Published:Updated:

அ.தி.மு.க டு அ.ம.மு.க, 4 கிலோ கஞ்சா; சி.ஐ.டி அதிகாரி! -போலீஸ் ரெய்டில் சிக்கிய திருப்பூர் ஜெயமணி

ஜெயமணி
ஜெயமணி

திருப்பூர் அ.ம.மு.க பெண் பிரமுகர் ஜெயமணி காரில் கஞ்சா கடத்திய வழக்கில் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் நம்பியாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயமணி. திருப்பூரில் கார்மென்ட்ஸ் நடத்தி வரும் ஜெயமணி, சில ஆண்டுகளுக்கு முன்புவரை அ.தி.மு.க-வில் இருந்தார். கடந்த 2014-ம் ஆண்டு அப்போதைய அமைச்சர் எம்.எஸ்.எம் ஆனந்தன் மீது பணமோசடிப் புகார் எழுப்பி பரபரப்பைக் கிளப்பினார்.

ஜெயமணி
ஜெயமணி
`ஓட்டு போடல.. பாதை அடைப்பு!' -புதுக்கோட்டை அ.ம.மு.க பிரமுகருக்கு எதிராகக் கொதிக்கும் கிராமம்

ஆனந்தனுக்கு அது தலைவலியை ஏற்படுத்தியது. இதனிடையே, கட்சியின் கொள்கைக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி, ஜெயமணியை அ.தி.மு.க-வில் இருந்து நீக்கினார் ஜெயலலிதா.

இந்த நிலையில், கோவை வடவள்ளி பகுதியில் காரில் கஞ்சா கடத்திய குற்றத்துக்காக ஜெயமணி கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து வடவள்ளி போலீஸார் கூறுகையில், ``தொண்டாமுத்தூர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தோம். அப்போது, அந்த வழியே வந்த TN 41 AC 7000 Toyata Fortuner சொகுசுக் காரை சோதனை செய்து பார்த்ததில், காரில் 4 கிலோ கஞ்சா இருந்தது. அதைப் பறிமுதல் செய்தோம். மேலும், அவரிடம் இருந்து கஞ்சா, ஊசிகள், தென்மண்டல சி.ஐ.டி அதிகாரி, வருமானவரி அதிகாரி ஆகிய போலி அடையாள அட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில், அவர் திருப்பூர் நம்பியாம்பாளையத்தைச் சேர்ந்த ஜெயமணி (39) என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து ஜெயமணியைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம்” என்றனர்.

அ.தி.மு.க டு அ.ம.மு.க, 4 கிலோ கஞ்சா; சி.ஐ.டி அதிகாரி! -போலீஸ் ரெய்டில் சிக்கிய திருப்பூர் ஜெயமணி

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஜெயமணி அ.ம.மு.க-வில் இணைந்தார். ஜெயமணி குறித்து அ.தி.மு.க மற்றும் அ.ம.மு.க வட்டாரங்களில் விசாரித்தபோது, ``ஜெயமணிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். அ.தி.மு.க-வில் எம்.எஸ்.எம் ஆனந்தனுடன் நெருங்கிப் பழகிவந்தார். ஆனால், கோஷ்டி அரசியலில் அதே ஆனந்தன் மீது புகார் எழுப்பினார்.

ஜெயமணி அ.தி.மு.க-வில் இணைந்தபோது
ஜெயமணி அ.தி.மு.க-வில் இணைந்தபோது

இதனால், அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்டார். பிறகு, அ.ம.மு.க-வில் இணைந்தவர் இரிடியம் மோசடி போன்ற சதுரங்க வேட்டை பாணி தொழில்களில் ஈடுபட்டு வந்தார். இதனால், அவரை தொடர்ந்து கண்காணித்து வந்த காவல்துறை தற்போது கைதும் செய்துவிட்டது” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு