Published:Updated:

திருச்சி: `உனக்கு என்னோட வண்டிதான் கிடைச்சுதா?’ - திட்டிய அரசு பஸ் டிரைவர்... மண்டையை உடைத்த வாலிபர்

திருச்சியில் அடிதடி
News
திருச்சியில் அடிதடி

பேருந்து வளைவில் திரும்பும்போது பேருந்தை முந்திக்கொண்டு வளைந்திருக்கிறார் பாரூக். அதற்கு டிரைவர் திட்டியதால் பிரச்னை கைகலப்பில் முடிந்திருக்கிறது.

`ஏண்டா, நீ சாகுறத்துக்கு என்னோட வண்டிதான் கிடைச்சுதா?’ என்று அரசுப் பேருந்து டிரைவர் டூ விலரில் வந்தவரைத் திட்டியதால், இவருக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் அரசுப் பேருந்து ஓட்டுநர் மண்டை உடைந்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இருவரும் சாலையில் அடித்துக்கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.

திருச்சி சாலை
திருச்சி சாலை

சீனிவாச நகரைச் சேர்ந்தவர் உமர் பாரூக். இவர் சத்திரம் பேருந்து நிலையம் அருகே தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அவருக்கு முன்னே அரசுப் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்தப் பேருந்தை உமர் பாரூக் முந்திச் செல்ல முற்பட்டார். அப்போது பேருந்தின் ஓட்டநர் சரவணன் அவரை திட்டியிருக்கிறார். இதையடுத்து உமர் பாரூக்குக்கும், பேருந்து ஓட்டுநர் சரவணனுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியது. இருவரும் ரோட்டில் இறங்கி அடித்துக்கொள்ள ஆரம்பித்தனர். இதில், உமர் பாரூக் கையால் வேகமாகக் குத்தியதில் அரசுப் பேருந்து ஓட்டநரின் மண்டை உடைந்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மண்டையை உடைத்துவிட்டு உமர் பாரூக் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார். அப்போது அங்கிருந்தவர்கள் அவரைப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். போலீஸார் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்துவருகின்றனர். இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அரசுப் பேருந்து ஓட்டுநர் மண்டை உடைப்பு
அரசுப் பேருந்து ஓட்டுநர் மண்டை உடைப்பு

என்ன நடந்தது என்று போலீஸார் வட்டாரத்தில் விசாரித்தோம். ``உமர் பாரூக் டூ வீலரில் வேகமாகச் சென்றுகொண்டிருந்தபோது, அரசுப் பேருந்து அதிக சத்தத்தோடு ஹாரன் அடித்துக்கொண்டே வந்திருக்கிறது. கடுப்பான பாரூக், வண்டியை நிறுத்தி, அரசுப் பேருந்தின் டிரைவரை திட்டிவிட்டுச் சென்றிருக்கிறார். அத்தோடு பேருந்து வளைவில் திரும்பும்போது பேருந்தை முந்திக்கொண்டு வளைந்திருக்கிறார் பாரூக்.

திருச்சியில் அடிதடி
திருச்சியில் அடிதடி

அதற்கு டிரைவர், `நீ சாவுறதுக்கு என்னோட வண்டிதான் கிடைச்சுதா?’ என்று தகாத வார்த்தையில் திட்டியிருக்கிறார். கடுப்பான பாரூக், டிரைவரை ஒருமையில் திட்டியதால் இருவருக்கும் இடையே கைகலப்பானது. இதில் பாரூக், டிரைவர் தலையில் வேகமாகக் குத்தியதில் அவருக்கு மண்டை உடைந்தது. அவரை மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். இது குறித்து விசாரித்துவருகிறோம்’’ என்றனர்.