Published:Updated:

`ஆபரேஷன் கந்துவட்டி’ : கை மீறிப்போன நிலைமையை மீட்குமா காவல்துறை?!

டி.ஜி.பி சைலேந்திரபாபு

“பெரும்பாலான கந்துவட்டி தற்கொலைகள், கொலைகளெல்லாம் காவல்துறையினரிடம் புகார் வந்த பிறகு அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் நடந்தவைதான்” என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

`ஆபரேஷன் கந்துவட்டி’ : கை மீறிப்போன நிலைமையை மீட்குமா காவல்துறை?!

“பெரும்பாலான கந்துவட்டி தற்கொலைகள், கொலைகளெல்லாம் காவல்துறையினரிடம் புகார் வந்த பிறகு அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் நடந்தவைதான்” என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

Published:Updated:
டி.ஜி.பி சைலேந்திரபாபு

பணம் கொழிக்கும் தொழிலாக விளங்கும் கந்துவட்டியால், தங்களுடைய வசதிகளைப் பெருக்கிக்கொள்ளும் நபர்கள், குற்ற நடவடிக்கைகளையும் பெருக்கிக்கொள்கிறார்கள். சிறு தொழில்களில் தொடங்கி ரியல் எஸ்டேட், சினிமா என முதலீட்டை வேறு பாதைகளுக்கும் திருப்பிவிடுகின்றனர். ஆனாலும், அங்கும் இருப்பது கந்துவட்டிதான். தனியார் நிறுவனமோ, தனியாரோ வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்குவது பற்றி, வரைவுச்சட்டம் ஏற்கெனவே அமலில் இருக்கிறது. அதன்படி, சொத்துப் பத்திரங்களைக் கொடுத்து கடன் பெற்றால், ஆண்டுக்கு ஒன்பது சதவிகித வட்டி வசூலித்துக்கொள்ளலாம். சொத்துப் பத்திரங்கள் கொடுக்காமல், நம்பிக்கையின் அடிப்படையில் கடன் பெற்றால், ஆண்டுக்கு 12 சதவிகித வட்டி வசூலித்துக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி கூறுகிறது. வட்டிக்குப் பணம் கொடுப்பவர், இந்த நடைமுறைகளைப் பின்பற்றினால், மிகவும் குறைவான லாபம் கிடைக்கும். அதனால், அநியாய வட்டி வசூலிக்கின்றனர். காவல்துறையில் புகார் கொடுத்து விசாரிக்கும்போது, இந்த தில்லு முல்லு வெளியாகி, வழக்கு பதிவு வரை செல்கிறது எனவும் ரிசர்வ் வங்கியின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கந்துவட்டி
கந்துவட்டி

1957-ம் ஆண்டு தமிழ்நாடு கடன் கொடுப்போர் சட்டத்தில், எது எவ்வாறு இருப்பினும் எவரொருவர் பிரிவு 3-ன் கீழ் உத்தரவாதத்தை மீறுவாராயின் அல்லது கடன் தொகையை வசூல் செய்ய எவரேனும் கடனாளியைத் தொந்தரவு அல்லது தொந்தரவு செய்ய உடந்தையாக இருப்பாராயின், மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையுடன் ரூ.30 ஆயிரம்வரை அபராதமும் விதிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அப்படியிருந்தும் கந்துவட்டிக் கும்பல் குறித்துப் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்பதற்குப் பல உதாரணங்கள் உண்டு. அதேநேரத்தில் கந்துவட்டி குறித்து புகார் கூறினால் ஆபத்து என்பதால், பெரும்பாலும் யாரும் புகார் செய்வதில்லை என்பது பதிவுசெய்யப்பட்ட புகார்களின் எண்ணிக்கையை வைத்தே கூற முடியும். கந்துவட்டிச் சட்டம் கொண்டுவரப்பட்ட 2003-ம் ஆண்டு பதிவான வழக்குகளின் எண்ணிக்கை 34. அதற்கு அடுத்த ஆண்டு 40 என்றும், 2005-ம் ஆண்டு 42 வழக்குகளும், 2006-ம் ஆண்டு 13 வழக்குகளும், 2007-ம் ஆண்டு எட்டு வழக்குகளும், 2008-ல் இரண்டு வழக்குகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன என்பது இங்கு குறிப்பிடப்படவேண்டிய விஷயம்.

அதேபோல் இந்தியாவில் உள்ள ஆறு லட்சம் கிராமங்களில் 40,000 கிராமங்களில்தான் வங்கிக் கிளைகளே இருக்கின்றன. 10, 20 கிராமங்களுக்கு ஒரு வங்கி என்ற நிலைதான் தற்போதும் இருந்துவருகிறது. அப்படியிருந்தால் கிராமப்புறத்தில் உள்ளவர்களுக்கு எப்படிக் கடன் வழங்க முடியும்... சில கிராமங்களில் வங்கி எங்கு இருக்கிறது என்பதைத் தேடி அலையும் நிலையும் இருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கந்துவட்டி
கந்துவட்டி

இது போன்ற ஒரு சூழலில்தான் தமிழ்நாட்டில் தென்மாவட்டங்களைப் பொறுத்தவரை கந்துவட்டி தொழிலிலிருந்து அந்த மக்களைத் தனியாகப் பிரிக்க முடியாது என்ற அளவுக்குத் தீவிரமாக இருக்கிறது. மேற்கு மாவட்டங்களான கோவை, திருப்பூர் போன்ற இடங்களிலும் இதே நிலைதான். ஒவ்வொரு மாவட்டத்திலும் பணத்தை வசூலிப்பதற்கென்று தனி பாணியைக் கையாளுகிறார்கள். அனைத்து இடங்களிலும் வெளிப்படையாகவே கந்துவட்டித் தொழில் நடைபெறுகிறது.

தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், வியாபார கடைகளுக்குத் தின வசூல் அடிப்படையில் 10 ஆயிரம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்குகின்றனர். வழங்கும்போதே 15 சதவிகிதத் தொகையை வட்டிப்பணமாக பிடித்தம் செய்துகொள்கின்றனர். கடனாளி, 10 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றிருந்தால் தினமும் 100 ரூபாய் வீதம், 100 நாள்களில் செலுத்தி முடிக்க வேண்டும். இல்லாவிடில், நாள் வட்டி அடிப்படையில், வட்டித்தொகை எகிறிக்கொண்டே போகும். அதன் பிறகு, அடியாட்களை அனுப்பி வசூலித்துவிடுவர். இவ்வகை ஃபைனான்ஸியர்கள் ஒவ்வொருவரிடமும் பணம் வசூல் செய்யப் பலர் வேலை செய்கின்றனர். இவ்வாறான கடனளிப்பு முறையில் கந்துவட்டிப் பணம் நகரில் தினமும் கோடிக்கணக்கில் புழங்குவதாக, வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள எந்தக் காய்கறி மார்க்கெட் பக்கம் சென்று பார்த்தாலும், இந்தக் கந்துவட்டிக் கும்பலைப் பார்க்க முடியும் என்கிறார்கள். கொடுக்கும்போதே 1,000 ரூபாய்க்கு 100 முதல் 200 ரூபாய் வரை பிடித்துக்கொண்டு கொடுத்துவிடுவார்கள். மாலைக்குள் நீங்கள் விற்றாலும் சரி, விற்காவிட்டாலும் சரி 1,000 ரூபாயைக் கொடுத்துவிட வேண்டும். இப்படித்தான் சாமானிய மக்கள் தங்கள் தொழிலைச் செய்துகொண்டிருக்கின்றார்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இவ்வாறாக கந்துவட்டி, மீட்டர் வட்டி, மணிநேர வட்டி, தண்டால் வட்டி போன்ற பெயர்களில் வட்டி வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமிருந்தாலும் காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்பதே பாதிக்கப்பட்டவர்களின் கவலையாக இருக்கிறது. ஆனால் பெரும்பாலான கந்துவட்டி தற்கொலைகள், கொலைகள் எல்லாம் காவல்துறையினரிடம் புகார் வந்த பிறகு அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் நடந்தவைதான் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். கந்துவட்டிக் கும்பலை ஏன் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யக் கூடாது என 2013-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் கந்துவட்டிக்கு எதிராகத் தாமாக முன்வந்து வழக்கு பதிவுசெய்து தமிழ்நாடு அரசைக் கேள்வி கேட்டது.

அதோடு “கந்துவட்டி கொடுமை பற்றித் தரப்படும் புகார்களை ஆராய்ந்து மக்களுக்கு உதவி செய்ய மாவட்ட, வட்டார அளவில் கமிட்டிகளை ஏற்படுத்துவது பற்றி அரசு ஆராய வேண்டும். கந்துவட்டி புகார்கள் தொடர்பான புலன் விசாரணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆணையர்கள் கண்காணிக்க வேண்டும். கந்துவட்டி தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட வழக்குகளில் தண்டனை பெற்றோர் பற்றிய விவரங்களைக்கொண்ட அறிக்கையை அவ்வப்போது நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” என்று அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் நீதிமன்ற ஆணைகளை அரசு பின்பற்றியதா என்பது இங்கு கேள்விக்குறிதான்.

சைலேந்திரபாபு
சைலேந்திரபாபு

இந்த நிலையில்தான், `ஆபரேஷன் கந்துவட்டி’ என்ற புதிய நடவடிக்கையை மேற்கொள்ளவிருப்பதாக டி.ஜி.பி சைலேந்திர பாபு அனைத்து போலீஸ் கமிஷனர் மற்றும் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார். அந்தச் சுற்றறிக்கையில், "அதிக வட்டி வாங்கிய நிலுவையிலுள்ள புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்; இந்தப் புகார்கள் மற்றும் வழக்குகள் மீது உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வட்டிக்கு வாங்கியவர்களிடமிருந்து சாட்சிக்காகப் பெறப்பட்ட கையெழுத்துடன்கூடிய வெற்றுக் காகிதங்கள், வெற்றுக் காசோலைகள், சட்ட விரோத ஆவணங்கள் போன்றவற்றைக் கந்துவட்டி விடும் நபர்களிடமிருந்து பறிமுதல் செய்ய வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது கந்துவட்டிக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை பாதிக்கப்பட்டவர்களின் துயர் துடைக்கப்போகிறதா அல்லது இது ஒரு கண் துடைப்பா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism