Published:Updated:

`பறிமுதல் செய்த வாகனத்தை விடுவிக்க லஞ்சம்!'- செல்போன் வீடியோவால் சிக்கிய எஸ்.ஐ, பெண் காவலர்

எருமாடு காவல் நிலையம்
எருமாடு காவல் நிலையம்

ஊரடங்கு உத்தரவை மீறியதாகப் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை விடுவிக்க லஞ்சம் கேட்ட எஸ்.ஐ மற்றும் பெண் காவலர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளின்றி ஊரடங்கை மீறி வெளியில் சுற்றிய நபர்களின் வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்துவருகின்றனர். நீலகிரி மாவட்டத்திலும், இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.

`பறிமுதல் செய்த வாகனங்களில் பெட்ரோல் திருட்டு!' -ஊர்க்காவல் படை கைவரிசையால் மிரண்ட பரமக்குடி போலீஸ்

இந்த நிலையில், தேவாலா சரகத்திற்குட்பட்ட எருமாடு காவல் நிலையத்திலும் இதுபோன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஊரடங்கு காலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை விடுவிக்க எருமாடு காவல் நிலையத்தில் பணியாற்றிவந்த எஸ்.ஐ கண்ணன், காவல்நிலைய எழுத்தர் சுமா என்ற பெண் காவலர் ஆகியோர் வாகன உரிமையாளர்களிடம் பணத்தை லஞ்சமாகப் பெற்றுவந்ததாகப் புகார் எழுந்துள்ளது.

காவலர்
காவலர்
Representational Image

வாகன உரிமையாளர் ஒருவரிடம் ரூ.10,000 லஞ்சம் கேட்டுள்ளதாகத் தெரிகிறது. அதைச் சம்பந்தப்பட்ட நபர் செல்போன் மூலம் வீடியோ எடுத்தது மட்டுமன்றி, காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் புகார் அளித்துள்ளார். உயர் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், எஸ்.ஐ கண்ணன் மற்றும் பெண் காவலர் சுமா ஆகியோர் பணம் கேட்டது உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து, அவர்கள் இருவரையும் ஆயுதப் படைக்குப் பணிமாற்றம் செய்ததோடு பணியிடை நீக்கமும் செய்து உத்தரவிட்டுள்ளார், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன்.

`4 ரகங்கள்; 5,000 மலர்த் தொட்டிகள்!’ - ஊட்டி பூங்காவில் மலர்களால் வடிவமைக்கப்பட்ட கொரோனா வைரஸ்

`வாகனங்களை விடுவிக்கப் பலரிடம் இவர்கள் வசூல் வேட்டையை நடத்தியுள்ளனர். இவர்களிடம் முறையான விசாரணையை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு