Published:Updated:

சீர்காழி: திருமணமான 6 மாதத்தில் பெண் மர்ம மரணம்! - வரதட்சணை கொடுமை காரணமா?

 மர்ம மரணமடைந்த ரஞ்சிதா
மர்ம மரணமடைந்த ரஞ்சிதா

ரஞ்சிதாவுக்கு திருமணமாகி ஆறு மாதங்களே ஆகியிருப்பதால், மயிலாடுதுறை ஆர்.டி.ஓ மகாராணி தனி விசாரணை மேற்கொண்டிருக்கிறார்.

சீர்காழி அருகே திருமணமாகி ஆறே மாதங்களில் பெண் ஒருவர் மர்மமான முறையில் தூக்கிட்டு இறந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டிருக்கிறார்கள்.

 ரஞ்சிதா
ரஞ்சிதா

நாகை மாவட்டம், சீர்காழி அருகே நல்லூர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் ராஜேஷ் ( வயது 30). டீக்கடை நடத்திவருகிறார். இவருக்கும் ஆயங்குடிபள்ளம் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சிதா (வயது 25) என்பவருக்கும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இந்தநிலையில் நேற்று ராஜேஷும் அவருடைய தாரும் வெளியூருக்குச் சென்றிருக்கிறார்கள். அப்போது வீட்டில் தனியாக இருந்த ரஞ்சிதா இரவில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்திருக்கிறார். தகவலறிந்து கணவர் ராஜேஷ் , ராஜேஷின் தாயார், ரஞ்சிதா குடும்பத்தினர் வந்து பார்த்திருக்கிறார்கள்.

நெல்லை: வெடிகுண்டு வீசி, கழுத்தை அறுத்து இரு பெண்கள் கொடூரக் கொலை! - உறையவைத்த பழிக்குப் பழி சம்பவம்

அதைத் தொடர்ந்து இன்று காலை தனது சகோதரியின் சாவில் மர்மம் இருப்பதாக ரஞ்சிதாவின் அண்ணன் வீரமணி, கொள்ளிடம் போலீஸில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் விரைந்து சென்று ரஞ்சிதாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

காவல் நிலையம்
காவல் நிலையம்

திருமணம் ஆன நாள் முதல் ராஜேஷும், அவரின் தாயாரும் வரதட்சணையாக மேலும் தங்க நகைகள் கேட்டு ரஞ்சிதாவை அடித்துத் துன்புறுத்திவந்ததாகவும், ஆடி மாதம் பிறந்த வீட்டுக்கு வந்த ரஞ்சிதா, திரும்ப கணவர் வீட்டுக்குச் செல்லவே அஞ்சியதாகவும் கூறப்படுகிறது. ரஞ்சிதா இறந்த இடத்தில் பொருள்கள் அடித்து நொறுக்கப்பட்டு சிதறிக்கிடந்ததாகவும் ரஞ்சிதாவின் உறவினர்கள் கூறுகிறார்கள். ரஞ்சிதாவுக்கு திருமணமாகி ஆறு மாதங்களே ஆகியிருப்பதால் மயிலாடுதுறை ஆர்.டி.ஓ மகாராணி தனி விசாரணை மேற்கொண்டிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு