Published:Updated:

கிரிப்டோகரன்சி மசோதா... என்ன செய்யப்போகிறது அரசாங்கம்..?

கிரிப்டோகரன்சி
பிரீமியம் ஸ்டோரி
News
கிரிப்டோகரன்சி

கிரிப்டோகரன்சி

கிரிப்டோகரன்சி மசோதா... என்ன செய்யப்போகிறது அரசாங்கம்..?

கிரிப்டோகரன்சி

Published:Updated:
கிரிப்டோகரன்சி
பிரீமியம் ஸ்டோரி
News
கிரிப்டோகரன்சி

'கிரிப்டோகரன்சிக்குத் தடை’ என்கிற செய்தியைத்தான் சில நாள்களுக்கு முன்பு எல்லா மீடியாக்களும் பேசின. கிரிப்டோகரன்சியை வரைமுறைப்படுத்த வரும் குளிர்காலக் கூட்டத் தொடரில் ஒரு மசோதா தாக்கல் செய்யப்படும் என்கிற ஒரு வரித் தகவலை வைத்து, ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் பேச, கடைசியில் பலரும் குழம்பிப்போனதுதான் மிச்சம். கிரிப்டோ கரன்சிக்கு மத்திய அரசாங்கம் தடை கொண்டு வரப்போகிறதா, இந்த விஷயத்தில் மத்திய அரசாங்கம் என்ன செய்யப்போகிறது?

கிரிப்டோகரன்சியானது உலக அளவில் வர்த்தகமாகத் தொடங்கிய காலத்தில் இருந்தே, நம் நாட்டிலும் வர்த்தகமாகத் தொடங்கிவிட்டது. இந்த கரன்சி வர்த்தகமாவதை மத்திய அரசாங்கம் பல ஆண்டுகளுக்கு கண்டுகொள்ளவில்லை. காரணம், மிகச் சொற்பமானவர்களே இதில் பணம் போட்டனர். ஆனால், 2016-க்குப் பிறகு, பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பின்னர், இதில் பணம் போடுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.

கிரிப்டோகரன்சி மசோதா... என்ன செய்யப்போகிறது அரசாங்கம்..?

இதைப் பார்த்து அதிர்ந்துபோன மத்திய அரசாங்கம், கிரிப்டோகரன்சிகள் வர்த்தகமாவதைத் தடுக்க, நேரடியாக நடவடிக்கை எடுக்காமல், மறைமுகமாக நடவடிக்கை எடுத்தது. அதாவது, கிரிப்டோகரன்சி வாங்கியவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் வைத்திருந்த கணக்குகளை முடக்கும்படி வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ உத்தரவிட்டது. ஏறக்குறைய ஓர் ஆண்டுக் காலத்துக்கு இந்த மறைமுகத் தடை நடைமுறையில் இருந்தது. பிற்பாடு, ஆர்.பி.ஐ-யின் இந்த நடவடிக்கையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட, அதில் வந்த தீர்ப்பு, கிரிப்டோகரன்சி வர்த்தகத்துக்கு ஆதரவாக அமைந்தது.

கோவிட்-19 பெருந்தொற்று வந்தபின், கிரிப்டோ கரன்சியின் முக்கியமான கரன்சியான பிட்காயின் மதிப்பு ஏகத்துக்கும் அதிகரிக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து, நம் நாட்டவர்கள் இன்னும் அதிக அளவில் இதில் பணம் போடத் தொடங்கினார்கள். இனியும் இதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கக் கூடாது என்று நினைத்த மத்திய அரசாங்கம், அதை வரைமுறைப்படுத்த ஒரு மசோதாவை கடந்த ஆண்டு குளிர்காலக் கூட்டத் தொடரிலேயே கொண்டு வர நினைத்தது. ஆனால், எந்தமாதிரியான வரைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளைக் கொண்டு வரலாம் என்கிற தெளிவு அப்போது மத்திய அரசுக்கு இல்லை என்பதால், இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யாமல் காலம் கடத்தியது.

இந்த நிலையில், கடந்த ஓராண்டுக் காலத்தில் இதில் பணம் போடுகிறவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்ந்ததே தவிர, கொஞ்சம்கூட குறையவில்லை. இன்றைய தேதியில், கிரிப்டோகரன்சியில் எத்தனை பேர், எவ்வளவு பணம் போட்டிருக்கிறார்கள் என்கிற தெளிவான புள்ளிவிவரங்கள் இல்லை என்றாலும், சுமார் 5 கோடி பேருக்கு மேற்பட்ட இந்தியர்கள் கிரிப்டோகரன்சியில் பணம் போட்டிருக்கலாம் என்கிற தகவலை வெளிநாட்டு நிறுவனம் ஒன்று வெளியிட, எல்லோரும் அதிசயித்துப் போனார்கள்.

மேலும், கிரிப்டோகரன்சி வர்த்தகத்தை நம் நாட்டில் அனுமதிக்கலாமா, கூடாதா என்பதைக் கண்டறிந்து சொல்வதற்காக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற நிலைக் குழுவும், இதற்குத் தடை விதிக்கக் கூடாது; இதை முறைப்படுத்தவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது.

