நக்சலைட் போன்று சித்தரிக்கப்படுகிறார். இது வேதனையான விஷயம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு