Published:Updated:

MBBS: மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு; கடைசி நாள் என்ன?

MBBS
News
MBBS

"கலந்தாய்வின் போது சான்றிதழ்களைச் சரிபார்க்காமல், சேர்க்கையின் போது சரிபார்க்கையில், அவர்கள் சான்றிதழ் செல்லுபடியாகவில்லை என்றால் கல்லூரியில் ஒரு இடம் நிரப்பாமல் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது" - கல்வியாளர்கள் கருத்து

Published:Updated:

MBBS: மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு; கடைசி நாள் என்ன?

"கலந்தாய்வின் போது சான்றிதழ்களைச் சரிபார்க்காமல், சேர்க்கையின் போது சரிபார்க்கையில், அவர்கள் சான்றிதழ் செல்லுபடியாகவில்லை என்றால் கல்லூரியில் ஒரு இடம் நிரப்பாமல் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது" - கல்வியாளர்கள் கருத்து

MBBS
News
MBBS

மருத்துவக் கலந்தாய்விற்குத் தகுதிபெற்றுள்ள மாணவர்கள், அரசு மற்றும் தனியார் கல்லூரிகளை வரிசைப்படி தேர்ந்தெடுப்பதற்கான கால அவகாசம் இன்று மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான மருத்துவக் கலந்தாய்வு தற்போது நடைபெற்றுவருகிறது. இதில் கலந்துகொள்ளும் மாணவர்கள், தங்கள் விருப்பத்திற்கேற்ப கல்லூரிகளைத் தேர்ந்தெடுக்கலாம். மாணவர்களின் மதிப்பெண்களுக்கு ஏற்ப அவர்களுக்கு கல்லூரிகளில் இடம் கிடைக்கும். 

இதில் மாணவர்கள் தங்கள் விருப்பக் கல்லூரிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான கால அவகாசத்தை இன்று மாலை 5 மணி வரை நீட்டியுள்ளது தமிழக மருத்துவத் தேர்வாணையம். இதன் முடிவுகள் வரும் அக்டோபர் 29ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இதற்கு அடுத்த நாள் கல்லூரியில் இடம் பெற்றதற்கான சேர்க்கைப் படிவத்தை மாணவர்கள் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு
மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு

இதுவே தனியார் கல்லூரிகளில் உள்ள மேனேஜ்மென்ட் இடங்களுக்கு விண்ணப்பத்தவர்களுக்கான முடிவுகள், அக்டோபர் 30ஆம் தேதி வெளியாகும் என்றும், மாணவர்கள் தங்கள் விருப்பக் கல்லூரிகளை அக்டோபர் 28ஆம் தேதிக்குள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்துத் தேர்வுக்குழு ஆணையர் டாக்டர் முத்துச்செல்வன் தெரிவிக்கையில், "மாணவர்களின் சான்றிதழ்களை அவர்கள் தேர்வு செய்யும் கல்லூரிகளில் சேர்க்கையின் போது சரிபார்க்கப்படும். மாணவர்களுக்கான வகுப்புகள் நவம்பர் 4ஆம் தேதி முதல் ஆரம்பிக்கப்படும்" என்று தெரிவித்தார்.

இதுகுறித்துப் பல்வேறு கல்வியாளர் மாறுபட்ட கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். "கலந்தாய்வின் போது சான்றிதழ்களைச் சரிபார்க்காமல், சேர்க்கையின் போது சரிபார்க்கையில், அவர்கள் சான்றிதழ் செல்லுபடியாகவில்லை என்றால் கல்லூரியில் ஒரு இடம் நிரப்பாமல் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது" என்று பல கல்வியாளர்கள் தெரிவித்துவருகிறார்கள்.