இந்த விஷயத்தில் நிலைமை கைமீறிப் போவதை உணர்ந்த ரிசர்வ் வங்கியின் தலைவர் சக்தி காந்த தாஸ், கிரிப்டோகரன்சி பற்றி வெளிப்படையாகப் பேச ஆரம்பித்தார். ‘‘கிரிப்டோ கரன்சியில் இருக்கும் ஆபத்தை நாம் உணர வேண்டும்’’ என்று அவர் எச்சரித்தார். அவரைத் தொடர்ந்து, கிரிப்டோ கரன்சியைப் பற்றி பேசிய பிரதமர் மோடி, ‘‘கிரிப்டோ கரன்சி மூலம் தீவிரவாதிகளுக்குப் பணம் அனுப்பப்படுவது தடுக்கப்பட வேண்டும். இந்த கரன்சியானது தீயவர்களின் கைகளில் சிக்கிவிடக் கூடாது’’ என்று பேசினார்.

இதைத் தொடர்ந்து, இந்த கரன்சிகளின் செயல்பாட்டை வரைமுறைப்படுத்த ஒரு மசோதா கொண்டுவரப்பட உள்ளது. இன்றைய தேதியில், சுமார் 1.5 கோடி இந்தியர்கள் கிரிப்டோ கரன்சியை வாங்கி இருக்கலாம் என்றும், கிட்டத்தட்ட ரூ.42,000 கோடி அளவுக்கு நம் நாட்ட வர்கள் அதில் பணம் போட்டிருக் கலாம் என்றும் சொல்கிறார்கள்.

கிரிப்டோகரன்சிக்கு சீனா உட்பட சில நாடுகள் தடை விதித் திருப்பதைப்போல, இந்தியாவும் தடை விதிக்கும் என்று சொல்லப் படுகிறது. அதாவது, கிரிப்டோ கரன்சியை உருவாக்கவோ, வெளியிடவோ, அதை வைத் திருக்கவோ கூடாது என்கிற வரைமுறை குளிர்காலத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது என்கிற செய்தி வெளியாகி இருக்கிறது.

இந்த நிலையில், இந்த கரன்சியை ஏற்கெனவே வாங்கி வைத்திருப்பவர்களின் நிலை என்ன என்ற கேள்வி பிறந்துள்ளது. இந்த கரன்சியை வாங்கி வைத் திருப்பவர்கள் அவற்றை விற்று விட்டு, வெளியேற கால அவகாசம் தரப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்தக் கால அவகாசம் சில வாரங்களாகவும் இருக்கலாம் அல்லது சில மாதங்களாகவும் இருக்கலாம். இதற்குள் அவற்றை விற்றுவிட்டு, எல்லோரும் வெளியேறிவிடுவார்கள். அதனால் யாருடையபணமும் முடங்காது என்று அரசுத் தரப்பில் எதிர்பார்க் கப்படுகிறது.

கிரிப்டோகரன்சி மசோதா... என்ன செய்யப்போகிறது அரசாங்கம்..?

கிரிப்டோகரன்சி வரைமுறை மசோதா பற்றி செய்தி வெளி யானதில் இருந்து, சர்வதேச அளவில் பல்வேறு விதமான கிரிப்டோ கரன்சி தொடர்பான நாணயங் களின் மதிப்பு குறைந்து வருகிறது. உதாரணமாக, பிட்காயின் மதிப்பு கடந்த வாரம் செவ்வாய் மற்றும் புதன்கிழமை மட்டும் 2,500 டாலருக்கு மேல் குறைந்துள்ளது.

இதேபோல, பிற கிரிப்டோ காயின்களின் மதிப்பு குறைந் துள்ளது. இப்படி மதிப்பு குறைவது இனியும் தொடருமா அல்லது மீண்டும் உயரத் தொடங்குமா என்பது மிகப் பெரிய கேள்விதான்.

இந்த நிலையில், கிரிப்டோகரன்சியில் இனியும் பணம் போடலாமா என்பது முக்கியமான கேள்வி ஆகும். இதுவரை இதில் பணம் போடாதவர்கள், இனி இதில் பணம் போடுவதற்குக் கொஞ்சம் பொறுமை காக்கலாம். காரணம், கிரிப்டோகரன்சி தொடர்பான மசோதா எப்படி வரப்போகிறது என்பது பற்றிய தெளிவான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. ஒருவேளை அதற்குத் தடை விதிக்கப்படும்பட்சத்தில், அதில் போடும் பணத்தின் மதிப்பு குறைந்து, சிறிய அளவிலோ, பெரிய அளவிலோ நஷ்டம் வருவதற்கு வாய்ப்புண்டு. எனவே, புதிதாகப் பணம் போடுகிறவர்கள் இது தொடர்பாக இன்னும் தெளிவான தகவல்கள் வந்த பிறகு முடிவு எடுக்கலாம்.

இந்த விஷயத்தில் மத்திய அரசாங்கம் தங்களுடைய நிலைப்பாட்டைத் தெளிவாக அறிவிக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக இருக்கிறது. காரணம், இந்த விஷயத்தில் தொடர்ந்து குழப்பமான நிலையே நிலவும்பட்சத்தில், அதனால் யாருக்கும் எந்தப் பயனும் விளையப்போவதில்லை. ஆனால், தெளிவான முடிவை அறிவிக்கும்பட்சத்தில், நாடாளுமன்றத்தில் இது பற்றி எதிர்க்கட்சிகளும் விளக்கமாக கலந்துரையாடு வதற்குப் பயனுள்ளதாக இருக்கும். ஆக, இந்த விஷயத்தில் மத்திய அரசாங்கம் என்ன செய்யப்போகிறது என்பதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism