Published:Updated:

எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: நாடாளுமன்றம் காலவரையின்றி ஒத்திவைப்பு

எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: நாடாளுமன்றம் காலவரையின்றி ஒத்திவைப்பு
எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: நாடாளுமன்றம் காலவரையின்றி ஒத்திவைப்பு
எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: நாடாளுமன்றம் காலவரையின்றி ஒத்திவைப்பு

புதுடெல்லி: எதிர்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 2 தினங்களுக்கு முன்னதாகவே தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி கூடியது. ஆனால் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு, நிலக்கிரி சுரங்க முறைகேடு பிரச்சினைகளால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கியது.

இந்நிலையில் நிலக்கரி சுரங்க விசாரணை அறிக்கையை சட்ட அமைச்சர் அஸ்வினி குமாரும், பிரதமர் அலுவலக அதிகாரிகளும் திருத்திய விவகாரம், ரயில்வே வாரிய உறுப்பினர் இடமாறுதலுக்கு ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சாலின் உறவினர் லஞ்சம் வாங்கிய விவகாரம் மேலும் புயலை கிளப்பியது.

இதனைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங், சட்ட அமைச்சர் அஸ்வினி குமார், ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பா.ஜனதா கோரிக்கை விடுத்து நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் முடக்கினர். இன்றும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இதே பிரச்னையால் பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. அதன்பிறகு அவை 12 மணிக்கு கூடியபோதும் அதே நிலையே காணப்பட்டது.

##~~##
இதையடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூட்டத்தொடர் முடிவடைவதற்கு 2 நாட்களுக்கு முன்பே மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.