‘‘இது நாடுதானா? இவரு என்ன எடப்பாடியா, ராஜபக்சேவா? என்னய்யா அப்படிக் கேட்டுட்டோம்... அந்த ஸ்டெர்லைட்ட மூடுங்கன்னு சொன்னோம். அதுக்கு இத்தனை கொலையா? அதுவும் இந்தப் பொண்ணு ஜான்சிக்கும் போராட்டத்துக்கும் என்ன சம்பந்தம்? அது புள்ளைங்களுக்கு மீன் குழம்பு ஆக்க, மீனை வாங்கிட்டு ஆட்டோவுலருந்து இறங்கியிருக்கு. பொட்டுன்னு ஒரு சத்தம். அவ்வளவுதான். மூளை சிதறி தரையில விழுந்துடுச்சு. மூணு பொட்ட புள்ளைங்களும், சின்னப் பொடியனும் இனி என்ன செய்வாக? ஏலே... நீ எவ்வளவு துட்ட வேணா குடு. அது அந்தத் தாய்க்கு ஈடாகுமால? எடப்பாடிய நான் கேக்கன்... மூளைய நீ ஒட்ட வெச்சுத் தருவியா? அந்த உயிரக் கொடுக்க முடியுமா உன்னால? உனக்கு யாரு கொடுத்த உரிமை இது? சொல்லுங்க... நீங்க சொல்லுங்க... எங்க மக்களச் சுட போலீஸுக்கு யாரு உரிமை கொடுத்தது? பாவிப் பய இப்படிச் செஞ்சுபுட்டானே... ஐயோ மாதா தாயே!”

மூதாட்டி பெலிக்கானா, போலீஸ் தடியடியில் ரத்தக் காயங்களுடன் வீங்கிப்போயிருந்த தன் கைகளை மார்பில் அடித்துக்கொண்டு அரற்றிக் கொண்டிருக்கும்போதே, நம் கைகளைப் பிடித்து அழைத்துப் போனான் அந்தச் சிறுவன்.

“ண்ணா... இங்கப் பாருண்ணா. இங்கதான் ஜான்சி அக்காவோட மூளை சிதறிக் கிடந்துச்சு” என அவன் காட்டிய இடத்தில் ரத்தக் கறை அப்படியே இருந்தது. ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன. தன் குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய அச்சமும் ஏக்கமுமாக ஜான்சி சடலமாக விழுந்துகிடந்த காட்சி, அந்தச் சிறுவனுக்கு மனக்கண்ணில் வந்து போயிருக்க வேண்டும். ஓங்கிக் குரலெடுத்து அழ ஆரம்பித்தான்.

தூத்துக்குடி மாநகரின் ஒவ்வொரு தெருவிலும் இப்படி ரத்தம் தெறித்த கதைகள் நிறைந்து கிடக் கின்றன. ரத்தம் தெறித்த கறைகளும் படிந்திருக்கின்றன. அவை இன்னும் பல ஆண்டுகளுக்கு நிறம் மாறாமல் அப்படியேதான் இருக்கும்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்துவந்த போராட்டம் 100-வது நாளை எட்டியது. அதன் பொருட்டு, மே 22-ம் தேதி ‘அறவழியில் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை’ என்ற அறிவிப்புடன் போராட்டத்தைத் தொடங்கிய ஆயிரக்கணக்கான பொதுமக்களில் பலர் இன்னும் வீடு திரும்பவில்லை. பலர் இனி நிர்ந்தரமாக வீடு திரும்பப் போவதுமில்லை. தங்கள் வளத்தையும் உயிரையும் உறிஞ்சும் ஒரு தனியார் நிறுவனத்துக்கு எதிராகப் போராடிய பொதுமக்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தி, பல பேரைக் கொன்று, பல பேரை முடமாக்கி, சுதந்திர இந்தியாவில் புதியதொரு ‘வரலாற்றை’ படைத்திருக்கிறது தமிழகக் காவல்துறை.

