Published:Updated:

`ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியைத் தடுக்கும் மற்ற நிறுவனம்': ரூ.4,370 கோடி அபராதம்! - மத்திய அரசு

போட்டி சட்ட விதிகளை மீறியதாக கடந்த ஐந்து ஆண்டுகளில் 241 நிறுவனங்கள் மீது 4,370 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

`ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியைத் தடுக்கும் மற்ற நிறுவனம்': ரூ.4,370 கோடி அபராதம்! - மத்திய அரசு

போட்டி சட்ட விதிகளை மீறியதாக கடந்த ஐந்து ஆண்டுகளில் 241 நிறுவனங்கள் மீது 4,370 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Published:Updated:

போட்டி சட்ட விதிகளை (competition law) மீறியதாக கடந்த ஐந்து ஆண்டுகளில் 241 நிறுவனங்கள் மீது 4,370 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

laws
laws

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு நிறுவனம் மற்றொரு நிறுவனத்தை வளரவிடாமல் அல்லது செயல்படவிடாமல் தடுக்கும் வகையில் செயல்படுவதை எதிர்க்கும்படி இந்தியா முழுவதும் போட்டி சட்டமானது 2002-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதைத் தொடர்ந்து 2009-ம் ஆண்டில் இந்திய போட்டி ஆணையமும் உருவாக்கப்பட்டது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த ஆணையம் தொழில் மற்றும் வர்த்தகம் தொடர்பான நிறுவனங்களின் செய்கைகளைக் கடந்த 5 வருடமாகக் கண்காணித்து வருகிறது. அரசின் போட்டி சட்ட விதிகளுக்கு புறம்பாக ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியை அழிக்கும் வகையில் மற்றொரு நிறுவனம் செயல்பட்டால் அந்த நிறுவனத்துக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

மத்திய அரசு
மத்திய அரசு

இப்படி இந்த ஆணையத்தின் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 241 நிறுவனங்கள் மீது சுமார் 4,370 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்ட இந்த அபராதத் தொகையில் இருந்து 198 கோடி ரூபாய் மட்டுமே இதுவரையில் பெறப்பட்டுள்ளதாக மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.