Published:Updated:

ஸ்ரீநகர்: பயங்கரவாத தாக்குதலில் 2 காவலர்கள் சுட்டுக்கொலை - சி.சி.டி.வி-யில் பதிவான பரபரப்பு காட்சி

காவலர்கள் சுட்டுக்கொலை
காவலர்கள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் இன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு காவலர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகர் மாவட்டத்தில் உள்ள பாகட் பர்சுல்லாவில் (Baghat Barzulla) பயங்கரவாத தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சோஹைல் (Sohail) , முகமது யூசுப் (Mohammad Yousuf) ஆகிய இரண்டு காவலர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலில் காயமடைந்த காவலர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு இரண்டு காவலர்களும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. தாக்குதலில் ஈடுபட்ட நபரை பிடிப்பதற்காக அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சி.சி.டி.வி காட்சிகள் மூலம் அந்நபரை பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களில் ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் மூன்றாவது தாக்குதல் இது. இதுவரை மூன்று காவலர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இன்று நடைபெற்ற தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பாவின் முன்னணி அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் (The Resistance Front) பொறுப்பேற்றுள்ளது. இரண்டு தினங்களுக்கு முன்னர், நகரின் உயர்மட்ட பாதுகாப்பு உள்ள பகுதியில் அமைந்திருக்கும் ஒரு உணவகத்தின் உரிமையாளர் மகன் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட பின்னர் அதன் நிலையை மதிப்பீடு செய்வதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 24 நிபுணர்கள் கொண்ட குழு ஜம்மு காஷ்மீருக்கு வந்துள்ள சமயத்தில், இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு