Published:Updated:

​தேனி: ஆன்​மி​​​​கச் சுற்றுலா​ அழைத்துச் செல்வதாகக் கூறி மோசடி - ​நடந்தது என்ன?

மோசடிக்கு பயன்படுத்தியவை

​சென்னை​யில்​ ​ஷேத்ராம்​ ​டூர்ஸ் ந​டத்திவருவதாக அறிமுகப்படுத்திக்கொண்டு பேசியுள்ளனர். குறைந்த கட்டணத்தில் ​​கேத்தரிநாத், பத்ரிநாத் போன்ற இடங்களுக்கு ​அழைத்துச் செல்கிறோம். ஒரு குழுவுக்கு 72 பேர் தேவை. ​நபர் ஒருவருக்கு முன்பணமாக மூன்றாயிரம் செலுத்த வேண்டும் என​க்​ கூறியுள்ள​ன​ர்.

​தேனி: ஆன்​மி​​​​கச் சுற்றுலா​ அழைத்துச் செல்வதாகக் கூறி மோசடி - ​நடந்தது என்ன?

​சென்னை​யில்​ ​ஷேத்ராம்​ ​டூர்ஸ் ந​டத்திவருவதாக அறிமுகப்படுத்திக்கொண்டு பேசியுள்ளனர். குறைந்த கட்டணத்தில் ​​கேத்தரிநாத், பத்ரிநாத் போன்ற இடங்களுக்கு ​அழைத்துச் செல்கிறோம். ஒரு குழுவுக்கு 72 பேர் தேவை. ​நபர் ஒருவருக்கு முன்பணமாக மூன்றாயிரம் செலுத்த வேண்டும் என​க்​ கூறியுள்ள​ன​ர்.

Published:Updated:
மோசடிக்கு பயன்படுத்தியவை

ஆன்லைன் வாயிலாக பல்வேறு மோசடிகள் நடந்துவரும் நிலையில், ஆன்மிகச் சுற்றுலா செல்ல விரும்பும் முதியவர்களைக் குறிவைத்தும் மோசடிகள் நடக்கத் தொடங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சைபர் க்ரைம்
சைபர் க்ரைம்

​தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பாப்பம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் பாரிஜாதம்(57)​. இவருடைய பேஸ்புக் பக்கத்தில் ஆன்மிகச் சுற்றுலா தொடர்பான விளம்பரம் ஒன்றைப் பார்த்துள்ளார். அதில்​ வெளிமாநிலங்களுக்கு ஆ​ன்​மி​​கச் சுற்றுலா அழைத்துச்செல்லப்படும் எனக் குறிப்பிட்டிருப்பதைப் பார்த்து அந்த விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்த போன் நம்பருக்குத் தொடர்பு கொண்டுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அவர்கள் சென்னையில் ஷேத்ராம் டூர்ஸ் நடத்திவருவதாக அறிமுகப்படுத்திக்கொண்டு பேசியுள்ளனர். மேலும், குறைந்த கட்டணத்தில் கேத்தரிநாத், பத்ரிநாத் போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்கிறோம். அதற்கு ஒரு குழுவுக்கு 72 பேர் தேவை. எனவே நீங்கள் வசிக்கும் பகுதியில் ஆன்மிகச் சுற்றுலா செல்ல விரும்புவோரையும் இதில் சேருங்கள் எனவும், இரயில் பயண ஏற்பாட்டுக்கு நபர் ஒருவருக்கு முன்பணமாக மூன்றாயிரம் செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

வெங்கட்ராமன்
வெங்கட்ராமன்

​இதனைத் தொடர்ந்து பாரிஜாதம், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தன் உறவினர்கள், வீட்டருகே வசிப்பவர்கள் என மொத்தம் 109 நபர்களை ஆன்மிகச் சுற்றுலாவிற்குத் தயார் செய்துள்ளனர். அவர்களில் 90 பேரிடம் முன்பணமாக மொத்தம் 4,00,800 ரூபாயை வசூலித்து இரு தவணைகளாக வங்கி மூலம் செலுத்தியுள்ளார்.

​பின்னர் சம்பந்தப்பட்ட டூர் ரயில் டிக்கெட் பதிவு செய்யுமாறு கேட்டபோது மீதம் உள்ள 19 நண்பர்களுக்காக முன்பதிவுப் பணத்தையும் செலுத்த வேண்டும் எனக் கட்டாயப்படுத்தியுள்ளனர். அதற்கு பாரிஜாதம் அனைவரிடமும் கட்டணம் வசூல் செய்யத் தாமதமாகும் எனக் கூறியுள்ளார். இதையடுத்து பாரிஜாதத்தின் அழைப்பை அவர்கள் ஏற்கவில்லை, பிறகு போனும் ஆப் செய்யப்பட்டுள்ளது. அப்போதுதான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாரிஜாதம், தேனி சைபர் க்ரைம் போலீஸாரிடம் புகார் அளித்தார்.

ஹேமமாலினி
ஹேமமாலினி

அதனடிப்படையில் விசாரணையைத் தொடங்கிய சைபர் க்ரைம் போலீஸார் சென்னை சென்று அங்கு தங்கியிருந்த வெங்கட்ராமன்(60) மற்றும் அவரின் உதவியாளர் ஹேமமாலினி (49) ஆகிய இருவரையும் தேனி அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டர். அதில் மும்பையைப் பூர்வீகமாகக் கொண்ட இருவரும் ஆன்மிகச் சுற்றுலா என்ற பெயரில் பலரிடம் மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

கைது
கைது

அவர்களிடமிருந்து 4 லட்சம் ரூபாய் பணம், 10 ஏ.டி.எம் கார்டுகள், 6 செல்போன்களைக் கைப்பற்றிய போலீஸார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.