Published:Updated:

கொடுங்கையூர்: விசாரணைக் கைதி மரணம்... சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்ட வழக்கு!

கொடுங்கையூர் காவல் நிலையம்

ராஜசேகரிடம் விசாரணை நடத்திய காவலர்கள், ராஜசேகரைக் கைதுசெய்தவர்கள், இரவில் காவல் நிலையத்தில் அவரைத் தங்கவைத்தவர்கள் எனப் பல கோணங்களில் கொடுங்கையூர் காவல் நிலைய அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர்.

கொடுங்கையூர்: விசாரணைக் கைதி மரணம்... சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்ட வழக்கு!

ராஜசேகரிடம் விசாரணை நடத்திய காவலர்கள், ராஜசேகரைக் கைதுசெய்தவர்கள், இரவில் காவல் நிலையத்தில் அவரைத் தங்கவைத்தவர்கள் எனப் பல கோணங்களில் கொடுங்கையூர் காவல் நிலைய அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர்.

Published:Updated:
கொடுங்கையூர் காவல் நிலையம்

திருவள்ளூர் மாவட்டம், அலமாதி பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவர்மீது பல்வேறு காவல் நிலையங்களில் 23 வழக்குகள் இருப்பதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஒரு வழக்கின் விசாரணைக்காக நேற்று முன்தினம் இரவு அவர் கொடுங்கையூர் காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, நேற்று மாலை 5 மணி அளவில் திடீரென ராஜசேகருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொடுங்கையூர் காவல்துறையினர் அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. ராஜசேகரின் உடல்நிலை மோசமடைந்ததால் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல, தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. அதனால் அவரை உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

கொடுங்கையூர் காவல் நிலையம்
கொடுங்கையூர் காவல் நிலையம்

அங்கு அவரைப் பரிசோதனை செய்த ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் வரும் வழியிலேயே ராஜசேகர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். விசாரணைக் கைதி ராஜசேகர் மரணமடைந்ததைத் தொடர்ந்து, சென்னை வடக்கு மண்டலக் கூடுதல் ஆணையர் அன்பு, மேற்கு மண்டல இணை ஆணையர் ராஜேஸ்வரி, துணை ஆணையர் ஈஸ்வரன் ஆகியோர் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து ராஜசேகரிடம் விசாரணை நடத்திய காவலர்கள், ராஜசேகரைக் கைதுசெய்தவர்கள், இரவில் காவல் நிலையத்தில் அவரைத் தங்கவைத்தவர்கள் எனப் பல கோணங்களில் கொடுங்கையூர் காவல் நிலைய அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ராஜசேகர்
ராஜசேகர்
ட்விட்டர்

இந்த நிலையில், கொடுங்கையூர் காவல் நிலைய ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ், உதவி ஆய்வாளர் கன்னியப்பன், முதன்மைக் காவலர்களான ஜெயசேகரன், மணிவண்ணன் முதல்நிலைக் காவலர் சத்தியமூர்த்தி ஆகியோரை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறார். இதற்கிடையே விசாரணைக் கைதி ராஜசேகர் காவல் நிலையத்தில் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் 14-ம் தேதி இதே கொடுங்கையூர் காவல் நிலையத்தில்தான் சட்டக் கல்லூரி மாணவர் அப்துல் ரஹீம் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதேபோல, கடந்த ஏப்ரல் மாதம் 18-ம் தேதி தலைமைச் செயலக காலனிக் காவலர்கள் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பட்டினப்பாக்கத்தை சேர்ந்த இளைஞர் விக்னேஷ் இறந்த வழக்கைத் தொடர்ந்து அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இரண்டாவது விசாரணைக் கைதி மரணமடைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism