Published:Updated:

திருச்சியை அதிர வைக்கும் திக் திக் கொலைகள்!

திருச்சியை அதிர வைக்கும் திக் திக் கொலைகள்!
பிரீமியம் ஸ்டோரி
திருச்சியை அதிர வைக்கும் திக் திக் கொலைகள்!

திருச்சியை அதிர வைக்கும் திக் திக் கொலைகள்!

திருச்சியை அதிர வைக்கும் திக் திக் கொலைகள்!

திருச்சியை அதிர வைக்கும் திக் திக் கொலைகள்!

Published:Updated:
திருச்சியை அதிர வைக்கும் திக் திக் கொலைகள்!
பிரீமியம் ஸ்டோரி
திருச்சியை அதிர வைக்கும் திக் திக் கொலைகள்!

புதுக்கோட்டை மாவட்ட வேளாண் தனி அலுவலரான பூபதி கண்ணன், புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேசனின் நண்பர். இருவரும் ஒன்றாகப் படித்தவர்கள். பூபதி கண்ணனின் மனைவி அனுராதா, திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் செயற்பொறியாளராகப் பணிபுரிகிறார். பூபதி கண்ணன், ஜூலை 28-ம் தேதி, திருச்சி மாத்தூர் ரிங்க் ரோடு அருகேயுள்ள காட்டுப்பகுதியில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவர் சென்றிருந்த காரில் பெண் உள்ளாடைகள் இருந்துள்ளன. தன் அலுவலகத்தில் பணிபுரியும் டைப்பிஸ்ட் சவுந்தர்யா என்பவருடன் பூபதி கண்ணன் பழகிவந்தது விசாரணையில் தெரியவந்தது. அதையடுத்து, சவுந்தர்யாவும், சக ஊழியர் சுந்தரும் போலீஸாரின் விசாரணை வளையத்துக்குள் வந்தனர்.

திருச்சியை அதிர வைக்கும் திக் திக் கொலைகள்!

இது குறித்து போலீஸ் வட்டாரத்தில் பேசியபோது, “சவுந்தர்யாவுக்கும் லால்குடியை அடுத்த பெருவளநல்லூரைச் சேர்ந்த வேளாண்துறை அலுவலர் சுரேஷுக்கும் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு முன்பு சவுந்தர்யா ஒருவரைக் காதலித்துள்ளார். திருமணத்துக்குப் பிறகும் அவர்களின் காதல் தொடர்ந்துள்ளது. அதனால், சுரேஷ் தற்கொலை செய்துகொண்டார். சவுந்தர்யாவுக்கு வேளாண் துறையில் கருணை அடிப்படையில் டைப்பிஸ்ட் வேலை கிடைத்தது. திருச்சி நவல்பட்டு அண்ணா நகருக்குத் தன் இரு குழந்தைகளுடன் குடிபெயர்ந்தார் சவுந்தர்யா. திருச்சியிலிருந்து புதுக்கோட்டைக்கு காரில் செல்லும் பூபதி கண்ணன், சவுந்தர்யாவை ‘பிக் அப்’ செய்வது வழக்கம். அந்தப் பழக்கம் நெருக்கமாகி, சவுந்தர்யாவுக்கு சகலமும் செய்துகொடுத்தார் பூபதி கண்ணன். சவுந்தர்யாவோ, தன்னுடன் பணியாற்றும் சுந்தருடன் தொடர்பில் இருந்துள்ளார். அதை, பூபதி கண்ணன் கண்டித்துள்ளார். சம்பவத்தன்று, அந்தக் காட்டுப் பகுதிக்குச் சென்று காரை நிறுத்திவிட்டு பூபதி கண்ணனும் சௌந்தர்யாவும் தனிமையில் இருந்துள்ளனர். அப்போது, பூபதி கண்ணன் கொலை செய்யப்பட்டார். மர்ம நபர் ஒருவர் கத்தியைக் காட்டி தன்னை மிரட்டித் துரத்திவிட்டு, அவரைக் கொலை செய்தார் என்று சவுந்தர்யா சொல்கிறார்’’ என்றனர்.

இதேபோல இன்னொரு கொலை... பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500-க்கு 498 மதிப்பெண்கள், பிளஸ் 2 பொதுத் தேர்வில் 1200-க்கு 1,183 மதிப்பெண்கள் எடுத்த திருச்சியைச் சேர்ந்த ஈஸ்வரி, சென்னையில் சி.ஏ தேர்வுக்காகப் படித்துவந்தார். இத்தனை அறிவார்ந்த பெண், கொலையாளியாக மாறினார் என்பது பெரும் அதிர்ச்சிக்குரிய செய்திதான். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருச்சியை அதிர வைக்கும் திக் திக் கொலைகள்!

லாரி டிரைவரின் மகளான ஈஸ்வரி, சிறுவயதில் தாயை இழந்தவர். சி.ஏ படித்தபடி, குடும்ப வறுமை காரணமாக ஓர் ஆடிட்டர் அலுவலகத்தில் வேலை செய்துவந்தார். விடுமுறை நாளில் சொந்த ஊரான திருச்சிக்கு ரயிலில் வந்துசென்ற அவருக்கு, அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி பகுதியைச் சேர்ந்த பிஸியோதெரபிஸ்ட் விஜயகுமார் அறிமுகமானார். அந்தப் பழக்கம் தன் வாழ்க்கையையே சீரழிக்கும் என்பதை ஈஸ்வரி அறிந்திருக்கவில்லை.

ஜூலை 12-ம் தேதி ஸ்ரீரங்கம் போலீஸாரிடம் ஈஸ்வரி அளித்த வாக்குமூலம்... ‘‘விஜயகுமார், சென்னை அரும்பாக்கம் பகுதியில் தங்கியிருப்பதாகவும், நுங்கம்பாக்கம் மருத்துவமனை ஒன்றில் வேலை செய்தாகவும் கூறினார். எனக்கு உதவி செய்வதாகச் சொல்லி, என் செல்போன் நம்பரை வாங்கினார். தொடர்ந்து போனில் பேச ஆரம்பித்தார். ஒருநாள் எனக்கு உடல்நிலை சரியில்லாதபோது, அவர் வேலை செய்த மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சையளித்தார். அப்போது, மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தைக் கொடுத்து என்னைச் சீரழித்துவிட்டார். இதை உணர்ந்த நான் அவரிடம் சண்டை போட்டேன். என்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறிச் சமாதானப்படுத்தினார்.

ஆனால், அவருக்கு ஏற்கெனவே திருமணமாகி, இரண்டு குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. அதனால், நான் விடுதியை மாற்றிவிட்டு, படிப்பில் கவனம் செலுத்தினேன். அவர், விடாமல் என்னைத் தொந்தரவு செய்தார். என் நிர்வாண வீடியோவை வைத்திருப்பதாகவும், அவரின் இச்சைக்குப் பணியவில்லையென்றால், அந்த வீடியோவை ஃபேஸ்புக்கில் வெளியிடுவேன் என்றும் மிரட்டினார். தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தேன். இவ்வளவு கஷ்டப்பட்டுப் படித்துவிட்டு, வாழ்க்கையைத் தொலைத்த வலியை என்னால் தாங்கமுடியவில்லை. அதனால், முதலில் விஜயகுமாரைக் கொல்ல நினைத்தேன். திருச்சி காவிரிக்கரைப் பகுதிக்கு அவரை அழைத்துவந்து, அவரின் நண்பர்கள் மூலம் தீர்த்துக்கட்டினேன்.’’

திருச்சியை அதிர வைக்கும் திக் திக் கொலைகள்!

இந்த இரு கொலைகள் மட்டுமல்ல. திருச்சி வட்டாரத்தில் கடந்த 40 நாள்களில் இதேபோன்ற மேலும் சில கொலைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. திருச்சி கணவனூரைச் சேர்ந்த டிப்ளமோ இன்ஜினீயர் விஜய், திருச்சி சோமரசம்பேட்டை அங்குராஜ், துவரங்குறிச்சியை அடுத்த தச்சமலை வனப் பகுதியில் 3-வது கணவரால் கொலை செய்யப்பட்ட மலர்க்கொடி, திருச்சி ஸ்ரீரங்கம் மேலூரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ஆண்டவர், கோவில்பட்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்த சூர்யா எனப் பல கொலைகள் நடந்தேறியுள்ளன.

இதுகுறித்து மத்திய மண்டல காவல்துறை ஐ.ஜி வரதராஜுவிடம் கேட்டோம். “பூபதி கண்ணன் கொலை வழக்கில், அவருடன் பணிபுரிந்த சவுந்தர்யாவை விசாரித்து வருகிறோம். கொலை தொடர்பாக முக்கியமான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. விரைவில் குற்றவாளி கைது செய்யப்படுவார். பாதுகாப்பு இல்லாத பகுதிகளில் போலீஸார் ரோந்து பணிகளில் ஈடுபடுகிறார்கள். உப்பிலியாபுரம், துவரங்குறிச்சி, மாத்தூர் போன்ற பகுதிகளில் நிகழ்ந்த கொலைகளுக்கு தகாத உறவுகளே காரணம்” என்றார்.

- சி.ய.ஆனந்தகுமார்
படங்கள்: என்.ஜி.மணிகண்டன், தே.தீட்ஷித்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism