Published:Updated:

`பண மோசடியில் ஈடுபட்ட நபர் உதயநிதியின் உதவியாளர் இல்லை!' - திருப்பத்தூர் போலீஸார் தகவல்!

ராஜேஷ்
News
ராஜேஷ்

``ராஜேஷ் எந்தக் கட்சியையும் சார்ந்தவர் இல்லை. உதயநிதி ஸ்டாலினின் நேர்முக உதவியாளரும் இல்லை. பண மோசடியிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்" என்கிறது திருப்பத்தூர் மாவட்ட போலீஸ்.

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட செவ்வாத்தூர் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காசி மகாராஜன். இவரின் மகள் தேன்மொழி, எம்.எஸ்.டபிள்யூ பட்டப்படிப்பை முடித்துவிட்டு 2017-ம் ஆண்டு சென்னையிலுள்ள ஹோட்டலில் கேஷியராக வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். அந்த சமயம், சென்னையைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் உதவியாளர் என்று கூறி அவரிடம் அறிமுகமாகியிருக்கிறார். தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி தேன்மொழியிடம் நான்கரை லட்சம் ரூபாயை வாங்கியிருக்கிறார் ராஜேஷ்.

கைது செய்யப்பட்ட ராஜேஷ்
கைது செய்யப்பட்ட ராஜேஷ்

மேலும் சிலரிடமும் அரசு வேலை வாங்கித் தருவதாக லட்சக்கணக்கில் பணம் வாங்கினாராம். மூன்று ஆண்டுகள் கடந்தும் வேலை வாங்கித் தரவில்லை. இதனால், ராஜேஷிடம் பணத்தைத் திருப்பித் தரும்படி கேட்டிருக்கிறார் தேன்மொழி. அப்போது ராஜேஷ் மிரட்டியதால், இரண்டு மாதங்களுக்கு முன்பு திருப்பத்தூர் எஸ்.பி அலுவலகத்துக்குச் சென்று புகாரளித்துள்ளார். அந்தப் புகார் மனு கந்திலி காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அனுப்பிவைக்கப்பட்டது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தேன்மொழியை அழைத்து விசாரணை நடத்திய போலீஸார், பண மோசடி செய்த ராஜேஷையும் போனில் தொடர்புகொண்டு விசாரணைக்காக அழைத்தனர். விசாரணைக்கு வர மறுத்த அவர், ``நான் உதயநிதி ஸ்டாலினின் நேர்முக உதவியாளர். புகார் கொடுத்தவர்களைத் தலைமைச் செயலகம் அனுப்பி வையுங்கள். நான் உங்களை ஏலகிரி மலையிலுள்ள எம்.எல்.ஏ ஒருவரின் ரிசார்ட்டில் வந்து சந்திக்கிறேன்’’ என்று கூறும் ஆடியோவும் வெளியாகின.

ராஜேஷ் - கைது செய்யப்பட்ட பின்...
ராஜேஷ் - கைது செய்யப்பட்ட பின்...

இந்த நிலையில், புகார் கொடுத்த தேன்மொழிக்கு ராஜேஷ் பகிரங்கமாகவே கொலை மிரட்டல் விடுக்கும் ஆடியோ உரையாடல்கள் வெளியாகி, பெரும் பரபரப்பைக் கிளப்பின. இது தொடர்பாகவும், தேன்மொழி புகாரளித்ததையடுத்து, சென்னையில் பதுங்கியிருந்த ராஜேஷை கந்திலி போலீஸார் தேடிப்பிடித்து நேற்று இரவு கைது செய்தனர். ராஜேஷின் தந்தை கருணாமூர்த்தி, ஓய்வுபெற்ற போலீஸ் எஸ்.ஐ என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக, திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், ``ராஜேஷ் எந்தக் கட்சியையும் சார்ந்தவர் இல்லை. சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலினின் நேர்முக உதவியாளரும் இல்லை. பண மோசடியிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். மோசடி, ஆள்மாறாட்டம், மிரட்டல் விடுத்தது ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்து, நீதிமன்றக் காவலில் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.