Published:Updated:

விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கு: 6 நாள் சிபிசிஐடி காவலில் விசாரிக்க அனுமதி!

சிபிசிஐடி அலுவலகம்

விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்டவர்களை ஆறு நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது!

விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கு: 6 நாள் சிபிசிஐடி காவலில் விசாரிக்க அனுமதி!

விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்டவர்களை ஆறு நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது!

Published:Updated:
சிபிசிஐடி அலுவலகம்

விருதுநகர் பாண்டியன் நகர் பகுதியைச் சேர்ந்த 22 வயது பட்டியல் வகுப்பு இளம்பெண்ணை அவரின் காதலர் ஹரிஹரன் உட்பட எட்டுப் பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக இளம்பெண் அளித்த புகாரின் பேரில் விருதுநகர் ஊரக காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவுசெய்து இளம்பெண்ணின் காதலரும், விருதுநகர் திமுக இளைஞரணி உறுப்பினராக இருந்த ஹரிஹரன் அவருடைய நண்பர்கள் மாடசாமி, பிரவீன், விருதுநகர் 10-வது வார்டு திமுக இளைஞரணி அமைப்பாளராக பதவி வகித்துவந்த ஜுனைத் அகமது மற்றும் 17 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள் நான்கு பேர் என எட்டுப் பேரைக் கைதுசெய்தனர்.

சிபிசிஐடி அலுவலகம்
சிபிசிஐடி அலுவலகம்

இதில் ஹரிஹரனும் அவரின் நண்பர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பள்ளிச் சிறுவர்கள் நான்கு பேரும் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தொடர்ந்து நிர்வாகக் காரணங்களுக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஹரிஹரன் உட்பட நான்கு பேரும் மதுரை மத்தியச் சிறைக்கு மாற்றப்பட்டனர். இந்நிலையில் குற்றவாளிகளை, காவலில் எடுத்து விசாரிப்பதற்கு அனுமதி கேட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் தீண்டாமை தடுப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் ஹரிஹரன் உட்பட நான்கு பேரும் மதுரை மத்திய சிறையிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டனர். மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த மனுவின் பேரில், 'இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஹரிஹரன், மாடசாமி, பிரவீன், ஜுனைத் அகமது ஆகிய நான்கு பேரையும் சிபிசிஐடி போலீசார் ஆறு நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து அவர்களை அழைத்துச் சென்ற சிபிசிஐடி போலீஸார், ரகசிய இடத்தில்வைத்து அவர்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.