Published:Updated:

கொலை வழக்கில் ஜாமீன் முயற்சி; நண்பருக்கு சிறைக்குள்ளே அடி, உதை - விருதுநகர் கிளைச் சிறையில் பரபரப்பு

வசந்தபாண்டி - இருளாண்டி

விருதுநகர் கிளைச் சிறையில் கொலைக் குற்றவாளிகளாக அடைக்கப்பட்டிருந்தவர்கள்‌ இடையே ஜாமீன் பெறுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டதில், சக நண்பரை அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலை வழக்கில் ஜாமீன் முயற்சி; நண்பருக்கு சிறைக்குள்ளே அடி, உதை - விருதுநகர் கிளைச் சிறையில் பரபரப்பு

விருதுநகர் கிளைச் சிறையில் கொலைக் குற்றவாளிகளாக அடைக்கப்பட்டிருந்தவர்கள்‌ இடையே ஜாமீன் பெறுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டதில், சக நண்பரை அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
வசந்தபாண்டி - இருளாண்டி

விருதுநகரில் மாவட்ட கிளைச் சிறை செயல்பட்டுவருகிறது. இங்கு, கொலை, கொள்ளை, திருட்டு மற்றும் விசாரணைக் கைதிகள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், வீரச்சோழன் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடந்த கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளிகளான இருளாண்டி, வசந்தப்பாண்டி, மற்றோர் இருள் என்ற இருளாண்டி, சிலம்பரசன் ஆகிய நான்கு பேரும் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டு விருதுநகர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கொலை
கொலை

இவர்கள் நான்கு பேரும், விருதுநகர் கிளைச் சிறையின் மேல் பாகத்தில் உள்ள அறையில் ஒன்றாக அடைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், காலை உணவுக்காக கைதிகளை சிறை அதிகாரிகள், திறந்துவிட்டுள்ளனர். அப்போது அவர்கள் நான்கு பேருக்கும் இடையே திடீர் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சிலம்பரசனை, மற்ற மூவரும் சேர்ந்து அடித்து உதைத்து காயப்படுத்தியுள்ளனர். இந்தச் சண்டையில் சிலம்பரசனுக்கு, சில பற்கள் உடைத்து விழுந்ததாகச் சொல்லப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த பிரச்னை குறித்து காயமடைந்த சிலம்பரசனிடம் சிறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில், கொலை வழக்கிலிருந்து ஜாமீன் பெற சிலம்பரசன் முயன்றுகொண்டிருப்பது தெரியவந்தது. இதைத் தெரிந்துகொண்ட இருளாண்டி, வசந்தப்பாண்டி, இருள் என்ற இருளாண்டி ஆகிய மூவரும், தங்களுக்கும் சேர்த்து ஜாமீனுக்கு முயற்சி எடுக்குமாறு சிலம்பரசனை வற்புறுத்தியுள்ளனர். ஆனால் இதற்கு சிலம்பரசன் மறுப்புத் தெரிவிக்கவும் ஆத்திரமடைந்த மற்ற மூவரும், சிலம்பரசனைத் தாக்கி அடித்து உதைத்தது தெரியவந்தது.

வசந்தபாண்டி - இருளாண்டி
வசந்தபாண்டி - இருளாண்டி

இந்தச் சம்பவம் தொடர்பாக, சிறைக் கண்காணிப்பாளர் தாமரைக்கனி, விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார்‌ வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கைதிகள் இருளாண்டி, வசந்தபாண்டி, இருள் என்ற இருளாண்டி ஆகிய மூவரும் மதுரை மத்தியச் சிறைக்கு மாற்றப்பட்டனர். காயம்பட்ட சிலம்பரசன்‌ விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism