Published:Updated:

`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்?'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்

எம்.குமரேசன்
`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்?'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்
`நீதிபதி மனைவியை ஏன் சுட்டேன்?'- தலைமைக் காவலர் மகிபால்சிங் வாக்குமூலம்

நாய்க்கழிவுகளைக் கூட அள்ள வைத்தனர் என்று  நீதிபதி மனைவியை சுட்டுக் கொன்ற போலீஸ்காரர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

டெல்லி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதியாக கிருஷ்ண காந்த் சர்மா என்பவர் பணிபுரிகிறார். இவரின் மனைவி ரிது கார்க் (வயது 38), மகன் துருவ் (வயது 18). இருவரையும் ஷாப்பிங் அழைத்துச் சென்ற பாதுகாப்பு போலீஸ்காரர் மகிபால்சிங் இருவர் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தினார். படுகாயமடைந்த ரிது கார்க் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

துருவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நீதிபதி மனைவியைச் சுட்ட பிறகு, அவரை போனில் அழைத்த போலீஸ்காரர் மகிபால்சிங்,' உன் மனைவியை சுட்டு விட்டேன்' என்று கூறிவிட்டு தப்பித்துள்ளார். கடந்த சனிக்கிழமை துப்பாக்கிச் சூடு நடந்த இரண்டு மணி நேரத்தில் மகிபால்சிங்கை குருகிராம்- பரிதாபாத் சாலையில் போலீஸார் கைது செய்தனர். உடனடியாக பணியில் இருந்தும் நீக்கப்பட்டார். 

போலீஸார் அவரிடத்தில் நடத்திய விசாரணையில், ``அவர்கள் பிசாசுகள். அதனால் சுட்டுக் கொன்றேன். மிகவும் அசிங்கமானவர்கள். என்னை மிகவும் மோசமாக நடத்தினார்கள். நாய்க் கழிவுகளை அகற்றக் கூட என்னைப் பயன்படுத்தினார்கள். இவர்களைப் பொறுத்த வரை நாயும் போலீஸ்காரர்களும் ஒன்று'' என்று தெரிவித்துள்ளார். 

விசாரணையின்போது மகிபால் சிங் மிகவும் ஆக்ரோஷத்துடன் இருந்துள்ளார். அதேவேளையில் மகிபால் சிங் நல்ல மனநிலையில்தான் இருக்கிறார். குருகிராமில் உள்ள போலீஸ் குடியிருப்பில் மகிபால்சிங் வசித்து வந்துள்ளார். மனைவியும் இரு மகள்களும் உள்ளனர். மகிபால்சிங்கின் குடும்பத்தாரைச் சந்திக்க போலீஸார் தடை விதித்துள்ளனர்.