Published:Updated:

"நான் ரெளடி; உங்க வாழ்க்கையவே அழிச்சிடுவேன்னு மிரட்டுறாரு!"– பாஜக சூர்யா சிவா மீது பெண் பகீர் புகார்

சூர்யா சிவா ( DIXITH )

‘நான் சாதாரணமாகப் பேசிக்கிட்டு இருக்கேன்னு நினைக்கிறீங்களா… நான் ரெளடி. நான் கட்சியில இருக்கேன். உங்க தொழிலை முடக்கி, வாழ்க்கையை நாசமாக்கிடுவேன்’ என சூர்யா மிரட்டியதாக புகாரளித்திருக்கிறார் அந்தப் பெண்.

"நான் ரெளடி; உங்க வாழ்க்கையவே அழிச்சிடுவேன்னு மிரட்டுறாரு!"– பாஜக சூர்யா சிவா மீது பெண் பகீர் புகார்

‘நான் சாதாரணமாகப் பேசிக்கிட்டு இருக்கேன்னு நினைக்கிறீங்களா… நான் ரெளடி. நான் கட்சியில இருக்கேன். உங்க தொழிலை முடக்கி, வாழ்க்கையை நாசமாக்கிடுவேன்’ என சூர்யா மிரட்டியதாக புகாரளித்திருக்கிறார் அந்தப் பெண்.

Published:Updated:
சூர்யா சிவா ( DIXITH )

திருச்சி, எடமலைப்பட்டி புதூரைச் சேர்ந்தவர் ஆர்த்தி. இவர் திருச்சி உய்யகொண்டான் திருமலை சண்முகா நகர் 3-வது குறுக்குசாலையில் உள்ள தனது வீட்டில்வைத்து, அரசு அனுமதி பெற்ற ‘ஏபிசி மான்டிசோரி’ என்ற பெயரில் பள்ளி ஒன்றை நடத்திவந்திருக்கிறார். இந்த நிலையில், உடல்நிலை சரியில்லாத காரணத்தால், ஆர்த்தி அந்தப் பள்ளியை அத்தினா சூர்யா என்பவரிடம் ஒப்படைத்திருக்கிறார். இந்த அத்தினா சூர்யா, தி.மு.க எம்.பி திருச்சி சிவாவின் மகனும், பா.ஜ.க., ஓ.பி.சி பிரிவு பொதுச்செயலாளருமான சூர்யா சிவாவின் மனைவி. `பள்ளியின் அனுமதி (லைசென்ஸ்) முடிவடையும் வரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்’ என்றதோடு, பள்ளி அமைந்திருக்கும் வீட்டுக்கு வாடகை ஒப்பந்தப் பத்திரம் போட்ட பின்னரே ஆர்த்தி தன்னுடைய பள்ளியை, அத்தினா சூர்யாவுக்குக் கொடுத்திருக்கிறார்.

புகாரளிக்க கணவருடன் வந்த ஆர்த்தி
புகாரளிக்க கணவருடன் வந்த ஆர்த்தி

இந்த நிலையில், பள்ளிக்கான லைசென்ஸ் முடிந்ததோடு, வாடகை ஒப்பந்தப் பத்திரத்தின் காலக்கெடு முடிந்த பின்னரும் அத்தினா சூர்யா இடத்தை காலி செய்ய மறுத்ததாகச் சொல்லப்படுகிறது. இதற்கிடையே, வாடகையைக் கொடுக்காமல், இடத்தைக் காலி செய்யவும் முடியாது என்று சொன்னதோடு, ‘நான் ரெளடி. உன்னையும் உன் குடும்பத்தையும் அழிச்சிடுவேன். நான் பா.ஜ.க-வுல மாநிலப் பொறுப்புல இருக்கேன். என்னை ஒண்ணும் செய்ய முடியாது’ என சூர்யா சிவா மிரட்டல் விடுத்து சொத்தை அபகரிக்க முயல்வதாக, ஆர்த்தி பகிரங்கமான குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.

சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கும் பள்ளி
சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கும் பள்ளி

இது குறித்து திருச்சி காவல் ஆணையகரத்தில் புகாரளித்திருக்கும் ஆர்த்தியிடம் பேசினோம். ``2013-ல இருந்து என்னோட சொந்த வீட்டுல ஆறு வருஷமா இந்த ஸ்கூலை நான் நடத்திட்டுவந்தேன். ஒருசில காரணங்களால என்னால தொடர்ந்து நடத்த முடியலை. அந்தச் சமயத்துல ‘இந்த ஸ்கூலை என்னால நடத்த முடியலை. வேற யாருக்காவது மாத்திவிடலாம்னு இருக்கேன்’ன்னு என்னோட ஃப்ரெண்டான எம்.பி திருச்சி சிவாவின் மகள் காயத்ரி சிவாகிட்ட சொல்லியிருந்தேன். அதுக்கு அவங்க, ‘என் தம்பியோட மனைவி அத்தினா சூர்யா, ஸ்கூலை எடுத்து நடத்த ஆர்வமாக இருக்காங்க’ன்னு சொன்னாங்க. என் பேர்ல இருக்கற லைசென்ஸை மூணு வருஷம் முடியுற வரைக்கும் பயன்படுத்திக்கோங்க. அதுக்குப் பின்னாடி அந்த லைசென்ஸை உங்க பேருக்கு மாத்திக்கிட்டு, இங்க இருந்து ஸ்கூலை காலி பண்ணிடுங்கன்னு பேசியிருந்தோம். ஸ்கூலுக்கான வாடகைக்கு தனியாக வாடகைப் பத்திரம் எழுதியிருந்தோம். இப்படியான நிலையில் ஸ்கூலுக்கான லைசென்ஸ் முடிஞ்சு ஒராண்டாகியும், பள்ளி இடத்துக்கான வாடகை ஒப்பந்தக் கெடு முடிஞ்சு அஞ்சு மாசங்களாகியும் இடத்தை காலி செய்ய மாட்டேங்குறாங்க. ஏழுஒ மாத வாடகையும் கொடுக்காம இருக்காங்க. பள்ளியின் கட்டடமான எங்க வீடு 30 ஆண்டுகள் கடந்து பழுதான நிலையிலும், அங்கு தொடர்ந்து அட்மிஷன் போட்டு பள்ளியை நடத்திட்டு வர்றாங்க. பள்ளியில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அது என் பெயரில்தான் வரும்.

இது சம்பந்தமாக அத்தினா சூர்யாகிட்ட பேசுனப்ப, ‘எதுவா இருந்தாலும் என் வீட்டுக்காரர்கிட்ட பேசிக்குங்க’ன்னு சொல்லிட்டாங்க. அதுவரைக்கும் சூர்யா சிவாகிட்ட எங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. இப்படியான நிலையில் சூர்யா சிவாவை என்னுடைய கணவர் சந்தித்தபோது, ‘நான் சாதாரணமாகப் பேசிக்கிட்டு இருக்கேன்னு நினைக்கிறீங்களா… நான் ரெளடி. நான் கட்சியில இருக்கேன். உங்க தொழிலை முடக்கி, வாழ்க்கையை நாசமாக்கிடுவேன்’ என மிரட்டினார். கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள எங்களது சொத்தை அபகரிக்கும் நோக்கத்தில்தான் சூர்யா சிவா இப்படிச் செயல்பட்டுவருகிறார். இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து எங்களோட வீட்டை மீட்டுத் தரணும்” என்றார்.