Published:Updated:

திருச்சி: பழிக்குப் பழி கொல்லப்பட்ட ரெளடிகள்! - கைதான நண்பர்கள் சொன்ன அதிர்ச்சிக் காரணம்

நிஷாந்த் குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதம் சிறையிலிருந்து வெளியே வந்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இயற்கை உபாதை கழிக்கச் சென்ற ரெளடி நிஷாந்தைக் கொலை செய்த கும்பலை போலீஸார் பிடித்து விசாரித்ததில், ``என் நண்பனை ஓட ஓட வெட்டி, துடிதுடிக்கக் கொன்றார்கள். அவன் ஆன்மா சாந்தி அடைய நாங்களும் அதேபோல் கொன்றோம்" என்று போலீஸாரின் முன்னிலையிலே சொல்லியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கொலை
கொலை

திருச்சி பழைய பால்பண்ணை பகுதியைச் சேர்ந்தவர் நிஷாந்த். பிரபல ரெளடி. இவர் மீது தில்லை நகர், காந்தி மார்க்கெட், கோட்டை காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

நிஷந்தைக் கொலை செய்தவர்
நிஷந்தைக் கொலை செய்தவர்

இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த `வாழைக்காய்’ விஜய் என்பவருக்கும் காந்தி மார்க்கெட், பால் பண்ணைப் பகுதிகளில் யார் கஞ்சா விற்பது... யார் பெரிய ரெளடி என்கிற தொழில் போட்டி காரணமாக ஏற்கெனவே முன்விரோதம் இருந்துவந்தது.

கடந்த வருடம் நிஷாந்த், அவரின் நண்பர்கள் ஆறு பேர் சேர்ந்து வாழைக்காய் விஜயைப் பட்டப்பகலில் ஓட ஓட வெட்டிக் கொலை செய்தனர். இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட நிஷாந்த் குண்டர் சட்டத்தின் கீழ் திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதம் சிறையிலிருந்து வெளியே வந்தார்.

திருச்சி: பழிக்குப் பழி கொல்லப்பட்ட ரெளடிகள்! - கைதான நண்பர்கள் சொன்ன அதிர்ச்சிக் காரணம்

இரண்டு நாட்களுக்கு முன்பு ராமகிருஷ்ணா மேம்பாலத்தின் கீழே உள்ள கழிவறையில் இயற்கை உபாதை கழிப்பதற்காகச் சென்ற நிஷாந்த்தை ஒன்பது பேர் கொண்ட கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`இந்த ஏரியாவுல யார் கஞ்சா விற்பது.. யார் பெரிய ரெளடி?’ - திருச்சியை பதற வைத்த ரெளடி கொலை

இது தொடர்பாக காந்தி மார்க்கெட் போலீஸார் நடத்திய விசாரணையில் வாழைக்காய் விஜயின் சகோதரரான அரவிந்த், அவருடைய நண்பர்களான சுரேந்தர், மணிகண்டன், குருமூர்த்தி, காட்டு ராஜா, வேலு உள்ளிட்ட 9 பேரை போலீஸார் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

திருச்சி: பழிக்குப் பழி கொல்லப்பட்ட ரெளடிகள்! - கைதான நண்பர்கள் சொன்ன அதிர்ச்சிக் காரணம்

வழக்கை விசாரித்த போலீஸார் வட்டாரத்தில் பேசினோம். ``கடந்த வருடம் என் நண்பனை ஓட ஓட வெட்டித் துடிதுடிக்கக் கொன்றார்கள். அவன் ஆன்மா சாந்தி அடைய நாங்கள் பத்து நாள்களாகத் திட்டம் போட்டுக் கொன்றோம்' என்று எங்கள் முன்னிலையே சொல்கிறார்கள். அதுவும் கைதுசெய்யப்பட்ட ஒன்பது பேரும் 21 வயதுக்கு உட்பட்டவர்கள். கஞ்சா அடித்துவிட்டு கொலை செய்திருக்கிறார்கள். இன்றைய இளைய தலைமுறை எப்படிப் போகிறதென்று பாருங்கள்' என்று வேதனையை வெளிப்படுத்தினார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு