உலகப் புரட்சியாளர் சே குவேராவின் மகள் அலெய்டா சே குவேரா சென்னை வந்திருக்கிறார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய மாநாட்டில் பங்கேற்க திருவனந்தபுரம் வந்த அவர், கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கேரளாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அவருடைய மகள் எஸ்டெஃபானி குவேராவும் உடன் வந்திருக்கிறார்.

கியூபா நாட்டைச் சேர்ந்த புரட்சியாளர் சே குவேரா இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அவர், கேரளாவிலிருந்து ஜனவரி 17-ம் தேதி விமானம் மூலம் சென்னை வந்தார். அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன் ஆகியோர் தலைமையில் விமான நிலையத்தில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் ம.தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவும் பங்கேற்றார்.
அதன் பிறகு, சென்னை தி.நகரிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு தலைமை அலுவலகத்துக்கு அலெய்டா குவேராவும், எஸ்டானிஃபா குவேராவும் சென்றனர். அங்கு நடைபெற்ற கூட்டத்தில், கியூபா இன்று சந்தித்துவரும் பிரச்னைகள் உட்பட பல்வேறு விஷயங்களை அவர் பகிர்ந்துகொண்டார். இன்று (டிசம்பர் 18) பிற்பகல் 3 மணிக்கு சென்னை தி.நகரிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் அலெய்டா பங்கேற்கவிருக்கிறார்.

அதன் பிறகு, சென்னை பிராட்வேயிலுள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் அலெய்டா குவேராவுக்கும், எஸ்டெஃபானி குவேராவுக்கும் மாலை 4:30 மணியளவில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்படவிருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய கியூபா ஒருமைப்பாட்டுக் குழு சார்பில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு சி.பி.எம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமைதாங்குகிறார்.
சி.பி.எம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி, தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் ஏ.கோபண்ணா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.ஹெச் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., ம.தி.மு.க தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ, திரைக்கலைஞர் ரோகிணி உள்ளிட்டோர் பங்கேற்கவிருக்கிறார்கள்.