‘‘ஈரமும், உணர்வுமுள்ள ஒட்டுமொத்த இதயங்களையும் நொறுக்கியுள்ளது தூத்துக்குடியில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூடு. ‘ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுங்கள்’ என்று தங்கள் உரிமைக்காகப் போராடிய சொந்த மக்கள் மீதுதான் பயங்கரவாதத் தாக்குதலை நிகழ்த்தியுள்ளது மனிதநேயமற்ற மாநில அரசு” என மிகக் காட்டமாக விமர்சிக்கிறார் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன். அவரைச் சந்தித்து, தூத்துக்குடி துயரங்கள் குறித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

‘‘தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் சட்ட விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறதே?”

‘‘இது, வெள்ளைக்காரன் போட்ட சட்டம். இதில், தண்ணீர் பீய்ச்சி அடிக்கணும், லேசான தடியடி நடத்தணும், வானத்தை நோக்கிச் சுடணும் எனச் சில விதிமுறைகள் வகுத்துருக்காங்க. அவர்களின் நோக்கம் கூடிய கூட்டத்தைக் களைந்துபோக வைப்பதுதானே ஒழிய, சுடுவதல்ல. ஆனால், இங்கே என்ன நடந்தது? ஃபைபர் தடிகளாலும், சில இடங்களில் இரும்பு ராடுகளாலும் கொடூரத் தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர். குறிபார்த்துச் சுட்டுள்ளனர். சட்டவிதிகள் எல்லாம் இருக்கட்டும், என்னைப் பொறுத்தவரை ஒரு ஜனநாயக அரசு, சொந்த மக்களைச் சுடவே கூடாது. அமெரிக்கா, ஐரோப்பா, கனடா என எங்கும் இதுபோலச் சொந்த நாட்டு மக்கள்மீது கொடூரமான துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில்லை.”

‘‘கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவர, தவிர்க்க முடியாமல் இவ்வாறு நடந்துகொண்டோம், போராட்டத்தில் தீவிரவாதக்குழுக்கள் ஊடுருவிவிட்டார்களெனக் காவல்துறை விளக்கம் அளித்துள்ளதே?”

‘‘இதைத்தான் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போதும் முன்வைத்தனர். வழக்கமாகக் காவல்துறை சொல்லும் சப்பைக்கட்டுதான் இது. தங்களின் கார்ப்பரேட் விசுவாசத்தை மறைக்க, புரளிகளை அரசு பரப்பிவிடுகிறது. அலுவலகத்திற்குள் உண்ணாவிரதம் இருப்பவர்கள், இழவு வீட்டுக்குத் துக்கம் விசாரிக்கச் சென்ற வேல்முருகன் என உரிமைக்காகப் போராடும் அனைவரையும் கைது செய்கிறார்கள். அப்படியென்றால், இந்த அரசுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை. அரசே வன்முறையில் ஈடுபடுகிறது என்றே அர்த்தம். இது, கார்ப்பரேட் நலன்களுக்கான அரசு. அதனால்தான், சொந்த மக்களைக் கொல்கிறது.”

“துப்பாக்கிச்சூடு நடந்தபோது, நான் ஆய்வுக் கூட்டத்தில் ஆய்வுப் பணியில் இருந்தேன் என முதல்வர் கூறியுள்ளாரே?”

‘‘பிரதமர் மோடியோ, அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச்சூட்டுக்கு வருத்தம் தெரிவிக்கிறார். சொந்த மக்கள் கொல்லப்பட்டதற்கு வாய்மூடி மௌனியாக இருக்கிறார். எடப்பாடி பழனிசாமியோ, ஏதோ தனக்கு எதுவுமே தெரியாது என்பதுபோல நடந்துகொள்கிறார். நான் கேட்கிறேன், துப்பாக்கிச்சூடு நடந்தபோது, அவர் என்ன செய்துகொண்டிருந்தார்?

மேலும், 144 தடை உத்தரவு இருந்ததால், சட்டத்தை மதித்து நான் அங்கே செல்லவில்லை என்கிறார். அது கலெக்டர் போட்ட உத்தரவு. முதல்வர் அதிகாரத்தின் மூலம் இவரால் அதை ரத்து செய்ய முடியாதா? மேலும், இதன் மூலம் கூட்டமாகத்தான் போக முடியாதே ஒழிய, தனியாக நடமாடத் தடையில்லை. யாரை ஏமாற்ற முயற்சி செய்கிறீர்கள்? இத்தனை கொடூரங்களுக்கும் காரணம் 144 தடை உத்தரவு. அதற்குக் காரணம் உயர் நீதிமன்றம்.”

‘‘எந்த அடிப்படையில் இவ்வாறு கூறுகிறீர்கள்?”

‘‘உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஸ்டெர்லைட் தாக்கல் செய்த ரிட் மனுவில், ‘22-ம் தேதி, 100-வது நாள். அன்று வன்முறை வெடிக்க வாய்ப்பு உண்டு’ என்று கூறியிருந்தது. அதில், 18.5.18 அன்று இறுதி உத்தரவு வழங்கிய உயர் நீதிமன்றம், ‘அங்கே வன்முறை வெடிக்கலாம் என எதிர்பார்க்கிறோம். எனவே, அங்கே 144 தடை உத்தரவை அமல்படுத்துங்கள்’ என அரசுக்கு நீதிபதி பரிந்துரை செய்கிறார். நான் கேட்கிறேன், இவ்வாறு நடக்கும் என்று முன்கூட்டியே எப்படி நீதிபதிக்குத் தெரியும்? அவரென்ன ஜோதிடம் தெரிந்தவரா? ஸ்டெர்லைட் போட்ட வழக்கில், ஒரு வாதியாக, போராட்டக் குழுவைச் சேர்க்காமல், இப்படி ஒரு பரிந்துரையை வழங்கியுள்ளது நீதிமன்றம். இதேபோல, ஸ்டெர்லைட்டுக்கு எதிராகச் சாதாரண மக்கள் ஒரு வழக்கு போட்டால், ஸ்டெர்லைட்-டிடம் கருத்துக் கேட்காமல் இப்படி ஓர் உத்தரவை நீதிமன்றம் வழங்கிவிடுமா? ஸ்டெர்லைட்டின் குரலையே நீதிமன்றம் ஒலிக்கிறது. அது மக்களின் கருத்தைக் கேட்கவேயில்லை.”

“நீதித்துறையைச் சார்ந்த நீங்களே நீதிமன்றத்தை இவ்வாறு விமர்சிக்கலாமா?”

‘‘ஏன் கூடாது? இங்கே என்ன பிரிட்டிஷ் ராஜ்ஜியம், ஹிட்லர் ராஜ்ஜியமா நடக்கிறது? உண்மையைச் சொல்ல ஜனநாயகத்தில் உரிமை உண்டு. 144 தடை உத்தரவு போடாமல் இருந்திருந்தால், மக்கள் தங்கள் உணர்வை அமைதியாக வெளிப்படுத்திவிட்டுச் சென்றிருப்பார்கள். 99 நாள்களாக அப்படித்தானே அமைதியாக நடந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர், ‘குடிமை சமூகம் விழிப்பு உணர்வுடன் இருந்து நாடாளுமன்ற, சட்டமன்ற, நீதித்துறை, அதிகாரத் துறைகளைக் கண்காணிக்க வேண்டும். இல்லையேல், சட்ட உரிமைகள் காக்கப்படும்’ என்று கூறியிருப்பதைப் பொருத்திப் பார்த்துக்கொள்ள வேண்டும்.”

‘‘ஒய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை கமிஷனை அரசு அமைத்துள்ளதே?”

‘‘இதன்மீது நம்பிக்கை இல்லை. பொதுவாகவே விசாரணை கமிஷனால் அரசுக்குப் பரிந்துரைதான் செய்ய முடியுமே ஒழிய, உத்தரவு போட இயலாது. இதுவரை விசாரணை கமிஷன்களின் எந்தப் பரிந்துரைகளை அரசு ஏற்று நடத்தியுள்ளது என்று சொல்லுங்களேன் பார்க்கலாம். எல்லாம் கண்துடைப்பு.”

‘‘தமிழ்நாடு அரசு தற்போது ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கும் மின்சாரத்தைத் துண்டித்துள்ளதே. ஸ்டெர்லைட் ஆலையை மூட முடிவெடுத்துள்ளதே?”

‘‘ஒப்பந்தம் முடிந்ததால், 01.04.2018-லிருந்தே ஸ்டெர்லைட் மூடப்பட்டதாகத்தான் கூறப்படுகிறது. அப்படியென்றால், நீங்கள் அப்போதே மின்சாரத்தைத் துண்டித்து இருக்கலாமே. மேற்கொண்டு ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டுவிடக் கூடாது என்றும், மறைமுகமாக இயங்கிவருவது நிறுத்தப்பட வேண்டும் என்றும் மக்கள் இம்முறை தொடர் போராட்டங்களில் ஈடுபட்டார்கள். தற்போது கூட, சட்ட அனுமதி பெற்று இயங்கப்போவதாக வேதாந்தா குழுமம் சொல்கிறது. எனவே, மக்களை முட்டாளாக்க அரசு நினைக்கக் கூடாது. உண்மையில் அக்கறை இருந்தால், 1986 Ecology Sensitive Area எனத் தமிழ்நாடு சுற்றுச்சூழல் வனத்துறை அரசாணை ஒன்றைப் போட்டுள்ளது. அதேபோல மேலும் இரு அரசாணைகளை மத்திய, மாநில அரசுகள் பதிவு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் முன்பே தெரிவித்துள்ளது. அவ்வாறு செய்தால், நிரந்தரமாக ஸ்டெர்லைட்டை மூட வாய்ப்பு உண்டு. ஆனால், இந்த கார்ப்பரேட் நலன் அரசுகள் அதைச் செய்யுமா என்பது மிகப்பெரிய கேள்வி. தற்போது புலம்பெயர் தமிழர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒருங்கிணைந்து உரிமைக்காகப் போராடியதுபோல் போராடினால் நிச்சயமாக நிரந்தத் தீர்வு அமையும்.”

- சே.த.இளங்கோவன்.