Published:Updated:

விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கு: மெடிக்கல் குடோனுக்கு அழைத்துச் சென்று விசாரித்த சிபிசிஐடி!

மெடிக்கல் குடோனுக்கு அழைத்துச் சென்று விசாரித்த சிபிசிஐடி
News
மெடிக்கல் குடோனுக்கு அழைத்துச் சென்று விசாரித்த சிபிசிஐடி

விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதுசெய்யப்பட்டவர்களில் ஹரிஹரன், ஜூனைத் அகமதுவை மெடிக்கல் குடோனுக்கு அழைத்துச் சென்று சிபிசிஐடி போலீஸ் விசாரித்தனர்.

விருதுநகர் பாண்டியன் நகர் பகுதியைச் சேர்ந்த 22 வயது பட்டியல் வகுப்பு இளம்பெண்ணை அவரின் காதலன் ஹரிஹரன் உட்பட எட்டுப் பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக இளம்பெண் அளித்த புகாரின் பேரில் விருதுநகர் ஊரக காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவுசெய்து இளம்பெண்ணின் காதலரும், விருதுநகர் திமுக இளைஞரணி உறுப்பினராக இருந்தவருமான ஹரிஹரன், அவருடைய நண்பர்கள் மாடசாமி, பிரவீன், விருதுநகர் 10-வது வார்டு திமுக இளைஞரணி அமைப்பாளராக பதவி வகித்துவந்த ஜூனைத் அகமது மற்றும் 17 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள் நான்கு பேர் என எட்டுப் பேரை கைதுசெய்தனர். இதில் ஹரிஹரனும், அவரின் நண்பர்களும் மதுரைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிபிசிஐடி
சிபிசிஐடி

பள்ளிச் சிறுவர்கள் நான்கு பேரும் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, குற்றவாளிகளைக் காவலில் எடுத்து விசாரிப்பதற்கு அனுமதி கேட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் தீண்டாமை தடுப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் மனுத்தாக்கல் செய்தனர்.

மெடிக்கல் குடோன்
மெடிக்கல் குடோன்

இந்த மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு ஹரிஹரன் உட்பட நான்கு பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மனுவை விசாரித்த நீதிபதி கோபிநாத், ``இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஹரிஹரன், மாடசாமி, பிரவீன், ஜூனைத் அகமது ஆகிய நான்கு பேரையும் ஆறு நாள்கள் சிபிசிஐடி போலீஸார் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். தொடர்ந்து அவர்களை வரும் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் அவர் உத்தரவிட்டார்.

இந்நிலையில் ஹரிஹரன் உட்பட நான்கு பேரிடமும் தனித்தனியே சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுவந்தனர். தொடர்ந்து, பெத்தனாட்சி நகரிலுள்ள ஹரிஹரனின் மெடிக்கல் குடோனில்வைத்து ஹரிஹரன், ஜூனைத் அகமதுவிடம் விசாரணை நடத்தினர்.

படுக்கையறை
படுக்கையறை

மெடிக்கல் குடோன் அறைகள், பாத்ரூம், படுக்கையறை உள்ளிட்ட சகல வசதிகளையும்கொண்ட இடமாக இருந்தன. மருந்து குடோனில் அங்குலம் அங்குலமாகச் சோதனை செய்த அதிகாரிகள், நடந்த சம்பவம் குறித்து ஹரிஹரன், ஜூனைத் அகமதுவிடம் தனித்தனியாகவும் பின் ஒன்றாகச் சேர்த்தும் விசாரணை மேற்கொண்டு வாக்குமூலம் பதிவுசெய்தனர். இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது.