Published:Updated:

`லஞ்சப்புகார்; 3 ஆண்டுகளுக்குப் பிறகு 2 இன்ஸ்பெக்டர்கள் வீடுகளில் விஜிலென்ஸ் ரெய்டு!'

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
இன்ஸ்பெக்டர்கள், சாம்வின்சென்ட் - சரவணன்
இன்ஸ்பெக்டர்கள், சாம்வின்சென்ட் - சரவணன்

சென்னையில் பணியாற்றும் இரண்டு இன்ஸ்பெக்டர்கள் வீடுகள், அவர்களின் உறவினர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் இன்று சோதனை நடத்தினர்.

சென்னை கீழ்ப்பாக்கம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சாம்வின்சென்ட். இவரின் வீடு கீழ்ப்பாக்கம் காவல் குடியிருப்பில் இருக்கிறது. இன்று காலை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், சாம்வின்சென்ட் வீட்டுக்கு திடீரென சென்று அதிரடி சோதனை நடத்தினர். இன்ஸ்பெக்டர் சாம்வின்சென்ட் வீட்டில் சோதனை நடந்து கொண்டிருந்தபோதே, சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிவரும் சரவணன் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. ஒரே நேரத்தில் சென்னையில் பணியாற்றும் இரண்டு இன்ஸ்பெக்டர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை நடத்தியது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இன்ஸ்பெக்டர் சாம்வின்சென்ட்
இன்ஸ்பெக்டர் சாம்வின்சென்ட்
திருவாரூர்: நள்ளிரவில் சோதனை, 155 நெல் மூட்டைகள் பறிமுதல்... அதிரடி காட்டிய லஞ்ச ஒழிப்பு துறை!

இது தொடர்பாகக் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் பேசினோம். ``சாம்வின்சென்ட், சரவணன் ஆகியோர் 8.1.2018 முதல் 15.5.2018 வரை பாலியல் தொழில் தடுப்பு பிரிவில் இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றி வந்தனர். இவர்கள் இருவரும் விபச்சார புரோக்கர்களிடம் லஞ்சம் பெற்றதாக வந்த புகார்களின் அடிப்படையில் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இன்று இருவரின் வீடுகள், அவர்களின் உறவினர்கள் வீடுகள் ஆகியவற்றில் ஒரே நேரத்தில் நாங்கள் சோதனை நடத்திவருகிறோம்.

இன்ஸ்பெக்டர் சரவணன்
இன்ஸ்பெக்டர் சரவணன்

சோதனைக்குப் பிறகுதான் இவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக ஆடியோ ஒன்று கிடைத்திருக்கிறது" என்றார்.

இன்ஸ்பெக்டர்கள் சாம்வின்சென்ட், சரவணன் ஆகியோர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, பாலியல் தொழில் தடுப்பு பிரிவில் பணி புரிந்தனர். அப்போது நடந்தவை, மூன்றாண்டுகளுக்குப்பிறகு தற்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு