Published:Updated:

எஸ்.பி.வேலுமணி மீதான புகார் - திருச்சியில் 2 இடங்களில் விஜிலென்ஸ் ரெய்டு!

திருச்சி ஸ்ரீ கணேசா டிரேடர்ஸ் நிறுவனம்

திருச்சியில் வேலுமணி வழக்கில் தொடர்புடைய இரண்டு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.

எஸ்.பி.வேலுமணி மீதான புகார் - திருச்சியில் 2 இடங்களில் விஜிலென்ஸ் ரெய்டு!

திருச்சியில் வேலுமணி வழக்கில் தொடர்புடைய இரண்டு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.

Published:Updated:
திருச்சி ஸ்ரீ கணேசா டிரேடர்ஸ் நிறுவனம்

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் தெருவிளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்றும் திட்டம் நடந்தது. இதற்கான டெண்டரில் ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்ததாக, முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் வேலுமணிக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.

கணபதி நகரில் உள்ள சுதாகரின் வீடு
கணபதி நகரில் உள்ள சுதாகரின் வீடு

அந்த வகையில், இந்த விவகாரத்தில் தொடர்புடைய திருச்சி WB சாலையிலுள்ள மகாலிங்கம் என்பவருக்குச் சொந்தமான 'ஸ்ரீ கணேசா டிரேடர்ஸ்' நிறுவனத்திலும் காலை முதல், அரியலூர் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி சந்திரசேகர் தலைமையில் ஐந்து பேர் கொண்ட அதிகாரிகள் ரெய்டு நடத்திவருகின்றனர். இந்த நிறுவனம் கடந்த ஆட்சி மட்டுமல்லாமல், தற்போதைய தி.மு.க ஆட்சியிலும் திருச்சி மாநகராட்சிக்குத் தேவையான பொருள்களை டெண்டர் எடுத்து சப்ளை செய்துவருகிறது என்று சொல்கின்றனர்.

அதேபோல சென்னையைத் தலைமையிடமாகக்கொண்டு செயல்படும், 'சமிக்‌ஷா ஏஜென்சீஸ்' என்ற நிறுவனம் சோலார் பேனல் மற்றும் எல்.இ.டி பல்புகளைத் தயாரித்துவருகிறதாம். இந்த நிறுவனத்தின் மூலமாக தமிழகத்தின் பல இடங்களுக்கு எல்.இ.டி பல்ப்புகள் சப்ளை செய்யப்பட்டிருப்பதாகச் சொல்கின்றனர். இந்த நிறுவனத்தின் உரிமையாளரான சுதாகரின் வீடு, திருச்சி திருவானைக்காவல் கணபதி நகரில் இருக்கிறது. அவரது வீட்டிலும் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் பிரசன்ன வெங்கடேசன் தலைமையிலான அதிகாரிகள் தொடர்ந்து ரெய்டு நடத்திவருகின்றனர். தற்போது வரையிலான ரெய்டில் என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன... என்னென்ன ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன போன்ற எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. சோதனை முழுவதுமாக முடிந்த பின்னரே அது குறித்த தகவல்கள் தெரியவரும் என்கின்றனர்.