Published:Updated:

பெண் வதைக் குற்றங்கள்.... நாட்டில் எந்தக் கட்சி எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் முதலிடம்?!

பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் பா.ஜ.கவைச் சேர்ந்த எம்.பிக்கள் எம்.எல்.ஏக்கள் ஈடுபடுவதாக ஆய்வு சொல்கிறது.

பா.ஜ.க-எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் அதிக புகார்
பா.ஜ.க-எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் அதிக புகார்

பிரதமராக மோடி பொறுப்பேற்றதும், `மேக் இன் இந்தியா' என்ற திட்டத்தைக் கொண்டு வந்தார். உள்நாட்டிலேயே அனைத்துப் பொருள்களையும் தயாரிக்கப்பட வேண்டுமென்பது இந்தத் திட்டத்தின் நோக்கம். அண்மையில், ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. பிரசாரத்தின் போது, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மேக் இன் இந்தியா திட்டத்தை கேலி செய்யும் விதமாக, ``நாட்டில் என்ன நடக்கிறது என்று பாருங்கள். ரேப் இன் இந்தியா என்றுதான் சொல்லவேண்டும்" என்று பேசினார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

மேலும், உத்தரப்பிரதேசத்தில் பாரதிய ஜனதா எம்.எல்.ஏ- வே இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்கிறார் என்று ராகுல் காந்தி பேசியிருந்தார். ராகுல் காந்தியின் பேச்சு அப்போதே சர்ச்சையைக் கிளப்பியது. இந்த நிலையில், நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் கடைசி நாளான வெள்ளியன்று ராகுல் காந்தியின் பேச்சால் நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டது.

கூட்டம் தொடங்கியதும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் மேக்வால் பேசுகையில், ``ஜார்கண்ட் தேர்தல் பிரசாரத்தின் போது, காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி மேக் இன் இந்தியா திட்டத்தை கேலி செய்யும்விதமாகப் பேசியுள்ளார். அப்படியென்றால், பாலியல் கொடுமைகளை அவர் வரவேற்கிறாரா? ராகுல் காந்தி தன் பேச்சுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்'' என்றார். மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானியும் ராகுல் காந்திக்குக் கடும் கண்டனம் தெரிவித்தார்.

ராகுல் காந்தி ஒட்டு மொத்த பெண் இனத்தையும் அவமதித்து விட்டார்.
பா.ஜ.க பெண் எம்.பிக்கள்
``என் பெயர் ராகுல் சாவர்க்கர் அல்ல; ராகுல் காந்தி!'' - டெல்லி பேரணியில் சீறிய ராகுல்

``முதன்முறையாக காந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் பாலியல் கொடுமைகள் செய்ய வேண்டுமென்று சொல்கிறார். இதுதான் நாட்டு மக்களுக்கு ராகுல் காந்தி சொல்லும் செய்தியா? அரசியல் பலனுக்காக பெண்களை அவமானப்படுத்துகிறார் ராகுல் காந்தி. சோனியா காந்தி தன் மகனான ராகுல் காந்திக்கு அறிவுரை கூற வேண்டும். ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும்'' என்று கொந்தளித்தார். அதோடு, ஸ்மிரிதியின் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீரும் வடிந்தது. இதைத் தொடர்ந்து, பா.ஜ.க பெண் எம்.பிக்கள் ராகுல் காந்தி பெண்களை அவமானப்படுத்தி விட்டார் என்று கோஷமிட்டனர். மன்னிப்புக் கேட்க வேண்டுமென்றும் வலியுறுத்தினர். இதனால், நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டது. தொடர்ந்து சபாநாயகர் ஓம் பிர்லா, அவையைத் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.

நாடாளுமன்றத்தில் பாலியல் குற்றங்கள் தொடர்பாக சர்ச்சை கிளம்பியுள்ள நிலையில், நாட்டில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட எம்.பி, எம்.எல்.ஏக்கள் பற்றிய ஆய்வு வெளியாகியுள்ளது. அதன்படி, பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த 21 எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ளன. காங்கிரஸ் எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏ க்கள் மீது 16 வழக்குகள் உள்ளன. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் மீது 7 வழக்குகள் இருக்கின்றன.

நாடாளுமன்றத்தில் கண்ணீர் வடிக்கும் ஸ்மிரிதி இரானி
நாடாளுமன்றத்தில் கண்ணீர் வடிக்கும் ஸ்மிரிதி இரானி

ராஜ்யசபா எம்.பிக்கள் மீது, 2009-ம் ஆண்டு 2 பாலியல் குற்றங்கள் இருந்தன. தற்போது, அது 19 ஆக உயர்ந்துள்ளன. ராஜ்சபா எம்.பி வேட்பாளர்களாகப் போட்டியிட்டவர்கள் மீது 126 பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ளன. கடந்த 5 வருடங்களில் பாலியல் வன்கொடுமைகளில் தொடர்புடைய 42 பேருக்குத் தேர்தல்களில் அரசியல் கட்சிகள் சீட் அளித்துள்ளன. பாரதிய ஜனதா கட்சி சட்டமன்றம், ராஜ்சபா மற்றும் மக்களவைத் தேர்தல்களில் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபட்ட 66 பேருக்கு சீட் கொடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சி 46 பேருக்கும் பகுஜன் சமாஜ் கட்சி 40 பேருக்கும் சீட் அளித்துள்ளன.

`ராகுல் பேசியது நாட்டின் மீதான கவலை!' - அமைச்சருக்குப் பதில்கொடுத்த கனிமொழி

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் (16 பேர்) பெண்களுக்கு எதிராக அதிக குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர். ஒடிசா மற்றும் மகாராஷ்டிரா (தலா 12 பேர்) மாநிலங்கள் அடுத்த இடத்தைப் பிடித்துள்ளன. ADR and National Election Watch அமைப்புகள் தற்போதைய 759 எம்.பிக்கள் மற்றும் 4,063 எம்,எல்.ஏ-க்களின் வேட்புமனுக்களை ஆய்வு செய்ததில் இத்தகைய அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.