Published:Updated:

திருச்சி: வேலைக்குச் சென்று வீடு திரும்பாத இளைஞர்; சடலமாக மீட்பு - போலீஸ் தீவிர விசாரணை

சம்பவ இடம்

திருச்சியில் சாலையோரம் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருச்சி: வேலைக்குச் சென்று வீடு திரும்பாத இளைஞர்; சடலமாக மீட்பு - போலீஸ் தீவிர விசாரணை

திருச்சியில் சாலையோரம் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
சம்பவ இடம்

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் சீதாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (25). எம்.பி.ஏ பட்டதாரியான இவர் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகேயுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவந்திருக்கிறார். தினமும் மண்ணச்சநல்லூரிலிருந்து திருச்சி மன்னார்புரம் வரை பைக்கில் வரும் பாஸ்கரன், அங்கு பைக்கை நிறுத்திவிட்டு கம்பெனி வேனில் வேலைக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்படி செவ்வாய்க்கிழமை வேலைக்குச் சென்ற பாஸ்கரன் அன்றைய தினம் வீடு திரும்பாமல் இருந்திருக்கிறார். அவரின் செல்போன் எண்ணும் ஸ்விட்ச் ஆஃப்பில் இருந்துள்ளது. பதறிப்போன பெற்றோர் பாஸ்கரன் வேலை செய்த கம்பெனி மற்றும் அவரின் நண்பர்களிடம் விசாரிக்க, ‘வேலை முடிந்து பாஸ்கரன் வீட்டுக்குக் கிளம்பிவிட்டாரே’ என்றே பதில் வந்திருக்கிறது.

சம்பவ இடம்
சம்பவ இடம்

‘என்னவோ நடந்திருக்கிறது’ என பயந்துபோன பாஸ்கரனின் பெற்றோர் மற்றும் உறவினர் திருச்சி கே.கே.நகர் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் கொடுத்துள்ளனர். இந்நிலையில், நேற்று திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மன்னார்புரம் அருகே ராணுவ மைதான தளத்தின் சாலையோரம் ஆண் சடலம் ஒன்றுல் கிடந்துள்ளது. அந்த வழியாகச் சென்றவர்கள் உடனே அது குறித்த தகவலை போலீஸாருக்குக் கொடுத்துள்ளனர். அதையடுத்து சம்பவ இடத்துக்கு கே.கே.நகர் போலீஸார் வந்து பார்க்க, மாயமான பாஸ்கரன் சடலமாகக் கிடந்தது தெரியவந்திருக்கிறது. இறந்து கிடந்தது பாஸ்கரன்தான் என்பதை அவரின் குடும்பத்தாரை வைத்து உறுதிபடுத்திக்கொண்ட போலீஸார், சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

உயிரிழந்த பாஸ்கரனின் முகம் மற்றும் உடலில் கடுமையான ரத்தக்காயம் இருந்திருக்கிறது. மரக்கட்டை மற்றும் கல்லை வைத்து தாக்கி பாஸ்கரனைக் கொலை செய்ததற்கான தடயங்கள் சம்பவ இடத்தில் கிடைத்திருப்பதாகச் சொல்கின்றனர். யார் கொலை செய்தது... முன்பகையால் பாஸ்கரன் கடத்திக் கொலை செய்யப்பட்டாரா என வழக்கு பதிவுசெய்து போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர்.