Published:Updated:

வேலூர்: போலி ஆவணம் தயாரித்து ரூ.97 லட்சம் மோசடி... கூட்டுறவு வங்கிப் பெண் அதிகாரி சிறையிலடைப்பு!

உமா மகேஸ்வரி

மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கியதாக ரூ.97 லட்சம் மோசடி செய்த வேலூர் மத்திய கூட்டுறவு வங்கிப் பெண் அதிகாரி கைதுசெய்யப்பட்டார்.

வேலூர்: போலி ஆவணம் தயாரித்து ரூ.97 லட்சம் மோசடி... கூட்டுறவு வங்கிப் பெண் அதிகாரி சிறையிலடைப்பு!

மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கியதாக ரூ.97 லட்சம் மோசடி செய்த வேலூர் மத்திய கூட்டுறவு வங்கிப் பெண் அதிகாரி கைதுசெய்யப்பட்டார்.

Published:Updated:
உமா மகேஸ்வரி

வேலூர் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் குடியாத்தம் கிளை மேலாளராக உமா மகேஸ்வரி என்ற பெண் 2018-2019-ம் ஆண்டில் பணிபுரிந்துவந்தார். அப்போது, மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கியதாக போலி ஆவணங்களைத் தயாரித்து ரூ.97,37,000 பணத்தை மோசடி செய்து அவர் சுருட்டியிருக்கிறார். இது குறித்து, துறை உயரதிகாரிகளுக்குப் புகார் சென்றது. அதையடுத்து, குடியாத்தம் வங்கியில் தணிக்கை செய்யப்பட்டபோது, பண மோசடி நடந்திருப்பது உறுதியானது. இதைத் தொடர்ந்து, கூட்டுறவு சங்க துணைப்பதிவாளர் அருட்பெருஞ்ஜோதி, வேலூர் மாவட்ட வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸில் புகார் செய்தார்.

உமா மகேஸ்வரி
உமா மகேஸ்வரி

இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழக்கு பதிவு செய்து, உமா மகேஸ்வரியைக் கைதுசெய்தார். விசாரணைக்குப் பின்னர் வேலூர் ஜே.எம்-2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். உமா மகேஸ்வரி தற்போது வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாளராகப் பணியாற்றி வந்ததும் குறிப்பிடத்தக்கது. அதேசமயம், ரூ.97 லட்சம் பண மோசடியில் உமா மகேஸ்வரியைத் தொடர்ந்து மேலும் பலர் சிக்கக்கூடும் என வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் தெரிவித்திருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism