Published:Updated:

கேரளத்தின் `தண்டர்போல்ட்' என்கவுன்டர்: யார் இந்த கார்த்தி, மணிவாசகம்?

மாவோயிஸ்ட்டுகளைப் பிடிக்க கேரள அரசால் உருவாக்கப்பட்ட 'தண்டர்போல்ட்' எனும் சிறப்பு கமாண்டோ படைப் பிரிவினரால் நடத்தப்படும் என்கவுன்டர்கள், பெரும்அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

Amit Shah and Pinarayi Vijayan
Amit Shah and Pinarayi Vijayan

மாவோயிஸ்ட்டுகளைப் பிடிக்க கேரள அரசால் உருவாக்கப்பட்ட 'தண்டர்போல்ட்' எனும் சிறப்பு கமாண்டோ படைப் பிரிவினரால் நடத்தப்படும் என்கவுன்டர்கள், பெரும்அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மாவோயிஸ்ட்டுகளால் நிறுவப்பட்டுள்ள அமைப்பு, பவானி தளம். அதன் தலைவராக இருந்த மணிவாசகமும் அவரின் சகாக்களும்தான் கொல்லப்பட்டவர்கள். இதில் மணிவாசகம், கார்த்தி இருவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். மற்ற இருவரும் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள். மஞ்சக்கண்டியில் நடந்த இந்த என்கவுன்டர்தான் கேரள சட்டசபை வரை விவாதப்பொருளாக மாறியுள்ளது.

யார் இந்த கார்த்தி? கேரளாவில் தண்டர்போல்ட் பிரிவினரால் சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்ட்டுகளில் ஒருவர் கார்த்தி. கண்ணன் என்றும் அழைக்கப்படும் இவர், சென்னையைச் சேர்ந்தவர். 2001-2004 காலகட்டத்தில், தன்னார்வ உதவிகள், போராட்டங்கள் ஆகியவற்றில் ஈடுபட்டுவந்தார். பிறகு, திருப்பூரில் உள்ள எக்ஸ்போர்ட் கம்பெனி ஒன்றில் பணிக்குச் சேர்ந்தார். 2006-ம் ஆண்டு, திருப்பூரில் மாவோயிஸ்ட் குழு ஒன்றை காவல்துறையினர் கைதுசெய்த போது, கார்த்தியும் அப்போது கைதானார். மதுரை மத்திய சிறை, ஒடிஷா மாநில கோராபுட் சிறை ஆகியவற்றில் அடைக்கப்பட்டிருந்த கார்த்தி, 2010-ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். பிறகு, மாவோயிஸ்ட் அமைப்பின் ராணுவப் பிரிவில் கடந்த ஒன்பது ஆண்டுகளாகச் செயல்பட்டார்.

Encountered Maoists
Encountered Maoists

- எதிர்க்கட்சிகள் முதல் பழங்குடி மக்கள் வரை 'இந்தத் தாக்குதல் போலியானது' என்று குற்றம்சாட்டுகின்றனர். இதுதொடர்பான விரிவான செய்திக் கட்டுரையை ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க > "அமித் ஷா சொல்கிறார்... பினராயி செய்கிறார்!" - என்கவுன்டர் விவகாரம்... கொதிக்கும் மாவோயிஸ்ட்

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ரூ.200 மதிப்பிலான ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே> சப்ஸ்க்ரைப் செய்ய> http://bit.ly/2MuIi5Z |

யார் இந்த மணிவாசகம்?

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர், மணிவாசகம். கல்லூரிப் படிப்பை முடித்ததும் முற்போக்கு இளைஞரணி அமைப்பில் சேர்ந்து, தர்மபுரி பகுதியில் கந்துவட்டி, விவசாயப் பிரச்னைகளுக்காகப் போராடியவர். ஆத்தூரில் தனியார் பள்ளியில் சிலகாலம் ஆசிரியராகப் பணியாற்றினார். பிறகு, மாவோயிஸ்டுகளின் விவசாயிகளுக்கான அமைப்பான உழவர் உழைப்பாளர் மாமன்றத்தின் சேலம் மாவட்ட அமைப்பாளர் ஆனார். அப்போது ஆத்தூர் கீரிப்பட்டியில் தலித் குடியிருப்பு கட்டுவதற்காக நிலங்கள் கையகப்படுத்திய தற்கு ஆதிக்க சக்திகள் எதிர்ப்பு தெரிவித்தன. அவர்களைக் கண்டித்து மணிவாசகம் நடத்திய போராட்டம், அவரை வெளியுலகத்துக்கு அடையாளப்படுத்தியது. கடந்த 2002-ல் ஊத்தங்கரையில் ஆயுதப்பயிற்சி பெற்றபோது கைதுசெய்யப்பட்டு, பொடா சிறைவாசியாக நான்கரை ஆண்டுகள் சிறையில் இருந்தார். அங்கிருந்து வெளியே வந்தவர், 2008-க்குப் பிறகு தலைமறைவாகி மேற்குத் தொடர்ச்சி மலையில் ஆயுதப்படைப் பொறுப்பாளர் ஆனார். மாவோயிஸ்ட் அமைப்பில் இருக்கும் இவரின் மனைவி கலா, தங்கை சந்திரா, தங்கையின் கணவர் சுந்தரமூர்த்தி ஆகியோர் சிறையில் இருக்கின்றனர்.

- எதிர்க்கட்சிகள் முதல் பழங்குடி மக்கள் வரை 'இந்தத் தாக்குதல் போலியானது' என்று குற்றம்சாட்டுகின்றனர். இதுதொடர்பான விரிவான செய்திக் கட்டுரையை ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க > "அமித் ஷா சொல்கிறார்... பினராயி செய்கிறார்!" - என்கவுன்டர் விவகாரம்... கொதிக்கும் மாவோயிஸ்ட் 

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ரூ.200 மதிப்பிலான ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே> சப்ஸ்க்ரைப் செய்ய> http://bit.ly/2MuIi5Z |