Published:Updated:

ஆரணி: ஊராட்சி மன்றத் தலைவரின் அதிகாரம் பறிப்பு! - முறைகேடு புகாரால் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை

ஊராட்சி மன்றத் தலைவர் தரணி

முறைகேட்டில் ஈடுபட்டுவந்த இரும்பேடு ஊராட்சி மன்றத் தலைவரின் அதிகாரம் அதிரடியாகப் பறிக்கப்பட்டிருக்கிறது.

ஆரணி: ஊராட்சி மன்றத் தலைவரின் அதிகாரம் பறிப்பு! - முறைகேடு புகாரால் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை

முறைகேட்டில் ஈடுபட்டுவந்த இரும்பேடு ஊராட்சி மன்றத் தலைவரின் அதிகாரம் அதிரடியாகப் பறிக்கப்பட்டிருக்கிறது.

Published:Updated:
ஊராட்சி மன்றத் தலைவர் தரணி

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி ஒன்றியத்துக்குட்பட்ட இரும்பேடு ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் தரணி. இவர் கணவர் வெங்கட்ராமன், தி.மு.க-வைச் சேர்ந்தவர். இந்த ஊராட்சியில் அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்படவில்லை எனக் குற்றம்சாட்டி மக்கள் வீதிக்கு வந்து அடிக்கடி போராட்டமும் நடத்தியிருக்கிறார்கள். இந்த நிலையில், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு முறைகேடாக நிலங்களை வீட்டுமனைகளாக மாற்ற அப்ரூவல் வழங்கியதாகவும், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளிடம் பணம் பெற்றதாகவும் ஊராட்சி மன்றத் தலைவர் தரணி குறித்து அடுக்கடுக்கான புகார்கள் மாவட்ட ஆட்சித்தலைவருக்குச் சென்றன. அதோடு, தெருவிளக்குகளை கொள்முதல் செய்வதிலும் முறைகேடு நடந்திருப்பதாகப் புகார் எழுந்தது.

தரணி
தரணி

இதனையடுத்து, தரணிக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரம் பறிக்கப்பட்டதாகத் தகவல்கள் பரவின. இது குறித்து, ஆரணி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் விசாரித்தபோது, ``ஊராட்சி மன்றத் தலைவர் தரணி, பஞ்சாயத்து நிர்வாகத்தின் கணக்கு விவரங்களைச் சரிவரப் பராமரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. போலி ஒப்புதல்கள், வரி ரசீதுகள் எனப் பலவற்றில் முறைகேடு நடந்திருப்பது உறுதியானதால், அவருக்கு வழங்கப்பட்டிருந்த ‘செக் பவர்’ அதிகாரத்தை ரத்துசெய்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டிருக்கிறார். தரணிமீது கூறப்பட்டிருக்கும் வெவ்வேறு புகார்கள் குறித்தும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது’’ என்றனர்.