செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அருகே செங்காடு பகுதியில் நிலத்தகராறு தொடர்பாக இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக திருப்போரூர் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ-வான இதயவர்மன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீண்டகாலமாக ரியல் எஸ்டேட் தொழிலில் கோலோச்சிவரும் இரு வேறு அரசியல்-அதிகாரப் புள்ளிகளின் தொழில் போட்டியே மேற்கண்ட மோதலுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

தி.மு.க எம்.எல்.ஏ-வான இதயவர்மனின் தந்தை லட்சுமிபதி திருப்போரூர் அருகேயுள்ள செங்காடு கிராமத்தில் வசித்துவருகிறார். இதே பகுதியில் வசித்துவரும் ரியல் எஸ்டேட் அதிபர் ‘இமயம்’ குமாரின் குடும்பத்தினருக்கும், எம்.எல்.ஏ-வின் குடும்பத்தினருக்கும் நீண்டகாலமாக முன் விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

செங்காடு பகுதியில், செங்கோதி அம்மன் கோயிலுக்கு அருகிலுள்ள சுமார் 350 ஏக்கர் நிலத்தை குமார் சென்னையைச் சேர்ந்தவர்களுக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறார். அந்த நிலத்துக்குச் செல்வதற்காக, கோயில் அருகிலுள்ள நிலத்தை ஆக்கிரமித்து சாலை அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு எம்.எல்.ஏ தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதில்தான் மோதல் வெடித்தது. ‘இமயம்’ குமாருடன் இருந்த ரெளடிகள் லட்சுமிபதியையும், அவருடன் இருந்த குருநாதன் உள்ளிட்ட மூவரையும் அரிவாளால் வெட்டியுள்ளனர். பாதுகாப்புக்கு லட்சுமிபதி, தான் வைத்திருந்த துப்பாக்கியால் குமாரை நோக்கிச் சுட்டுள்ளார். சம்பவ இடத்துக்கு வந்த இதயவர்மனும் துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது. இரு தரப்பினரின் வாகனங்களும் தீவைத்துக் கொளுத்தப்பட்டன.

அந்த வழியாகச் சென்ற தையூரைச் சேர்ந்த கீரை வியாபாரி சீனிவாசன் என்பவர் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். காயமடைந்த லட்சுமிபதி மற்றும் குமார் உள்ளிட்ட பலரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

இந்த மோதலின் உள் விவகாரங்கள் அறிந்த சிலரிடம் பேசினோம். “சசிகலா தரப்பினருக்கு வேண்டப் பட்டவர் தாண்டவமூர்த்தி. அ.ம.மு.க பிரமுகர். சிறுதாவூர் பங்களா இவரது கட்டுப்பாட்டில்தான் இருப்பதாகக் கூறப்படுகிறது. மணல், ரியல் எஸ்டேட், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்டவற்றில் கோலோச்சுகிறார். திருப்போரூர் உள்ளிட்ட கிழக்குக் கடற்கரை சாலை ஏரியாக்களில் பல அரசு அதிகாரிகளைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள அளவுக்கு இவரது வளர்ச்சி அபரிமிதமானது. தாண்டவமூர்த்தியின் தம்பிதான் குமார். இருவரும் சேர்ந்து ‘இமயம் குரூப்ஸ்’ என்ற பெயரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருகிறார்கள். அதனாலேயே குமாரை ‘இமயம்’ குமார் என்று அழைக்கிறார்கள்.

இவர்களுக்கு எதிர் கோஷ்டியான இதயவர்மன் எம்.எல்.ஏ., தி.மு.க-வின் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளரான தா.மோ.அன்பரசனுக்கு நெருக்கமானவர். ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான ஒப்பந்தங்களில் கொடிகட்டிப் பறந்த இதயவர்மன், இந்தப் பகுதியில் சாதிய அரசியலிலும் வலுவாக இருக்கிறார்.

இப்படி அரசியல் அதிகாரத்தில் செல்வாக்கு கொண்ட இரு பெரும் புள்ளிகளின் தொழில் பகை நீண்டகாலமாக இந்தப் பகுதியில் நீடிக்கிறது. கிழக்குக் கடற்கரைச் சாலை முழுவதும் இருதரப்பிலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வளைத்துப்போட்டுள்ளனர். இந்தத் தொழிலில் யார் பெரியவன் என்பதைக் காட்டவே இந்த மோதல் தொடங்கி, அது துப்பாக்கிச்சூடு வரை சென்றிருக்கிறது. இது இந்த ஒரு சம்பவத்துடன் நிற்காது; சிலபல கொலைகள் வரை செல்லும் அபாயம் இருக்கிறது. இதை முன்கூட்டியே காவல்துறையினர் தடுத்து நிறுத்த வேண்டும்” என்றார்கள்.

இந்தச் சம்பவம் தொடர்பாக இரு தரப்பிலும் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த கீரை வியாபாரி சீனிவாசன் தரப்பிலிருந்தும் எம்.எல்.ஏ மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பினர்மீதும் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. ‘இமயம்’ குமார் மற்றும் இதயவர்மன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாகப் பேசிய செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி-யான கண்ணன், “இந்த மோதல் தொடர்பாக நான்கு டி.எஸ்.பி-க்கள் தலைமையிலான குழு தீவிர விசாரணையை மேற்கொண்டுவருகிறது. விரைவில் சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்படுவார்கள். எம்.எல்.ஏ தரப்பில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது. அதன் உரிமம் ஏற்கெனவே காலாவதி ஆகியுள்ளது. ஆனால், உரிமம் புதுப்பிக்கப்பட்டதாக எம்.எல்.ஏ தரப்பு கூறுகிறது. விசாரணை தொடர்கிறது” என்றார்.

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கீரை வியாபாரி சீனிவாசன் மருத்துவமனையிலிருந்து தப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், இவர் சாட்சி சொன்னால் எம்.எல்.ஏ தரப்புக்கு சட்டரீதியாக சிக்கல் வரும் என்பதால் அவர்கள் சீனிவாசனைக் கடத்தி வைத்திருப்பதாக எதிர்த்தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.

தி.மு.க கட்சியில் இது குறித்து எதுவும் அறிவிக்கவில்லை. அதேசமயம் தா.மோ.அன்பரசன், “கோயில் நிலத்தை ஆக்கிரமித்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்காமல், நியாயம் கேட்ட எம்.எல்.ஏ மீது பொய் வழக்கு போட்டு அவசரமாகக் கைது செய்தது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். அமைச்சர் ஜெயக்குமார், “தி.மு.க ஆட்சியில் நில ஆக்கிரமிப்பு அதிகம் இருந்தது. தற்போது துப்பாக்கி கலாசாரமும் தலை தூக்கியுள்ளது” என்று கூறியிருக்கிறார்.