அமைதியான முறையில்தான் போராட்டம் தொடங்கியிருக்கிறது. ஆனால், இத்தனை மக்கள் கூடுவார்கள் என்பதைக் காவல்துறை எதிர்பார்க்க வில்லை. போராட்டத்தைத் தடுத்துக் கூட்டத்தைக் கலைத்திட காவல்துறைத் தொடர் முயற்சிகளை எடுக்கத் தொடங்குகிறது. அது கொஞ்சம் கொஞ்சமாகக் கலவரமாக மாறத் தொடங்குகிறது. காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தத் தொடங்கவும், அது உச்சத்தை எட்டுகிறது. இப்போதுவரை துப்பாக்கிச்சூடு எதன் அடிப்படையில் நடத்தப்பட்டது, யார் தந்த அனுமதியின் பேரில் நிகழ்த்தப்பட்டது என்பதற்கான பதில்கள் கிடைக்கவில்லை.

தூத்துக்குடி போராட்டத்தின் ஒவ்வொரு நிலையிலும், ஒவ்வொரு இடத்திலும், வன்முறையை ஆயுதமாக ஏந்தி, மூர்க்கத்தனமாகக் காவல்துறை செயல்பட்டது என்பதற்குப் பல ஆதாரங்களும் ரத்தச் சாட்சிகளும் இருக்கின்றன. திரேஸ்புரம் ஜான்சி ராணியின் கதை, மொத்த நிகழ்வில் சிறுதுளி மட்டுமே.

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில், கலவரத்தில் பாதிக்கப்பட்ட பல நூறு பேர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் சிவக்குமாரின் கதை இது.

‘‘கலவரத்துல ஊரே பத்திக்கிட்டு எரியுது. அங்கங்க போலீஸ்காரங்க துப்பாக்கியால சுடுறாங்கன்னு பீதி பரவிக் கிடக்கு. குண்டுச் சத்தம் கேட்டுக் குலையே நடுங்கிப் போகுது. எனக்குப் பால் வியாபாரம். கறந்த பாலை விக்கலைன்னா கெட்டுப் போயிரும். அதனால துணிஞ்சு வீட்டைவிட்டு வெளியில வந்தேன். ஆனா, நிலவரத்தைப் பார்த்து கலக்கமாயிட்டு. எப்படியாவது வீடு போய்ச் சேர்ந்தா போதும்ன்னு போய்க்கிட்டிருக்கேன். மதியம் 2.30 மணி இருக்கும். ஒரு இடத்துல போலீஸ்காரவ பத்து பேர் இருந்தாங்க. ஏதோ தீவிரவாதியைப் பிடிச்ச மாதிரி அப்படியே என்ன சுத்து போட்டாவுக. என் வண்டிய கீழ இழுத்துப் போட்டு, பால் கேனை மிதிச்சு, மொத்தப் பாலையும் ரோட்ல கொட்டிட்டு, எங்கிட்ட திரும்புனாவ. அடின்னா அடி சார்... அடிச்ச அடியில குச்சி மொத்தமா பிஞ்சு போச்சு. அப்புறம் ஒரு இரும்பு கம்பிய எடுத்து அடிச்சாவ. கை மொத்தமா காலியாயிட்டு. வலி உசுரு போகுது. துடிச்சுக் கிடக்கன்.

அந்த நேரத்துல என் பாக்கெட்லருந்து செல்போனை எடுத்தாரு ஒரு போலீஸ்காரரு. அதத் திரும்பக் கேட்டதுதான்... அதுக்கும் ஒரு அடி அடிச்சானுவளே. ஐயோ சாமி. அங்கனயே செத்துருவம்னு பயந்தேன். எந்தச் சாமி காப்பாத் துச்சுன்னு தெரியில... மொடமா கிடந்தாலும், இப்ப உயிராவது மிச்சமிருக்கு. என் நண்பன் ஒருத்தன்... சுகுமார்னு பேரு. போராடவெல்லாம் போகல அவன். பயந்த சுபாவம். ரோட்ல ஓரமா போன அவன் மேல ஷூட்டிங்க போட்டானுவ. இப்போ திருநெல்வேலி ஆஸ்பிட்டல்ல கிடக்கான். வயித்துக்குக் கீழ, தொடைக்கு மேல குண்டு தொலைச்சிடுச்சு. பிழைப்பானான்னு தெரியில. இவங்க வெளியில சொல்ற கணக்கெல்லாம் கம்மி... கொள்ளைப் பேர கொன்னு போட்ருக் கானுவ. அந்தக் கணக்கு யாருக்கும் தெரியாது. நாங்க என்னய்யா பண்ணோம்? என்ன குத்தத்த பண்ணிட்டோம்?’’ என்று கண்ணீருடன் கேட்கும் சிவக்குமாருக்கு யாரிடமும் பதில் இல்லை.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எல்லோருமே சாமானிய மக்கள். இரக்கமற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த, மிருகத்தனமான தாக்குதலில் படுகாயமடைந்த பெரும்பாலானவர்கள் தினக்கூலிகள் மற்றும் வாரக் கூலிகள். திடீரெனத் தங்கள் வாழ்வில் ஏற்பட்ட இந்தக் கொடூர சம்பவத்தால், பலரின் குடும்பங்களும் நிலைகுலைந்து போயிருக்கின்றன.

தூத்துக்குடியில் ரத்தம் குடித்த போலீஸாரின் ரத்தத் தாகம் தீர்ந்ததாகத் தெரியவில்லை. துப்பாக்கிச்சூடு தொடர்ந்து நடக்கிறது. மக்களை அத்தியாவசியத் தேவைகளுக்காகக்கூட வீதிக்கு வரவிடாமல், எதிரிகள் போன்று அடித்து விரட்டுகிற கொடுமையும் நடக்கிறது. கிராமம் கிராமமாகச் சென்று தேடுதல் வேட்டையும் நடக்கிறது. சிலர் சட்டத்திற்குப் புறம்பாகக் கைது செய்யப்பட்டு போலீஸாரின் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டும் வருகின்றனர்.

கலவரத்தின் இரண்டாம் நாள். முதல் நாள் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் அதுவரை இறந்திருந்ததாகச் சொல்லப்பட்டது. பாதிக்கப் பட்டவர்களைச் சந்திக்க பல அரசியல் கட்சித் தலைவர்களும் தூத்துக்குடி அரசு மருத்துவ மனைக்கு வந்துகொண்டிருந்த சமயம். இறந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனை செய்யப்படுவதை அறிந்து மக்கள் அங்கு கூடியிருந்தனர். வந்திருந்த தலைவர்களிடம் தங்கள் குறைகளை மக்கள் கூறிக் கொண்டிருந்தனர். தலைவர்கள் அங்கிருந்து நகர்ந்ததும், மக்களை அப்புறப்படுத்த காவல்துறை நினைத்தது. ஆனால், மக்கள் கூட்டம் கலையவில்லை. முதல் வரிசையில் இருக்கும் காவலர்கள், தங்களுக்குப் பின்னால் இருக்கும் காவலர்களுக்கு ரகசியமாக சிக்னல் செய்கிறார்கள். உடனே அவர்கள், கூட்டத்தில் காவல்துறைக்கு எதிராகக் கோஷம் போடுபவர்களைத் தங்கள் மொபைலில் படம் பிடிக்கிறார்கள்.

சில நிமிடங்கள். காவல்துறை தடியடியைத் தொடங்குகிறது. குறிப்பாக, தங்கள் மொபைலில் படம் பிடித்தவர்களைக் குறிவைத்துத் துரத்துகிறது ஒரு போலீஸ் கூட்டம். ஏதோ ஓர் இடத்தில் அவர்களை முடக்குகிறார்கள். எங்கே அடி விழுகிறது, எத்தனை பேர் அடிக்கிறார்கள் என்ற கணக்கெல்லாம் இல்லாத காட்டு மிரண்டித்தனமான தாக்குதல். ஓர் இடத்தில் 16 வயது சிறுவனைச் சூழ்ந்துகொண்டு 10 காவலர்கள் தாக்குகிறார்கள். இந்தச் சூழல் சற்றும் புரியாமல் அப்பாவித்தனமாகத் தன் வாகனத்தில் அந்தச் சாலையைக் கடக்கும் ஒருவரை இழுத்துப் போட்டு அடிக்கிறார்கள். திடீரெனத் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்கிறது.

ஒரு காவல்துறை உயரதிகாரி வந்து, ‘‘யார்மீதோ இருக்கும் கோபத்தை ஏன் சிறுவனிடம் காட்டுகிறீர்கள்?” என்று கோபத்துடன் அந்தக் காவலர்களிடம் சொல்லிவிட்டு நகர்கிறார். அந்தச் சிறுவனை அடித்துக்கொண்டிருந்த காவலர் கூட்டம் அதன்பிறகே ஓய்ந்து நகர்கிறது. அடித்த அடியில் ரத்தம் ஒழுக, ரோட்டோரத்தில் நகர முடியாமல் சுருண்டு கிடந்தான் அந்தச் சிறுவன். இதற்கான முழு வீடியோ ஆதாரம் விகடனிடம் இருக்கிறது.

