Published:Updated:

`அப்பாவே போயிட்டாருடா; இனி யாரு இருக்கா?’ - கணவன் இறந்தநாளில் குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்ற மனைவி

கணவன் இறந்தநாளில் உயிரை மாய்க்க முயன்ற மனைவி
கணவன் இறந்தநாளில் உயிரை மாய்க்க முயன்ற மனைவி

``அம்மா எங்களை எப்படியும் காப்பாத்திடாதேம்மா’ன்னு கையெடுத்துக் கும்பிட்டது எங்க கண்முன்னே நிக்குது சாமி. நாங்க என்னதான் அவளோட மனசைத் தேற்ற முடிவு பண்ணினாலும் அவளோட நினைவுகள் மாறலை.’’

``நான் ரொம்ப நேசிச்ச உங்க அப்பாவே போயிட்டாருடா. இனி யாரும் நம்மைப் அப்படி பார்த்துக்க மாட்டாங்கடா" என்று தனது ஒன்றரை வயது மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு, தாயும் தற்கொலைக்கு முயன்ற சோகமான சம்பவம் திருச்சியில் நடந்துள்ளது.

திருச்சி
திருச்சி

திருச்சி, துறையூர் அருகேயுள்ள பச்சை மலை பூனாட்சித் தெருவைச் சேர்ந்தவர் கார்த்தி. இவரின் மனைவி நிஷா. கடந்த ஆண்டு, ஜூலை 26-ம் தேதி கார்த்திக், குழந்தைக்குப் பால் காய்ச்சும்போது ஸ்டவ் வெடித்து, உடல் முழுவதும் மண்ணெண்ணெய் தெறித்து தீப்பிடித்து சம்பவ இடத்திலேயே இறந்துபோனார். இதையடுத்து கிணத்தூரிலுள்ள தாய் வீட்டில் நிஷா, தனது ஒன்றரை வயது மகன் இளவேனிலுடன் வாழ்ந்துவந்தார். இந்தநிலையில், கணவர் நினைவாக வாழ்ந்துவந்த நிஷா, கணவர் நினைவுதினம் வருவதையொட்டி கடந்த ஒருவார காலமாகச் சோர்வாக இருந்திருக்கிறார்.

திருச்சி:`உங்க போனுக்கு ஓடிபி வந்திருக்கா சார்... அதை உடனே சொல்லுங்க’-பணத்தைப் பறிகொடுத்த ஐடி ஊழியர்

இந்தநிலையில் ஜூலை 25-ம் தேதி காலையில், பெற்றோர் வேலைக்குச் சென்றிருந்தனர். அப்போது,``நாம் உயிரோடு இருந்து என்ன பயன்? நான் ரொம்ப நேசித்த உங்க அப்பாவே போயிட்டாருடா. இனி யாரும் நம்மை அப்படிப் பார்த்துக்க மாட்டாங்கடா" என்று தனது ஒன்றரை வயது மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு, நிஷாவும் விஷம் சாப்பிட்டதோடு அவரது இடது கையிலுள்ள நரம்பை பிளேடால் அறுத்துக்கொண்டு மயங்கிய நிலையில் கிடந்திருக்கிறார்.

திருச்சி
திருச்சி

வெளியில் சென்றிருந்த பெற்றோர் வீடு திரும்பி வந்து பார்த்தபோது நிஷா மயக்கநிலையில் இருந்திருக்கிறார். உடனே அவரின் உறவினர்கள் துறையூர் அரசு மருத்துவமனைக்கு நிஷாவை அழைத்துச் சென்று முதலில் முதலுதவி அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்றுவருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

என்ன நடந்தது என்று அவர்களது உறவினர்கள் தரப்பில் பேசினோம். ``எங்க பொண்ணு, மாப்பிள்ளை மேல அம்புட்டு பாசம்வெச்சிருப்பாருங்க. அந்தத் தம்பியும் பொண்டாட்டி பிள்ளைங்க மேல அவ்வளவு இஷ்டமா இருப்பாருங்க. கஷ்டப்பட்டாலும் ரொம்ப சந்தோஷமா வாழ்ந்த குடும்பங்க. இந்தநிலையிலதான் போன வருஷம் பசங்க அழுவுதுன்னு பால் காய்ச்சும்போது ஸ்டவ் வெடிச்சு இறந்துபோனாருங்க. அன்னிலருந்தே எங்க பொண்ணு நிம்மதி, சந்தோஷத்தை இழந்துட்டாங்க. நாங்க என்னதான் அவளோட மனசைத் தேற்ற முயற்சி பண்ணினாலும் அவளோட நினைவுகள் எதுவும் மாறலை.

கணவன் இறந்தநாளில் உயிரை மாய்க்க முயன்ற மனைவி
கணவன் இறந்தநாளில் உயிரை மாய்க்க முயன்ற மனைவி

கடந்த ஒரு வாரமாகவே சோகமா இருந்தாங்க. அந்த பையனோட நினைப்பு வந்துருச்சுன்னதும் நாங்க ஒண்ணும் பெரிசா கண்டுக்கலை. திடுதிடுப்புனு அடுத்தடுத்த நாள்கள்ல நல்ல புடவையைக் கட்டிக்கிட்டா. அந்தப் புள்ளைக்குப் புடிச்ச தின்பண்டங்களை வாங்கிக்கொடுத்து எல்லாரோடயும் சந்தோஷமா பேசிகிட்டு இருந்தா. எங்களுக்குச் சந்தேகமாகவும் இருந்துச்சு. புள்ளையோட மனசு மாறிருச்சுன்னும் நெனைச்சுதாங்க வேலைக்குப் போனோம். ஆனா அவ, பக்கத்து வீட்டுல இருக்குற அவளோட தோழிகள்கிட்ட சொல்லி அழுதிருக்கா. அந்தப் பொண்ணுங்க, `செத்துப்போயிட்டா எல்லாம் சரியாகிடுமா’னு புத்திமதி சொல்லி அனுப்பிருக்காங்க. அப்படியிருந்தும் மனம் மாறாம மகனுக்கு விஷத்தைக் கொடுத்துட்டு அவளும் விஷம் குடிச்சிருக்கா.

சென்னை: கந்துவட்டிக் கொடுமை; ரூ.15 லட்சம் கடனுக்கு ரூ. 44 லட்சம் கொடுத்த வியாபாரி தற்கொலை!

நாங்க வந்து பார்த்து, `ஏண்டி இப்புடி பண்ணுனே’ன்னு கேட்டதற்கு, `நாங்க உயிரோடு இருந்து என்ன பயன்... நான் ரொம்ப நேசிச்ச அவரே போயிட்டாருல்லாம்மா. இனி யாரு எங்களை அப்படிப் பார்த்துப்பா. அவரு இல்லாத இடத்துல நாங்க இருந்து என்னம்மா பண்ணப்போறோம்?’னு சொன்னதுமே எங்க மனசு பதறிப்போய் மருத்துவமனைக்குத் தூக்கிட்டுப் போனோம். அப்போ அவ, `அம்மா எங்களை எப்படியும் காப்பாத்திடாதெம்மா’ன்னு கையெடுத்துக் கும்பிட்டது எங்க கண்முன்னே நிக்கு சாமின்" என்று வயிற்றில் அடித்துக்கொண்டு அழத் தொடங்கியது நமது மனதைக் கலங்கவைத்தது. குழந்தை உயிரிழந்துவிட்ட நிலையில் நிஷாவுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டுவருகிறது.

அடுத்த கட்டுரைக்கு