Published:Updated:

திருச்சி: பாலியல் தொல்லை; மிரட்டல்! - காவலர் பயிற்சிப் பள்ளியில் தற்கொலைக்கு முயன்ற திருநங்கை

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை

இதனால், விரக்தியில் இருந்த சம்யுக்தா உடல் காயத்துக்குப் பயன்படுத்தப்படும் மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

காவலர் பயிற்சியில் பள்ளியில் பயிற்சி எடுத்த திருநங்கை தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக எஸ்.ஐ உட்பட இரண்டு பேரை சஸ்பெண்ட் செய்திருக்கும் சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்யுக்தா
சம்யுக்தா

திருச்சியை அடுத்த நவல்பட்டு பகுதியில் பெண் காவலர் பயிற்சி பள்ளி கல்லூரி உள்ளது. அங்குத் திருச்சியைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட பெண் காவலர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த கல்லூரியில் திருநங்கையான புதுக்கோட்டையைச் சேர்ந்த சம்யுக்தா காவலராகத் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி பெற்று வருகிறார்.

இந்நிலையில் பயிற்சி கல்லூரியில் உள்ள இரண்டு அதிகாரிகள் சம்யுக்தாவுக்கு பாலியல் ரீதியாகத் தொந்தரவு கொடுத்து, மிகவும் துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இது சம்பந்தமாக கடந்த மாதம் காவலர் பயிற்சிக் கல்லூரி டி.ஐ.ஜி-யிடம் போன் மூலம் எஸ்.ஐ அசோக்குமார், ஏட்டு இஸ்ரேல் ஆகியோர் தன்னை துன்புறுத்துகிறார்கள் என்று சம்யுக்தா புகார் அளித்திருக்கிறார். அதன் பெயரில் டி.ஐ.ஜி உத்தரவின் பேரில் பாதிக்கப்பட்ட திருநங்கையான சம்யுக்தாவிடம் விசாரணை அதிகாரிகள் விசாரித்திருக்கிறார்கள். தனக்கு நடந்த இன்னல்களைக் கொட்டி தீர்த்திருக்கிறார்.

திருச்சி போலீஸார்
திருச்சி போலீஸார்

இது தொடர்பாகச் சம்மந்தப்பட்ட எஸ்.ஐ அசோக்குமார், ஏட்டு இஸ்ரேலிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்திவிட்டு, அவர்களைக் கடுமையாக எச்சரித்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். இதனால், ஆத்திரமடைந்த இரு காவலர்களும், `இதற்குக் காரணம் நீதான்’ என சம்யுக்தாவிடம் தகராறு செய்ததோடு, கடுமையாகத் திட்டியதாகக் கூறப்படுகிறது.

`என் பெற்றோரால் உயிருக்கு ஆபத்து!’ -ஜோலார்பேட்டை காவல்நிலையத்தில் கலங்கிய திருநங்கை

இதனால், விரக்தியில் இருந்த சம்யுக்தா உடல் காயத்துக்குப் பயன்படுத்தப்படும் மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனைப் பார்த்த சக காவலர்கள் அவரை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நவல்பட்டு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில், பயிற்சிப் பள்ளி எஸ்.ஐ அசோக்குமார், ஏட்டு இஸ்ரேல் ஆகியோரை சென்னை காவலர் பயிற்சிக் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.

திருநங்கை சம்யுக்தா
திருநங்கை சம்யுக்தா

சம்யுக்தா தரப்பினரிடம் பேசினோம். ``பொதுவாகத் திருநங்கைகள் உடல் மற்றும் மன ரீதியாகவும் வலிமை பெற்றவர்கள். பலபேர் என்னென்ன வார்த்தைகளில் திட்டினாலும் சாதாரணமாகக் கடந்து செல்லக்கூடியவர்கள் நாங்கள். ஆனால், சம்யுக்தா தற்கொலைக்கு முயன்றிருக்கிறார் என்றால் வேறு ஏதோ பிரச்னை நடந்திருக்கிறது. இதனை முழுமையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்று ஆவேசப்பட்டார்கள்.

அடுத்த கட்டுரைக்கு