உத்தரப்பிரதேச மாநிலம் மட்டுமல்லாமல் இப்போது இந்தியா முழுக்க அறியப்பட்ட பெயராக மாறியிருக்கிறார் விகாஷ் துபே.

30 ஆண்டுக்காலமாகக் கொலை, கொள்ளை, நில அபகரிப்பு, ஆள்கடத்தல் எனப் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டுவந்ததாக உத்தரப்பிரதேசத்தில் அறியப்பட்டிருக்கும் விகாஸ் துபே, நமக்கு ஒரு என்கவுன்டர் மரணத்தின் மூலம் தெரியவந்திருக்கிறார்.

உபி மாநிலம், பிக்ரு கிராமத்தில் விகாஸ் துபே ஒரு தனிக்காட்டு ராஜா. பத்தாயிரம் சதுர அடி கொண்ட அவரது வீட்டை ‘யாராலும் நுழைய முடியாத கோட்டை’ என்றே கிராமவாசிகள் சொல்கிறார்கள். சி.சி.டி.வி கண்காணிப்பு, துப்பாக்கி ஏந்திய நபர்களின் பாதுகாப்பு என மிரட்டலான வீட்டுக்குள் அவ்வப்போது அலறல் சத்தம் கேட்கும். அவருக்கோ அவர் அடியாட் களுக்கோ மரியாதை கொடுக்காதவர்களைத் தலைகீழாகக் கட்டித் துன்புறுத்துவது விகாஸின் ஸ்டைல். ஒருமுறை, ஆலமரத் தடியில் அமர்ந்து பஞ்சாயத்து செய்து கொண்டிருக்கும்போது ஒரு பறவை இவர்மீது எச்சமிட்டுவிட்டது. வெகுண்டெழுந்த விகாஸ் துபே, இடுப்பில் இருந்த துப்பாக்கியை எடுத்து குண்டுகள் தீரும் வரை சரமாரியாக மரத்திலிருக்கிற பறவைகளைச் சுட்டிருக்கிறார். இதைக் கேள்விப்படும்போது தெலுங்குப்பட மசாலாக் காட்சியைப்போலத்தான் இருக்கிறது.

ஒரு கொலை வழக்கில் கைது செய்வதற்காக விகாஸ் துபேயின் வீட்டுக்கு, டி.எஸ்.பி தலைமையிலான போலீஸார் ஜூலை 3-ம் தேதி இரவு சென்றனர். அவர்கள் வரும் தகவலை முன்கூட்டியே அறிந்த விகாஸ் கும்பல் ஆயுதங்களுடன் காத்திருந்தது. போலீஸார் சென்றவுடன் அவர்கள்மீது துப்பாக்கியால் சுட்டதில் டி.எஸ்.பி உட்பட எட்டு போலீஸார் உயிரிழந்தனர். போலீஸ் படை வருகிறது என்ற தகவலை, காவல்துறையைச் சேர்ந்த சிலரே விகாஸ் துபேவுக்குத் தெரிவித்துள்ளனர்.

2001-ம் ஆண்டு அக்டோபரில் ஷிவ்லி காவல்நிலையத்துக்குள் புகுந்து சந்தோஷ் சுக்லா என்ற மாநில அமைச்சர் மற்றும் இரண்டு போலீஸாரையும் ஏ.கே. 47 துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற பிறகு, பெரிய கேங்ஸ்டராக உருவெடுத்தார் விகாஷ் துபே. தற்போது இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சரான ராஜ்நாத் சிங், அப்போது உ.பி மாநில முதல்வர். அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பா.ஜ.க-வின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சந்தோஷ் சுக்லாவைத்தான் விகாஸ் துபே சுட்டுக்கொன்றார். சம்பவம் நிகழ்ந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு சரணடைந்த விகாஸ் துபேவுக்கு எதிராக சாட்சி சொல்ல ஒரு போலீஸார்கூட முன்வராததால் வழக்கிலிருந்தே விடுதலையானார். அமைச்சரின் கொலைக்குப் பின் அதிகாரமிக்க அரசியல் புள்ளிகளின் ஆதரவு கிடைக்க அதிகார வர்க்கத்துக்குத் தேவையான சட்ட விரோத காரியங்களைக் கச்சிதமாக முடித்துக்கொடுத்துள்ளார் துபே. ‘இங்கு பத்து ஆண்டுகளாக நான்தான் ராஜா’ என்று 2006-ம் ஆண்டு தெனாவெட்டாக ஒரு பேட்டி கொடுத்தார் விகாஸ் துபே.

தனது ரவுடி ராஜ்ஜியத்தைத் தடையின்றி நடத்திக்கொண்டிருந்த விகாஸ் துபேவுக்கு, ஆட்சியாளர்களுடன் சமீபத்தில் பிணக்கு ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அதைத் தொடர்ந்துதான் அவரைக் கைதுசெய்ய ஜூலை 3-ம் தேதி போலீஸ் படை சென்றுள்ளது. போலீஸாரைச் சுட்டுக்கொன்ற சம்பவத்துக்குப் பிறகு, விகாஸ் துபே தலைமறைவாகிவிட்டார். உ.பி போலீஸார், விகாஸ் துபேயின் வீட்டை புல்டோசர் வைத்து இடித்துத் தள்ளினர். அவருக்குத் தகவல் கொடுத்தவர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். விகாஸ் துபேயின் முக்கியக் கூட்டாளியான தயாசங்கர் அக்னிஹோத்ரி கைதுசெய்யப்பட்டார். துபேயின் வலதுகரமான அமர் துபே மற்றும் ப்ரபாத் இருவரும்கூட என்கவுன்டரிலிருந்து தப்பவில்லை.

ஜூலை 9-ம் தேதி மத்தியப்பிரதேச மாநிலத்தில் சிக்கினார் விகாஸ் துபே. அங்கிருந்து உ.பி கொண்டு வரும்வழியில் வாகனம் ‘விபத்துக்குள்ளாகி’ கவிழ, விகாஸ் போலீஸாரின் துப்பாக்கியை எடுத்து போலீஸாரைச் சுட முயல, என்கவுன்டர் செய்யப்பட்டார். இது போலீஸ் சொல்லும் வெர்ஷன்.

ஒரு என்கவுன்டரில் என்னென்ன மர்மங்கள், கேள்விகள் நிலவுமோ அத்தனையும் விகாஸ் துபே என்கவுன்டரிலும் உள்ளன.

விகாஸ் துபேவைக் கைது செய்த போலீஸார் ஏன் மாஜிஸ்ட்ரேட் முன்பு ஆஜர்படுத்தாமல், மாநிலம் விட்டு மாநிலம் கொண்டுவந்தார்கள்; விகாஸ் கைது செய்யப்பட்டு அழைத்துப் போவது தெரிந்ததும் தொடர்ந்த அத்தனை மீடியா வாகனங்களும் சம்பவ இடத்துக்கு முன்பு உள்ள டோல்கேட்டில் தடுத்து நிறுத்தப்பட்டது ஏன்? குற்றவாளியை விலங்கிடாமல் அழைத்துச் சென்றது ஏன்? வாகனம் விபத்துக்குள்ளான போதுகூட தப்பித்து அருகிலிருக்கும் போலீஸாரின் துப்பாக்கியை எடுக்குமளவு நேரமிருந்ததா என்று அடுக்கடுக்கான கேள்விகள். எல்லா என்கவுன்டர் மரணங்களைப் போலவும் இவற்றையெல்லாம் யோசிக்க நேரமின்றி காவலர்களை மலர் தூவி வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள் உ.பி மக்கள். ‘சட்டம் தன் கடமையைச் செய்தது’ என்கிறார் ஓர் அமைச்சர். அகிலேஷ் யாதவ் ‘நிறைய உண்மைகள் வெளிவந்து ஆளுங்கட்சி கவிழாமல் இருக்க, அந்தக் கார் கவிழ்ந்திருக்கிறது. விகாஸ் துபேவைச் சட்டத்தின் முன் நிறுத்தி, குற்றங்களுக்குப் பின்னணியில் இருந்த அனைவரையும் அடையாளம் கண்டிருக்க வேண்டும்’ என்று கண்டித்திருக்கிறார். 2017லே குற்றவாளிகள் எமலோகத்துக்கு அனுப்பப்படு வார்கள் என்றார் யோகி. இந்த 3 ஆண்டுகளில் மட்டும் 119 பேர் என்கவுன்டர் செய்யப்பட்டி ருக்கிறார்கள். விகாஸைப் பிடிக்கும் ஆப்ரே ஷனிலும் 5 பேர் கொல்லப்பட்டி ருக்கிறார்கள்.

சட்டத்துக்கும் நீதிமன்றத்துக்கும் உள்ள அதிகாரத்தை போலீஸின் துப்பாக்கிக்குக் கொடுத்தால் அந்த ஆயுதம் யாருக்கு எதிராக வேண்டுமானாலும் திரும்பும். யாருக்குச் சாதகமாக வேண்டுமானாலும் திரும்பும். குற்றவாளிகள் என்கவுன்டரில் கொல்லப்படும் போது அந்தக் குற்றங்களைப் பற்றிய உண்மைகளும் கொல்லப்படுகின்றன. விகாஷ் துபே கொல்லப்பட்டுவிட்டார். யார் யார் தப்பித்தார்களோ?