Published:Updated:

விருதுநகர் இளம்பெண் பாலியல் வழக்கு... ஜாமீனில் வீடு திரும்பிய 3 சிறுவர்கள்

சிபிசிஐடி போலீசார்

விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சிறுவர்களில் 3 பேர் ஜாமீனில் வீடு திரும்பினர். எஞ்சிய ஒருவர் திங்கள்கிழமை வீடு திரும்புகிறார்.

விருதுநகர் இளம்பெண் பாலியல் வழக்கு... ஜாமீனில் வீடு திரும்பிய 3 சிறுவர்கள்

விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சிறுவர்களில் 3 பேர் ஜாமீனில் வீடு திரும்பினர். எஞ்சிய ஒருவர் திங்கள்கிழமை வீடு திரும்புகிறார்.

Published:Updated:
சிபிசிஐடி போலீசார்

விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரிஹரன்(27), ஜுனைத் அகமது(27), மாடசாமி(37), பிரவீன்(22) ஆகிய 4 பேரை கடந்த 29-ம் தேதி 6 நாள்கள் சிபிசிஐடி போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தது. தொடர்ந்து கூர்நோக்கு இல்லத்தில் உள்ள 4 பள்ளி மாணவர்களிடம் கடந்த 1-ம் தேதி சிபிசிஐடி போலீஸ் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தது. இந்நிலையில் 8 பேருடைய சிபிசிஐடி காவல் நிறைவு பெற்றதைத்தொடர்ந்து, ஹரிஹரன், ஜுனைத் அகமது, மாடசாமி, பிரவீன் ஆகிய 4 பேரையும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஸ்ரீவில்லிபுத்தூர் தீண்டாமைத் தடுப்பு நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு சிபிசிஐடி போலீஸார் ஆஜர்படுத்தினர். அவர்களுக்கு வரும் 18-ம் தேதி வரை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

சிபிசிஐடி போலீசார்
சிபிசிஐடி போலீசார்

தொடர்ந்து இளம்பெண் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 8 பேருக்கும் விந்தணு பரிசோதனை செய்ய அனுமதிக்கேட்டு சிபிசிஐடி போலீஸார் விருதுநகரில் உள்ள இளையோர் நீதி குழுமத்திலும் ஸ்ரீவில்லிபுத்தூர் தீண்டாமை தடுப்பு நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்தனர். இதற்கு அனுமதி கிடைத்தன்பேரில் ஹரிஹரன், ஜூனைத் அகமது, மாடசாமி, பிரவீன் மற்றும் 4 பள்ளி சிறுவர்கள் உள்பட 8 பேரும் பலத்த பாதுகாப்புடன் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆய்வகத்திற்கு அழைத்துவரப்பட்டு விந்தணு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்நிலையில், காவல்துறையினர் இந்த வழக்கை முறையாக விசாரிக்கவில்லை என்றும், பள்ளி சிறார்களின் எதிர்காலம் கருதியும் அவர்களுக்கு ஜாமீன்கேட்டு விருதுநகர் இளையோர் நீதிமன்றத்தில் அவர்களது பெற்றோர் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதை விசாரித்த நீதிபதி மருதுபாண்டி, சிறுவர்கள் 4 பேரும், வாராவாரம் வெள்ளிக்கிழமை தோறும் இளையோர் நீதிக்குழுமத்தில் ஒரு மாதத்திற்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும். தொடர்ந்து குழந்தைகள் நல்வாழ்வு மையத்தில் கவுன்சிலிங் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தார். இதைத்தொடர்ந்து, சிறுவர்களை கூர்நோக்கு இல்லத்தில் இருந்து அழைத்து வருவதற்கான பணிகளை அவர்களது பெற்றோர்கள் தொடங்கினர். இதில் 3 சிறுவர்களின் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை உடனடியாக திரும்ப அழைத்துக் கொள்ள நேற்று இரவே மதுரை கூர்நோக்கு இல்லத்துக்கு சென்று ஜாமீன் உத்தரவு ஆணைகளை வழங்கி பிள்ளைகளை திரும்ப அழைத்துக் கொண்டனர். எஞ்சிய ஒரு பள்ளி மாணவருடைய பெற்றோர், திங்கள்கிழமை அவரை அழைத்துச் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism