Published:Updated:

விபத்தில் சிக்கிய தெ.தேசம் கட்சி மூத்த தலைவர் எர்ரன் நாயுடு உயிரிழப்பு!

ஹைதராபாத்: சாலை விபத்தில் காயமடைந்த தெலுங்கு தேச கட்சி மூத்த தலைவர்  எர்ரன் நாயுடு காலமானார்.

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுவிட்டு காரில்  ஸ்ரீகாகுளம் திரும்பிக் கொண்டிருந்தார் நாயுடு.

இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் அவரது கார் பெட்ரோல் டேங்கர் லாரி  மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பலத்த காயமடைந்த எர்ரன் நாயுடு உடனடியாக மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டார்.ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று அதிகாலை 3.30 மணி  அளவில் உயிரிழந்தார்.

##~~##
4 முறை எம்.பி.யாகவும்,மத்திய ஊரக வளர்ச்சி துறை அமைச்சராகவும் பதவி  வகித்தவர் எர்ரன் நாயுடு.அவருக்கு மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள்  உள்ளனர்.
அவரது இறுதிச்சடங்கு இன்று நடைபெற உள்ளது.
எர்ரன் நாயுடு மறைவுக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் ஆழ்ந்த இரங்கல்  தெரிவித்துள்ளனர்.