Published:Updated:

மக்காச்சோளத்தைக் காக்க போடப்பட்ட மின்வேலி - பரிதாபமாக பலியான மக்னா யானை

மக்காச்சோளத்தைக் காக்க போடப்பட்ட மின்வேலி - பரிதாபமாக பலியான மக்னா யானை
மக்காச்சோளத்தைக் காக்க போடப்பட்ட மின்வேலி - பரிதாபமாக பலியான மக்னா யானை
மக்காச்சோளத்தைக் காக்க போடப்பட்ட மின்வேலி - பரிதாபமாக பலியான மக்னா யானை

ஈரோடு மாவட்டம், கடம்பூர் மலைப்பகுதியில் விவசாய நிலத்தில் இருந்த மின்வேலியில் சிக்கி, 20 வயதான மக்னா யானை உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஈரோடு மாவட்டம், கடம்பூர் மலைப்பகுதியிலுள்ள பசுவனாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஹென்றி ராபர்ட். இவருக்குச் சொந்தமான 10 ஏக்கர் விவசாய நிலத்தை, கரளயம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்திருக்கிறார். குத்தகைக்கு எடுத்த நிலத்தில் ராஜேந்திரன் மூன்றரை ஏக்கரில் மக்காச்சோளத்தைப் பயிரிட்டிருக்கிறார். காட்டுப்பன்றியாலும், வன விலங்குகளாலும் பயிர்கள் சேதமடைவதால், வயலைச் சுற்றிலும் ராஜேந்திரன் மின்வேலி அமைத்திருக்கிறார்.

நேற்று கடம்பூர் மலைப்பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த மழையால், அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. அந்தநேரம் பார்த்து ராஜேந்திரனின் தோட்டத்துக்குள் சுமார் 20 வயதான மக்னா யானை ஒன்று நுழைந்திருக்கிறது. வயலினுள் மக்காச்சோளத்தைச் சாப்பிட்டுவிட்டு யானை வெளியேறிய நேரத்தில், மின்சாரம் வந்திருக்கிறது. மின்வேலியில் தடுக்கி விழுந்த யானை, மின்சாரம் தாக்கியதில் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது.

மக்காச்சோளத்தைக் காக்க போடப்பட்ட மின்வேலி - பரிதாபமாக பலியான மக்னா யானை

விடியற்காலை அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள், விஷயத்தை வனத்துறைக்குத் தெரிவித்திருக்கின்றனர். அதையடுத்து மருத்துவருடன் சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், உயிரிழந்த யானைக்கு பிரேதப் பரிசோதனை செய்தனர். பிரேதப் பரிசோதனையில், யானை மின்சாரம் தாக்கியதால் தான் உயிரிழந்தது என்பது தெரியவந்திருக்கிறது. அதையடுத்து, நிலத்தில் மின்வேலி அமைத்த விவசாயி ராஜேந்திரனை போலீஸார் கைது செய்தனர்.

விவசாய நிலத்துக்குள் புகும் வன விலங்குகளை எப்படிக் கையாள்வது, என்ன மாதிரியான பாதுகாப்பு வசதிகளைச் செய்வது போன்றவற்றை மலைவாழ் பழங்குடியினருக்கு, வனத்துறையினர்தான் புரியவைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதுவரை, இதுபோன்ற யானைகள் இறப்பு தொடர்ந்துகொண்டேதான் இருக்கும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். 

Vikatan