Published:Updated:

திருவண்ணாமலை: திருப்புதல் தேர்வு வினாத்தாள் கசிவு; சி.இ.ஓ சஸ்பெண்ட்! - பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை

வினாத்தாள் கசிவு ( மாதிரிப் படம் )

10, 12-ம் வகுப்பு திருப்புதல் தேர்வுக்கான வினாத்தாள்கள் கசிந்த விவகாரத்தில், திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை: திருப்புதல் தேர்வு வினாத்தாள் கசிவு; சி.இ.ஓ சஸ்பெண்ட்! - பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை

10, 12-ம் வகுப்பு திருப்புதல் தேர்வுக்கான வினாத்தாள்கள் கசிந்த விவகாரத்தில், திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Published:Updated:
வினாத்தாள் கசிவு ( மாதிரிப் படம் )

தமிழக மாநில பாடத்திட்டத்தின் கீழ் 10, 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்து. கொரோனா பெருந்தொற்று பரவலால், தேர்வு குறித்த பயிற்சி இல்லாமல் இருந்த பள்ளி மாணவர்களுக்கு, அச்சத்தை போக்கும் வகையில் பொதுத்தேர்வுக்கு முன்னதாகவே திருப்புதல் தேர்வை அறிவித்தது பள்ளிக் கல்வித்துறை. பிப்ரவரி 9-ம் தேதிமுதல் இந்த தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், குறிப்பிட்ட தேர்வுகள் நடைபெறுவதற்கு முன்தினமே கேள்வித்தாள்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பள்ளிக் கல்வித்துறை, வினாத்தாள்கள் கசிந்தது குறித்து விசாரணை மேற்கொண்டபோது திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்றிருப்பது தெரியவந்துள்ளது.

Exam (Representational Image)
Exam (Representational Image)
Photo by Andy Barbour from Pexels

அதிகாரிகள் மேற்கொண்டு விசாரணை நடத்தியதில், வந்தவாசி மற்றும் போளூர் பகுதிகளில் உள்ள இரு வெவ்வேறு தனியார் மேல்நிலைப் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட வினாத்தாள்களே கசிந்திருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட கல்வி மாவட்டங்களில், பள்ளிக் கல்வித்துறையின் இணை இயக்குநர் பொன்.குமார் நேரடி விசாரணை மேற்கொண்டு இதை உறுதிசெய்தார். பின்னர், பள்ளிக் கல்வித்துறை ஆணையரிடம் அதற்கான அறிக்கையை அவர் அளித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை ஆணையர், வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ``இந்த இரண்டு பள்ளிகளில் இருந்தும் கேள்வித்தாள்கள் வெளியானது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு காரணமான பள்ளியைச் சேர்ந்த நபர்களின் மீது தக்க குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தேர்வுத்துறை இயக்குநர் அளித்த வழிகாட்டுதல்களை சரியாகப் பின்பற்றாத அரசு அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கெனவே வெளியிடப்பட்ட அட்டவணையின்படி திருப்புதல் தேர்வுகள் எந்த வித மாற்றமும் இன்றி தொடர்ந்து நடைபெறும்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அருள்செல்வம்
அருள்செல்வம்

சம்பந்தப்பட்ட தேர்வு நடைபெறும் நாளன்று பள்ளி தலைமையாசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டிய கேள்வித்தாள்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், சில தினங்களுக்கு முன்பே தேர்வு விதிமுறைகளை மீறி கொடுத்து அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருள்செல்வம் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அந்த பணியிடத்தில், விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியாவிற்கு முழு கூடுதல் பொறுப்பு வழங்கி நியமித்துள்ளது பள்ளிக் கல்வித்துறை.

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக, பொதுத்தேர்வு மதிப்பெண்ணாக இந்த திருப்புதல் தேர்வு மதிப்பெண் எடுத்துக்கொள்ளப்படலாம் என்ற நோக்கில் இவ்வாறு வினாத்தாள்கள் வெளியாகியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மாணவர்களின் குழப்பத்தை போக்கும் வகையில், இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடைபெறும் என தெரிவித்துள்ளது பள்ளிக் கல்வித்துறை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism