Published:Updated:

உதய்பூர் கொலைச் சம்பவம்: கைதானவர்களுக்கு சிறையில் பிரியாணி வழங்கப்பட்டதா..? - காவல்துறை விளக்கம்!

ராஜஸ்தான் காவல்துறை ( ட்விட்டர் )

உதய்பூர் கொலைச் சம்பவத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் குற்றவாளிகளுக்கு பிரியாணி வழங்கப்பட்டதாக ஒரு தகவல் இணையத்தில் வைரலாகிவருகிறது.

உதய்பூர் கொலைச் சம்பவம்: கைதானவர்களுக்கு சிறையில் பிரியாணி வழங்கப்பட்டதா..? - காவல்துறை விளக்கம்!

உதய்பூர் கொலைச் சம்பவத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் குற்றவாளிகளுக்கு பிரியாணி வழங்கப்பட்டதாக ஒரு தகவல் இணையத்தில் வைரலாகிவருகிறது.

Published:Updated:
ராஜஸ்தான் காவல்துறை ( ட்விட்டர் )

ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் நுபுர் ஷ்ர்மாவுக்கு ஆதரவாக சமூக ஊடகத்தில் கருத்து தெரிவித்த கன்ஹையா லால் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். அவரைத் தலை துண்டித்துக் கொலைசெய்த இருவரை போலீஸார் நேற்றிரவு கைதுசெய்தனர். இந்த வழக்கு விசாரணை தற்போது தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், உதய்பூர் கொலைச் சம்பவத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் குற்றவாளிகளுக்கு பிரியாணி வழங்கப்பட்டதாக ஒரு தகவல் இணையத்தில் வைரலாகிவருகிறது. பத்திரிகையாளர்கள் சிலர் இந்தத் தகவலை தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்திருக்கின்றனர். அதேபோல, சில செய்தி நிறுவனங்களும் இது தொடர்பாக செய்தி வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்தத் தகவல் போலி என்று தற்போது ராஜஸ்தான் மாநிலக் காவல்துறை விளக்கமளித்திருக்கிறது. இது தொடர்பாக, ராஜஸ்தான் காவல்துறை அந்த போலித் தகவலின் ஸ்கிரீன் ஷாட்டைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ``உதய்பூர் கொலைச் சம்பவத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் குற்றவாளிகளுக்கு பிரியாணி வழங்கப்பட்டதாக ஒரு போலி தகவல் இணையத்தில் வைரலாகிவருகிறது. இது முற்றிலும் தவறானது. குற்றவாளிகள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்'' எனக் குறிப்பிட்டிருக்கிறது.

காவல்துறையின் இந்தப் பதிவைத் தொடர்ந்து, இந்த போலித் தகவலை சமூக ஊடகங்களில் பகிர்ந்தவர்கள் அனைவரும் தங்கள் பதிவை நீக்கிவருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!