இந்தச் சம்பவம் நடந்து ஒரு மணி நேரத்துக் குள்ளாகவே, அரசு மருத்துவமனைக்கு மிக அருகிலிருக்கும் அண்ணா நகர் பகுதியில், மதிய உணவுக்கு வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த 22 வயது இளைஞன் காளியப்பனைச் சுட்டு வீழ்த்தியது காவல்துறை. உடனடியாகக் காளியப்பனின் சடலம் பிணவறைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அவருக்கு என்ன ஆனது என்பதே தெரியாமல், பதற்றத்துடன் அரசு மருத்துவமனைக்கு வந்தது அவரின் குடும்பம். மருத்துவமனை முழுவதும் நூற்றுக்கணக்கான காக்கிகளால் நிறைந்திருக்க, பல மணி நேரம் என்ன நடக்கிறது என்பதே அவர்களுக்குப் புரியவில்லை. கோபத்தை மனதுக்குள் புதைத்துக்கொண்டு, பரிதவிப்புடன் காளியப்பனைத் தேடிய அவர்களுக்கு யாரும் சரியான விளக்கத்தைக் கொடுக்கவில்லை. நீண்ட நேரம் கழித்து அவர்களுக்கு “காளியப்பனுக்கு வயிற்றுப் பகுதியில் குண்டு பாய்ந்திருக்கிறது. மருத்துவமனைக்குக் கொண்டுவருவதற்கு முன்பே அவர் இறந்துவிட்டார்’’ என்ற தகவல் தெரிவிக்கப்பட்டது. மொத்தக் குடும்பமும் போலீஸ்காரர்களின் கூட்டத்துக்கு நடுவே புகுந்து அமைதியாகப் பிணவறையை நோக்கி நடந்தது. பிணவறையின் வாசலைத் தொட்டதும், எவ்வளவு கட்டுப்படுத்தியும் முடியாமல் வெடித்துவிட்டார் காளியப்பனின் அம்மா, ‘‘ஐயோ விஜி... (காளியப்பனின் செல்லப் பெயர்) சாப்பிடத்தானடா வர்றேன்னு சொன்ன. இங்க வந்து என்னடா பண்ற? வந்துட்றா விஜி... போயிடலாம். வந்துட்றா... ஐயோ!” என்று அவர் கதறிய கதறலில் அங்கிருந்த சில பெண் போலீஸாரே கண்ணீர் விட்டனர். சற்றுத் தள்ளி நின்று கொண்டிருந்த சில போலீஸார் துப்பாக்கிகள் ஏந்திய நிலையில் ஏதோ சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

அவர்களை நோக்கிப் பெரும் குரலெடுத்து கத்தினார் காளியப்பனின் அண்ணன். “அரக்கனுங்களா... எங்கள மட்டும் எதுக்குடா விட்டு வச்சிருக்கீங்க? அந்தத் துப்பாக்கிய எடுத்து சுடுங்கடா... சுட்டு இதோ இங்கேயே என் தம்பி பக்கத்துலயே என்னையும் போட்டுடுங்கடா. என்னடா பாவம் பண்ணோம் நாங்க? எதுக்குடா இத்தன உசுர கொன்னீங்க? ஸ்டெர்லைட்டு கேன்சர் கொடுத்துக் கொல்றான்... நீங்க துப்பாக்கியை வச்சு கொல்றீங்க. அதுக்கு ஒரேயடியா எங்க மொத்த ஊரையும் குண்டு போட்டு அழிச்சிடுங்க...” என்று அவர் கோபமும் ஆற்றாமையுமாகக் கதறியது, மயான அமைதியுடன் இருந்த மருத்துவமனையின் அத்தனை திசைகளிலும் எதிரொலித்தது.

அந்தக் கதறல், சென்னையில் பூப்புனித நீராட்டு விழாவில் பங்கேற்ற முதல்வருக்கும் துணை முதல்வருக்கும், மங்கள இசையைக் கடந்து காதுகளில் நிச்சயம் விழுந்திருக்க வாய்ப்பில்லை.

- இரா.கலைசெல்வன், தமிழ்ப்பிரபா
ஓவியம்: பிரேம் டாவின்சி
படங்கள்: எல்.ராஜேந்திரன், ஏ.சிதம்பரம், ஆர்.எம்.முத்துராஜ்