Published:Updated:

தனியார் பள்ளிக்கு மேசைகளை எடுத்துச்செல்ல அரசுப் பள்ளி மாணவர்கள்; டிராக்டர் பயணம் - இருவர் சஸ்பெண்ட்

வீடியோ காட்சி

டிராக்டரில் இருக்கைகள், மேசைகளை ஏற்றிச்செல்ல மாணவர்கள் பயன்படுத்தப்பட்டதோடு, மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்த வீடியோ வெளியான நிலையில் தற்போது இரு ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகேயுள்ள ஆலம்பூண்டி எனும் பகுதியில் இயங்கிவருகிறது அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி. இந்தப் பள்ளியிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவிலுள்ள தனியார் பள்ளிக்கு கடந்த 17-ம் தேதி மாணவர்கள் அமரும் இருக்கைகள், மேசைகள் கொண்டு செல்லப்பட்டிருக்கின்ற. அவற்றை ஏற்றி இறக்குவதற்கு, 10-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், அந்த மாணவர்கள் டிராக்டரின் பின்பகுதிகளில் நின்றபடி மேசைகளைப் பிடித்தவாறும், இன்ஜின் பகுதியில் சக்கரத்துக்கு மேற்பகுதியில் அமர்ந்தும் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

டிராக்டரில் மாணவர்கள்
டிராக்டரில் மாணவர்கள்

சுமார் 5 கி.மீ தூரம் வரை இப்படி ஆபத்தான நிலையில், மாணவர்கள் பயணம் செய்யும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், பள்ளி மாணவர்களை இந்தப் பணிக்காகப் பயன்படுத்திய அரசுப் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் பழனி, தலைமை ஆசிரியர் முத்துசாமி ஆகியோரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருக்கிறார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்.