Published:Updated:

`பாலில் தண்ணீர்; கொள்முதலில் கொள்ளை!’- வேலூர் ஆவின் பொதுமேலாளர் சஸ்பெண்டு 

பால் கொள்முதலில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், வேலூர் ஆவின் பொதுமேலாளர் கோதண்டராமன் அதிரடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

கோதண்டராமன்
கோதண்டராமன்

வேலூர், திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர்களின் கூட்டுறவு ஒன்றியமான `ஆவின்’ தலைமை அலுவலகம் சத்துவாச்சாரியில் இயங்கிவருகிறது. 

ஆவின் தலைமை அலுவலகம்
ஆவின் தலைமை அலுவலகம்

இங்கு தினமும் இரண்டு மாவட்டங்களில் உள்ள பால் உற்பத்தியாளர்களிடமிருந்து சுமார் 5.16 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. 

இதில் இரண்டு லட்சம் லிட்டர் பால் சென்னைக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. மீதமுள்ள பாலில் இங்கேயே 72 ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட்டாகவும், நெய், பால்கோவா, மோர், லஸ்ஸி உள்ளிட்ட பால் உப பொருள்கள் தயாரிக்கப்படுகிறது.

இந்த நிலையில், பால் கொள்முதலில் தண்ணீர் கலந்து முறைகேடு செய்வதை சமீபத்திய தணிக்கையில் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதுதொடர்பாக, அந்த நேரத்தில் ஆவின் அதிகாரிகள் 5 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். 

முரளிபிரசாத் சஸ்பெண்டு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்குப் பதிலாக பணியில் அமர்த்தப்பட்ட கோதண்டராமனும் அதேபோன்ற புகாரில் சிக்கியிருக்கிறார்.

இந்த நிலையில், ஆவின் பொதுமேலாளர் கோதண்டராமனை அதிரடியாக சஸ்பெண்டு செய்து ஆவின் மேலாண் இயக்குநர் காமராஜ் உத்தரவிட்டுள்ளார். நிர்வாகக் காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

ஆவின் பால்
ஆவின் பால்

கோதண்டராமனுக்கு முன்பு பொதுமேலாளராக இருந்த முரளி பிரசாத் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் கண்டுபிடித்தனர். முரளிபிரசாத் சஸ்பெண்டு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்குப் பதிலாக பணியில் அமர்த்தப்பட்ட கோதண்டராமனும் அதேபோன்ற புகாரில் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.