விருதுநகர் சரக கட்டுப்பாட்டில் உள்ள ஆர்.56 இராஜபாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில், கடந்த 10-ம் தேதி விருதுநகர் மாவட்ட துணைப்பதிவாளர்(பால்வளம்) நவராஜ் திடீர் கணக்கு தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது, அதிக கையிருப்பு தொகை வைத்திருந்தது மற்றும் ரொக்க சிட்டாவின்படி கடந்த 10-ம் தேதி ரூ.6,24,415 கையிருப்பு தொகை குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா ₹999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதையடுத்து ஆர்.56 இராஜபாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச்சங்கத்தில் கையிருப்பு பணம் குறைவுக்கு காரணமான காசாளர் வேல்முருகன் மற்றும் கையாடலை கண்டறிந்து தடுக்க தவறிய சங்க மேலாளர் தங்கமாரியப்பன் ஆகியோரை தற்காலிக பணிநீக்கம் செய்து விருதுநகர் துணைப்பதிவாளர் (பால்வளம்) நவராஜ் உத்தரவிட்டுள்ளார்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism