Published:Updated:

பிரபல இந்திப் பாடகி சம்ஷத் பேகம் காலமானார்

பிரபல இந்திப் பாடகி சம்ஷத் பேகம் காலமானார்
பிரபல இந்திப் பாடகி சம்ஷத் பேகம் காலமானார்
பிரபல இந்திப் பாடகி சம்ஷத் பேகம் காலமானார்

மும்பை: பிரபல இந்தி சினிமாப் பாடகி சம்ஷத் பேகம் மும்பையில் காலமானார்.

94வயதான சம்ஷத் பேகம், கடந்த சில மாதங்களாக உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு காலமானதாக சம்ஷத் பேகத்தின் மகள் உஷா கூறினார்.

1919 ஏப்ரல் 14 ம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பிறந்தவர் சம்ஷத் பேகம். 1947 டிச.16 ல் பாகிஸ்தானின் பெஷாவர் வானொலியில் குரல் கொடுத்து பலரின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டார். மேரே பியா கயே ரங்கூன்”, “கபி ஆட் கபி பார்", "கஜ்ரா மஹ்பூத் வாலா" என்பது உள்ளிட்ட பிரபலப் பாடல்களைப் பாடியவர் இவர்.

இவரது கணவர் கண்பத் லால் பட்டோ 1955ல் காலமான பிறகு தனது மகள் உஷா ரத்ரா மற்றும் மருமகனுடன் மும்பையில் வசித்து வந்தார்.