Published:Updated:

உதய்பூர் டெய்லர் படுகொலை: வழக்கை என்.ஐ.ஏ விசாரிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவு!

என்.ஐ.ஏ - தேசிய புலனாய்வு முகமை

நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவு தெரிவித்த நபர் படுகொலைசெய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

உதய்பூர் டெய்லர் படுகொலை: வழக்கை என்.ஐ.ஏ விசாரிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவு!

நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவு தெரிவித்த நபர் படுகொலைசெய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

Published:Updated:
என்.ஐ.ஏ - தேசிய புலனாய்வு முகமை

ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர், பூத்மஹால் பகுதியில் தையல் கடை நடத்திவந்தவர் கன்ஹையா லால். அண்மையில், முகமது நபிகள் குறித்து பா.ஜ.க முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா தெரிவித்த சர்ச்சைக் கருத்துக்கு கன்ஹையா லால் ஆதரவு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அது தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் வீடியோ பதிவிட்டும் வந்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, அவருக்குத் தொடர்ச்சியாக கொலை மிரட்டல்கள் வந்திருக்கின்றன. இந்த நிலையில், அவரை நேற்றைய தினம் பட்டப்பகலில் கடைக்குள்வைத்து இரண்டு இளைஞர்கள் தலையைத் துண்டித்துக் கொலைசெய்தனர். மேலும், அதை வீடியோ எடுத்து எச்சரிக்கையும் விடுத்தனர்.

கன்ஹையா லால் இறப்பதற்கு ஐந்து நாள்களுக்கு முன்பு இது தொடர்பாக போலீஸில் புகாரளித்து, தனக்குப் பாதுகாப்பு தருமாறு கோரிக்கை விடுத்திருக்கிறார். மேலும், போலீஸார் இந்த விவகாரம் தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்திருக்கின்றனர்.

நவீன்குமார் ஜிண்டால், நுபுர் ஷர்மா
நவீன்குமார் ஜிண்டால், நுபுர் ஷர்மா

இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. பல்வேறு தரப்பினரும் கொலைச் சம்பவத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில், தற்போது இந்தக் கொலை தொடர்பாக விசாரிக்க தேசிய புலனாய்வு முகமைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உள்துறை அமைச்சகம்
உள்துறை அமைச்சகம்

இந்தக் கொலை தொடர்பாக உள்ளூர் ஊடகங்கள், ``உதய்பூர் தையல்காரர் தனக்கு பயங்கரமான மிரட்டல்கள் வந்ததையடுத்து, தனது கடையை ஐந்து நாள்கள் மூடிவைத்திருந்ததாக அந்தப் பகுதியைச் சேர்ந்த சில உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். ஆனால், அவருக்கு ராஜஸ்தான் போலீஸார் எந்தவிதப் பாதுகாப்பும் அளிக்காததால் நேற்று கொடூரமாகப் படுகொலைசெய்யப்பட்டார்'' எனத் தெரிவித்திருக்கின்றன. இந்தச் சம்பவத்தால் ராஜஸ்தானில் பதற்றம் நிலவிவருகிறது.