ஆசிரியர் பக்கம்
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

வினு விமல் வித்யா: இந்த முகம்தான் அழகா தெரியுது!

ஆண்ட்ரியா
பிரீமியம் ஸ்டோரி
News
ஆண்ட்ரியா

- சஹானா

வினு, விமல், வித்யா மூவரும் அண்ணா நகரில் ஷாப்பிங் செய்து கொண்டிருந்தபோது, மழை பிடித்துக் கொண்டது. அருகிலிருந்த மோமோஸ் கடைக்குள் ஒதுங்கினர்.

ஒரு பிளேட் மோமோஸ் ஆர்டர் செய்தார் வித்யா.

“இந்த வருஷம் டைம் மேகசினோட ‘ஹீரோஸ் ஆஃப் தி இயர்’ யார் தெரியுமா?”

“ஹீரோஸா? நீயே சொல்லு விமல்.”

“இரான் பெண்கள்தான் இந்த வரு ஷத்தோட ஹீரோக்கள்னு டைம் மேக சின் கவர்ல போட்டு அசத்தியிருக் காங்க!”

“ஓ... இரான்ல நடக்கற போராட்டங் களுக்காகவா!”

“ஆமா, வித்யாக்கா. மூணு மாசமா நடந்துகிட்டிருக்கிற போராட்டங்க ளோட பலனா, இரான் அரசு கலா சாரக் காவல்துறையை மூடறதா அறிவிச்சிருக்கு. அதோட ஹிஜாப் தொடர்பான விஷயங்கள்ல மாற்றங் களுக்கான சட்டத்தை உருவாக்க, அட்டர்னி ஜெனரல்கிட்ட அறிக்கை சமர்ப்பிக்கச் சொல்லி யிருக்கு. கூடிய சீக்கிரமே இரானியப் பெண்களுக்கு விடிவுகாலம் பிறக்கட்டும்!’’

“அடடா... ரொம்ப நல்ல நியூஸ் சொல்லியிருக்கே விமல். மோமோஸ் எடு, கொண்டாடு!” என்று தட்டை நீட்டினார் வித்யா.

ஆளுக்கு ஒரு மோமோஸை எடுத்துச் சுவைத்தனர்.

“வித்யாக்கா, சான்ஸே இல்ல... அட்டகாசமா இருக்கு. இன்னும் ரெண்டு பிளேட் சொல்லலாம்” என்றாள் வினு.

“இரான்ல மாஷா இமானி உயிர் இழந்த பிறகுதான் இந்த மாற்றம் வந்திருக்கு பாரேன்...அவங்கதான் இந்தப் போராட்டத்துக்கான ஆரம்ப புள்ளி. அதுக்கப் புறம் 300 பேருக்கு மேல இந்தப் போராட்டங்கள்ல கொல்லப்பட்டிருக்காங்க. ஒரு சின்ன விஷயம்கூட பெண்களுக்கு எவ்வளவு இன்னல்களுக்குப் பிறகு கிடைக்க வேண்டியதாயிருக்கு?” கவலையோடு சொன்னார் வித்யா.

ஸ்நேகா ஜாவாலே
ஸ்நேகா ஜாவாலே

“இந்த வருஷம் பிபிசி தேர்ந்தெடுத்த 100 பெண்கள் லிஸ்ட்ல ஸ்நேகா ஜாவாலேவும் ஒருத்தங்க. 22 வருஷத் துக்கு முன்னால வரதட்சணை கொடுமையால துன்புறுத்தப்பட்டாங்க. ஒருநாள் அவங்க கணவர் மூன்றரை வயசு மகன் முன்னாலேயே ஸ்நேகா மேல மண்ணெண்ணெய் ஊத்திக் கொளுத்திட்டாரு. அழகான முகம் பிளாஸ்டிக் போல திகுதிகுன்னு எரிஞ்சு, தோல் எல்லாம் கருகி விழுந்துருச்சு. அந்தக் குழந்தை எங்கப்பா அம்மாவைக் கொளுத்திட்டா ருன்னு சொல்லிட்டே இருந்திருக்கான். அதுக்கப்புறம் ஹாஸ்பிடல் போய், ட்ரீட்மென்ட் எடுத்துட்டு திரும்பி வந் தாங்க ஸ்நேகா. அவங்க கணவர், மகனை அழைச் சிட்டுப் போயிட்டார். அதுக்கப்புறம் சுயமா வாழ்ந்து காட்டணும்னு லட்சியம் வந்திருக்கு. வேலைக்குப் போனாங்க. நிர்பயா கொடூரத்துக்குப் பிறகு, விழிப்புணர்வு ஏற்படுத்துறதுக்காக வன் புணர்வு செய்யப்பட்ட பெண்கள், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்கள் எல்லாரை யும் வச்சு உலகம் முழுவதும் டிராமா போட் டாங்க. அதுல ஸ்நேகாவும் ஒரு கேரக்டரா நடிச்சாங்க. தன்னை மாதிரி பாதிக்கப்பட்ட வங்களுக்காகப் பல சமூக சேவைகளைச் செஞ்சிட்டு இருக்காங்க. எல்லாரும் என்னோட ஒரிஜினல் முகம் ரொம்ப அழகா இருக்கும்னு சொல்வாங்க. எனக்கு என்னவோ இந்த முகம் தான் அழகா தெரியுதுன்னு சொல்றாங்க ஸ்நேகா!”

“கிரேட் வினு... ஆனா, இப்படியெல்லாம் கொடுமைப்படுத்திட்டு ஆண்களால எப்படித் தான் நிம்மதியா வாழ முடியுதோன்னு புரியல.”

“சரியா சொன்னே விமல்... இதே மாதிரி பிபிசியோட நூறு பெண்கள்ல ப்ரியங்கா சோப்ராவும் ஒருத்தங்க. 2015-ம் வருஷம் அமெரிக்கத் தொலைக்காட்சியில முதன்மை கேரக்டர்ல நடிச்ச முதல் தெற்காசியப் பெண்ணுங்கிற பெருமை இவங்களுக்கு இருக்கு. அதுக்கப்புறம் ஹாலிவுட் படங்கள் லயும் நடிச்சிட்டு வர்றாங்க. நாற்பது வயசுலயும் ஃபேஷன் துறையில கலக்கிட்டிருக்காங்க. அவங்க ஆரம்பத்துல உருவகேலியைச் சந்திச் சிருக்காங்க. அதையெல்லாம் கடந்து, இந்தத் துறையில நிலைக்கணும்னு கடினமா உழைச் சிருக்காங்க. இவ்வளவு உச்சத்துல இருந்தாலும் பாலிவுட்ல ஹீரோவுக்கு இணையான சம்பளம் ஹீரோயினுக்கு கிடையாது. அவங்க வாங்கற சம்பளத்துல 10 பர்சென்ட்தான் நான் வாங்கி யிருக்கேன். இது எந்தவிதத்துல நியாயம்? ஒவ்வொண்ணுக்கும் எனக்காக நானே போராட ஆரம்பிச்சேன். இப்போ பாலிவுட்ல நடிக்கக் கூப்பிட்டா, ஹீரோவுக்கு இணையா சம்பளம் கேட்பேன். என்னை பத்தின விமர் சனங்கள் எல்லாத்துக்கும் பதில் சொல்லிட்டே இருக்க முடியாது. என்னைப் பொறுத்தவரை நான் நேர்மையா இருக்கேன். கடினமா உழைக்கிறேன். என்னால முடிஞ்ச சில விஷயங்களைச் சமூகத்துக்குச் செய்யறேன்னு சொல்லியிருக்காங்க” என்றபடி இன்னொரு பிளேட் மோமோஸ் ஆர்டர் செய்தாள் வினு.

“ஸ்நேகாவாயிருந்தாலும் ப்ரியங்காவாயிருந் தாலும் இந்தச் சமூகம் பெண் என்ற விதத்துல ஒரே மாதிரிதான் ட்ரீட் பண்ணுது” என்று வருத்தப்பட்டார் வித்யா. ஆவிபறக்க பனீர் மோமோஸ் வந்தது.

“பஞ்சாப்ல மோஹா நகரத்தைச் சேர்ந்த மஞ்சித் கவுர், ஆண் மாதிரி தலையில டர்பன் கட்டிட்டு, டிஷர்ட் பேன்ட் போட்டுக்கிட்டு ஸ்நாக்ஸ் கடையை நடத்திட்டு வர்றாங்க. இவங்க ஒரு பெண்ணுங்கிறதே பலருக்கும் தெரியாதாம். எப்பவும் கடையில கூட்டம் இருந்துட்டே இருக்கு. மஞ்சித் கவுர் அஞ்சாவது படிச்சபோது ஸ்டவ் வெடிச்சதுல தள்ளு வண்டி கடை வச்சிருந்த அப்பா விபத்துல சிக்கி பாதிக்கப்பட்டார். குடும்பத்தைக் காப்பாத்தறதுக்காக மஞ்சித் கடையில வேலை செய்ய ஆரம்பிச்சாங்க. அவங்க உழைப்புல தள்ளுவண்டி கடை, இப்போ ஒரு ஹோட்டலா, வளர்ந்திருக்கு. என் மகனைவிட என் மகளால தான் நாங்க இந்த நிலைக்கு வந்திருக்கோம். மஞ்சித்தை எல்லாரும் பாராட்டறப்போ எனக்குப் பெருமையா இருக்குன்னு சொல்றார் அவங்க அப்பா. ஆண் உடையில வேலை செய்யறது மஞ்சித்துக்கு வசதியா இருக்குங் கிறதால தன்னோட கெட்டப்பை இப்படி மாத்திக்கிட்டாங்க” என்றார் வித்யா.

பேச்சை சினிமா பக்கம் திருப்பினாள் விமல்.

‘`பிரிட்டனைச் சேர்ந்த திரைப்பட மையம் ‘சைட் அண்ட் சவுண்ட்’ பத்திரிகையை நடத்திட்டு வருது. இந்த இதழுக்காக பத்து வருஷங்களுக்கு ஒரு தடவை நூறு படங்களைப் பார்த்து, அதுல மிகச் சிறந்த 10 படங்களைத் தேர்ந்தெடுப்பாங்க. 2012-ம் வருஷம் வரைக்கும் ‘சிட்டிசன் கேன்’ங்கிற ஒரே படமே நம்பர் ஒன்னா தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டி ருந்துச்சு. நாற்பது வருஷங்களுக்கு அப்புறம் 2012-ல வேற படத்தைத் தேர்ந்தெடுத்தாங்க. போட்டியில் கலந்துகிட்ட நூறு படங்கள்ல ரெண்டே படங்களைதான் பெண்கள் இயக்கி யிருந்தாங்க. இப்போ 2022-ல அந்த அமைப்பு, ஷாண்டல் அகர்மோன் இயக்கிய ‘ஷன் டீல்மன்’ங்கிற படத்தை மிக மிகச் சிறந்த படமா தேர்ந்தெடுத்திருக்கு. பெல்ஜியத்தைச் சேர்ந்த கணவனை இழந்த பெண், பாலியல் தொழிலாளியா மாறிச் சந்திக்கும் பிரச்னைகள் தான் கதை. 1975-ம் வருஷம் வந்த இந்தப் படத்தை இப்போ சிறந்த படமா தேர்ந் தெடுத்திருக்காங்க. அவசியம் பார்க்க வேண் டிய படம்னு பரிந்துரை செஞ்சிருக்காங்க!”

“அனல் மேலே பனித்துளி’ படம் பார்த்தீங்களா?” என்று கேட்டாள் வினு.

இருவரும் `இல்லை' என தலையாட்டினர்.

 `அனல் மேலே பனித்துளி' - ஆண்ட்ரியா
`அனல் மேலே பனித்துளி' - ஆண்ட்ரியா

“வெற்றிமாறன் தயாரிப்புல ஆர்.கெய்சர் ஆனந்த் எழுதி இயக்கியிருக்கிற படம். சோனி லிவ்ல வெளியாயிருக்கு. ஆண்ட்ரியாதான் ஹீரோயின். தனக்கு கல்யாணம் நிச்சயமான பிறகு, தோழியோட கல்யாணத்துக்குப் போன இடத்துல மதி (ஆண்ட்ரியா), கூட்டுப்பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகறாங்க. நினைவு வந்ததும் தானே எழுந்து, ஹாஸ்பிடல் போறாங்க. அங்கே போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுத்துட்டு வரச் சொல்றாங்க. கம்ப்ளெயின்ட் கொடுக்கப் போறாங்க. இவனா இருக்குமோ, அவனா இருக்குமோன்னு சில பேரைச் சந்தேகப்படறாங்க. உடனே காவல்துறை அந்த ஆட்களைப் பிடிச்சு விசாரிக்குது. மதிக்கு உண்மை தெரிஞ்சதும் காவல்துறை வேற மாதிரி நடந்துக்குது. மதி இந்தப் பிரச்னையை எப்படி எதிர்கொள் றாங்க, அவங்க எதிர்காலம் எப்படி இருக்குதுங் கிறதுதான் கதை. பாதிக்கப்பட்ட பெண்ணை ரொம்ப போல்டாவும் புத்திசாலித்தனமாவும் காட்டியிருக்கிறதுதான் ஹைலைட். நம்ம உடலையே நமக்கு எதிரியா மாத்தறதை நாம ஒரு நாளும் அனுமதிக்கக் கூடாதுன்னு மதி சொல்ற வசனம் அட்டகாசம்!”

“அவசியம் பார்க்கறோம்” என்றார்கள் விமலும் வித்யாவும்.

“நல்லா சாப்பிட்டாச்சு. மழையும் விட்டுருச்சு. கிளம்புவோமா...” என்று வித்யா கேட்க, பில் செட்டில் செய்துவிட்டு மூவரும் கிளம்பினார்கள்.

- அரட்டை அடிப்போம்...

வினு விமல் வித்யா: இந்த முகம்தான் அழகா தெரியுது!

வினு தரும் வித்தியாசமான தகவல்

பெண்களை பற்றி ஆண்களுக்கு எல்லாம் தெரியுமா?

Everything Men Know About Women (பெண்களை பற்றி ஆண்களுக்கு எல்லாம் தெரியும்) என்ற தலைப்பில் உள்ள ஒரு புத்தகத்தில் என்னென்ன எழுதப்பட்டிருக்கிறது தெரியுமா? உளவியலாளர் டாக்டர் ஆலன் ஃபிரான்சிஸ் எழுதிய இந்தப் புத்தகத்தில் ஆண்களின் அறிவு மற்றும் எதிர்ப்பாலினத்தைப் பற்றிய மிக விரிவான புந்துணர்வை வெளிப்படுத்துவதற்காக பல வருட ஆராய்ச்சி மற்றும் ஆயிரக்கணக்கான நேர்காணல்களை வடித்துள்ளார் என்று வேடிக்கையாகச் சொல்லப்படுகிறது. ஏனெனில், இந்தப் புத்தகம் 100 வெற்று பக்கங்களையே கொண்டுள்ளது. நகைச்சுவையாகவோ, தீவிரமான கலைப்படைப்பாகவோ கருதப்படும் இந்த நூலின் வழியாக டாக்டர் ஃபிரான்சிஸ் சொல்லாமல் சொல்ல வருவது என்னவாம்? பெண்களின் மனதைப் பிரித்தறிவது என்பது நடைமுறையில் சாத்தியமில்லாத விஷயம் என்பதைத்தானாம்! அமேசான் தளத்தில் 1995-ம் ஆண்டு முதல் விற்கப்படும் இந்த நூலின் இப்போதைய விலை 7.83 டாலர். கிண்டில் பதிப்பும் உண்டு!