Published:Updated:

``பழங்குடிகள் என்பதாலேயே பொய் வழக்கு போட்டு வஞ்சிக்கிறாங்க!" - பழங்குடியின மக்கள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் ( தே.சிலம்பரசன் )

நாடோடி பழங்குடி சமூக மக்கள் மீது பொய்வழக்கு பதிந்து, கைது நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக மயிலம் காவல்துறையினர் மீது பழங்குடி சமூக செயற்பாட்டாளர்கள் குற்றசாட்டியிருக்கின்றனர்.

``பழங்குடிகள் என்பதாலேயே பொய் வழக்கு போட்டு வஞ்சிக்கிறாங்க!" - பழங்குடியின மக்கள் ஆர்ப்பாட்டம்

நாடோடி பழங்குடி சமூக மக்கள் மீது பொய்வழக்கு பதிந்து, கைது நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக மயிலம் காவல்துறையினர் மீது பழங்குடி சமூக செயற்பாட்டாளர்கள் குற்றசாட்டியிருக்கின்றனர்.

Published:Updated:
விழுப்புரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் ( தே.சிலம்பரசன் )

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டு பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் ஒன்றில், கடந்த 2-ம் தேதி அதிகாலை உண்டியலை உடைத்து திருட்டில் ஈடுபட்டதாக 7 பழங்குடி சமூகத்தினர் மீது வழக்கு பதிவு செய்து, 3 பேரை கைது செய்திருந்தது மயிலம் காவல்துறை. இந்த நிலையில், இது பொய் வழக்கு என்றும், கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுதலை செய்து சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நேற்று காலை விழுப்புரத்தில் பழங்குடியின மக்கள் மற்றும் பாதுகாப்பு சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கைது செய்யப்பட்ட மூவர்
கைது செய்யப்பட்ட மூவர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதுதொடர்பாக பழங்குடி பாதுகாப்பு சங்கத்தைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சிலர் நம்மிடம் பேசினார்கள். ``ஆந்திர மாநிலத்தில் கொத்தடிமைகளாக இருந்து வந்த விழுப்புரம், கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 15 குழந்தைகள் உட்பட 31 பேர் கடந்த 2018-ம் ஆண்டு மீட்கப்பட்டனர். இவர்கள் திருவெண்ணெய்நல்லுர் அருகேயுள்ள சித்தலிங்கமடம் நீதிபதி சந்துரு குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதேபோல் ஈரோடு, தேனி, கரூர் மாவட்டங்களில் இருந்தும் மீட்கப்பட்ட 3 குடும்பத்தினரும் அதேபகுதியில் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் அருகில் உள்ள செங்கல் சூளைகளில் வேலை செய்து பிழைத்து வந்தனர். ஆந்திராவிலிருந்து மீட்கப்பட்டவர்களில் ஒருவரான கணேசன் என்பவரின் ஆவணங்கள், இதுவரையிலும் விழுப்புரம் தொழிலாளர் கண்காணிப்பாளரிடம் சமர்ப்பிக்கப்படவில்லை. அதனால் அந்த 16 பேருக்கும் கொத்தடிமை நிவாரணம் வழங்கப்படாமல் உள்ளது. எனவே அந்த நிவாரணத்தை பெற வேண்டும் என்பதற்காக கணேசனை தேடி கடந்த 1-ம் தேதி மாலை பாண்டியன், ராமச்சந்திரன், குமார் ஆகியோர் தனித்தனியாக இரு சக்கர வாகங்களில் குடியிருப்பிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர்.

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்
விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்

இந்த நிலையில், மறுநாள் அதிகாலை 2:45 மணி அளவில் பாண்டியனிடம் இருந்து வி.கமலா என்பவரின் தொலைபேசிக்கு அழைப்பு வந்துள்ளது. அதில், `போலீஸ்காரங்க எங்களையும் புடிச்சு வச்சிருக்காங்க' என்று சொல்லப்பட்ட உடன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், 1-ம் தேதி இரவு 7:30 மணி அளவிலேயே இந்த மூவரையும் கூட்டேரிப்பட்டு டாஸ்மாக் கடை அருகில் மயிலம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பின்னர், ஆள் நடமாட்டமே இல்லாத ஒரு கட்டடத்தில் வைத்து, அன்று இரவு முழுவதும் மூன்று பேரையும் அடித்து கடுமையான சித்திரவதை செய்துள்ளனர். `மூன்று பேரையும் காணவில்லை. கண்டுபிடித்து தாருங்கள்' என மறுதினமே (02.03.2022) எஸ்.பி-யிடம் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அன்றைய தினமே (2-ம் தேதி) நீதிபதி சந்துரு குடியிருப்பில் உள்ள சங்கர் என்பவரின் வீட்டில் நுழைந்த இரண்டு காவல்துறை அதிகாரிகள், சுமார் 75,000 ரூபாய் மதிப்பிலான கம்மல், மாட்டல், எலக்ட்ரானிக் சாதனத்தை திருடிச் சென்றுள்ளனர். இந்த நிலையில், 3-ம் தேதி அன்று வெளியான இரு நாளிதழ்களில், கூட்டேரிப்பட்டு பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலில் 2-ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் உண்டியலை உடைத்து 7 பேர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதாகவும், அதில் பாண்டியன், ராமச்சந்திரன், குமார் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில்... கார்த்தி, சங்கர், விஜி, செல்வம் ஆகிய 4 பேர் தப்பி ஓடி விட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. கமலா என்பவருக்கு போனில் வந்த அழைப்பின்படியே பார்த்தாலும், மூன்று பேரும் அதிகாலை 2:45 மணி அளவில் போலீஸ் பிடியில் உள்ளனர். அப்படி இருக்க 4 மணி அளவில் திருட்டில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினரால் தப்பி ஓடியதாகக் கூறப்படும் நான்கு பேரும் 3-ம் தேதி மாலை வரையில் ஆராமேட்டில் உள்ள முருகன் என்பவரின் செங்கல் சூளையில் வேலை செய்து கொண்டிருந்துள்ளனர்.

விழுப்புரத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்
தே.சிலம்பரசன்

குறிப்பாக 1-ம் தேதி இரவு முழுவதும், இவர்கள் அதே சூளையில் செங்கல் புரட்டிப்போடும் வேலையை செய்து வந்துள்ளனர். அப்படி இருக்க அங்கிருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ள ஒரு கோயிலுக்கு வந்து இவர்கள் திருடியிருக்க முடியுமா? இவர்களை பற்றி அவர்கள் குடும்பத்தினரிடம் விசாரித்ததில் அவர்கள் மீது எந்த குற்ற வழக்குகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காவல்துறையினரால் கண்டுபிடிக்கமுடியாத திருட்டு வழக்குகளை, நலிந்த மக்களான பழங்குடிகள் மீது சுமத்தப்படுவது காலம் காலமாக நடந்து வருகிறது. `ஜெய்பீம்' திரைப்படம் வெளியானதிலிருந்து, காவல்துறையில் உள்ள ஒரு சில அதிகாரிகள் பழங்குடியினர் மீது ஒருவிதமான வன்மத்தோடு பழிவாங்கும் வகையில் செயல்பட்டு வருகிறார்கள் என்பதையே இது காட்டுகிறது. அண்மையில் கூட விருத்தாச்சலத்தில் பழங்குடி சமூக இளைஞர் ஒருவர் மீது பொய் திருட்டு வழக்கு சுமத்தப்பட்டுள்ளது" என்றனர் ஆதங்கமாக.

இது தொடர்பாக மயிலம் காவல் நிலைய ஆய்வாளர் கிருபலக்ஷ்மியிடம் விளக்கம் கேட்டோம். ``1-ம் தேதி இரவு 9 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில்தான் திருட்டுச் சம்பவம் நடைபெற்றுள்ளது. பொதுமக்கள்தான் அவர்களை பிடித்து கொடுத்தார்கள். மூவரும் எங்களது கஸ்டடியில் வைக்கப்பட்டிருந்தார்கள் என்பதே தவறு. 6 மணி அளவில் பொதுமக்களிடமிருந்து புகார் வருகிறது. நாங்கள் விசாரித்துவிட்டு 7 மணி அளவில் தான் 3 பேரையும் கைது செய்தோம். 1-ம் தேதி மாலை 4 மணியிலிருந்து இவர்களுடைய செல்போன் லொகேஷன் அந்தப் பகுதியை தான் காட்டுகிறது. அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் மற்ற நான்கு பேரின் பெயர்களைச் சேர்த்தோம். சித்தலிங்கமடத்தில் இருப்பவர்களின் பெயர் எங்களுக்கு எப்படி தெரியும்?

திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் ஒரு விநாயகர் சிலை, இருசக்கரவாகனம், தாலி ஆகியவற்றை தான் திருடியதாக ராமச்சந்திரன் வாக்குமூலம் அளித்தார். அதன்படி திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அந்த காவலர்கள் நேரில் சென்று சோதனை செய்தார்கள். மயிலம் காவலர்கள் அங்கு செல்லவில்லை.

கல்யாணி
கல்யாணி

கார்த்தி, சங்கர், விஜி, செல்வம் ஆகியவர்கள் வேலை செய்த செங்கல் சூளை உரிமையாளரிடம் நாங்கள் விசாரித்தபோது, கடந்த 25-ம் தேதியே இவர்களின் கணக்கை முடித்து அனுப்பி வைத்துள்ளார். இவர்கள் சொல்லும் நாள்களில் அங்கு வேலையே நடக்கவில்லை" என்றார்.

ஆனால், பழங்குடி பாதுகாப்புச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கல்யாணி, செங்கல் சூளை உரிமையாளர் முருகனிடம் உரையாடும் ஆடியோவில், ``கார்த்தி, சங்கர், விஜி, செல்வம் ஆகிய 4 பேரும் 1-ம் தேதி மாலை 4 மணி முதல் 3-ம் தேதி மாலை வரையில் என்னுடைய செங்கல் சூளையில்தான் பணியாற்றினார்கள்" என அந்த சூளையின் உரிமையாளர் முருகன் கூறியிருப்பது, காவல் ஆய்வாளரின் கருத்துக்கு முரணாகவே அமைந்துள்ளது.

இருளிலிருந்து நீதி வெளிச்சத்துக்கு வரட்டும்..!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism