Published:Updated:

அரியலூர்: நகரப்புற ஊரமைப்பு உதவி இயக்குநர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு!

லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு!

நகரப்புற ஊரமைப்புத்துறை உதவி இயக்குநர் தன்ராஜ் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகப் புகார் எழுந்தது.

அரியலூர்: நகரப்புற ஊரமைப்பு உதவி இயக்குநர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு!

நகரப்புற ஊரமைப்புத்துறை உதவி இயக்குநர் தன்ராஜ் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகப் புகார் எழுந்தது.

Published:Updated:
லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு!

புதுக்கோட்டை நகரப்புற ஊரமைப்பு உதவி இயக்குநராக இருப்பவர் தன்ராஜ். இவர் கூடுதலாக தஞ்சாவூர், சிவகங்கை நகரப்புற ஊரமைப்புத்துறையைக் கவனித்துவருகிறார். இந்த நிலையில், இவர் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகப் புகார் எழுந்தது.

லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு!
லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு!

அதைத் தொடர்ந்து, அரியலூர் நகரில் ஸ்டேட் பேங்க் பின்புறம் உள்ள அவர் வீடு, ஜெயங்கொண்டம் சாலையிலுள்ள அவர் மகன் நடத்திவரும் வாணி ஸ்கேன் சென்டர், அரியலூர் புறவழிச் சாலையிலுள்ள வாணி மஹால் ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி சந்திரசேகர் தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் 36 பேர் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு!
லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு!

அதேபோல, தன்ராஜின் சொந்த கிராமமான கூத்தூர் உள்ளிட்ட ஆறு இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் ரெய்டு நடத்திவருகின்றனர். இந்த ரெய்டு அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.